முதல்முறையாக இந்தியாவில் தரிசனம் கொடுத்த 300சிசி பிஎம்டபிள்யூ பைக்!

பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக்கின் ஸ்பை படங்கள் வெளியாகி உள்ளன.

By Saravana Rajan

விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கும் புதிய பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக்கின் ஸ்பை படங்கள் வெளியாகி உள்ளன. படங்களையும், தகவல்களையும் காணலாம்.

முதல்முறையாக பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் பைக் இந்தியாவில் தரிசனம்!

விலை உயர்ந்த பைக் மாடல்களை விற்பனை செய்து வரும் பிஎம்டபிள்யூ நிறுவனம் டிவிஎஸ் கூட்டணியில் ஆரம்ப ரக ஸ்போர்ட்ஸ் பைக் தயாரிப்பிலும் இறங்கி இருக்கிறது. இந்த கூட்டணியில் உருவான பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் பைக் ஓசூரில் உற்பத்தி செய்யப்படுகிறது.

 முதல்முறையாக பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் பைக் இந்தியாவில் தரிசனம்!

வெளிநாடுகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இந்தியாவிலும் விற்பனைக்கு எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த பைக் அறிமுகம் தள்ளிப் போடப்பட்டு வருகிறது. சோதனை ஓட்டங்களின்போது ஸ்பை படங்கள் மூலமாகவே இதுவரை தரிசனம் தந்து வந்தது.

 முதல்முறையாக பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் பைக் இந்தியாவில் தரிசனம்!

இந்த நிலையில், பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக்கின் தயாரிப்பு நிலை மாடல் பைக்குகள் கர்நாடக மாநிலம், சிக்மகளூரில் தற்காலிக பதிவு எண்ணுடன் எடுத்து வரப்பட்டுள்ளன. அவற்றை பைக் ஆர்வலர் ஒருவர் படம் பிடித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

 முதல்முறையாக பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் பைக் இந்தியாவில் தரிசனம்!

வெளிநாடுகளில் விற்பனைக்கு செல்லும் அதே சிறப்பம்சங்கள் கொண்ட மாடல்தான் இந்தியாவிலும் விற்பனைக்கு வர இருப்பது இந்த ஸ்பை படங்கள் மூலமாக தெரிய வருகிறது.

 முதல்முறையாக பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் பைக் இந்தியாவில் தரிசனம்!

வரும் டிசம்பர் 6ந் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கும் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கில் பொருத்தப்பட்டு இருக்கும் அதே 313சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின்தான் இந்த பைக்கிலும் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 33.5 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

 முதல்முறையாக பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் பைக் இந்தியாவில் தரிசனம்!

ஸ்பை படங்களில் பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக்கில் முன்புறத்தில் அப்சைடு டவுன் ஃபோர்க்குகள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. டிஸ்க் பிரேக் மற்றும் ஏபிஎஸ் பிரேக்குகளுடன் வருகிறது. தரமான கட்டமைப்பை பெற்றிருக்கும்.

 முதல்முறையாக பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் பைக் இந்தியாவில் தரிசனம்!

இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் போது கேடிஎம் ட்யூக் 390, பெனெல்லி டிஎன்டி300, பஜாஜ் டோமினார் 400 ஆகிய மாடல்களுடன் போட்டி போடும். வரும் பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கும் டெல்லி சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவில் இந்த புதிய பைக் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Image Source: Facebook

More from DriveSpark

Article Published On: Thursday, November 23, 2017, 16:27 [IST]
English summary
The most affordable motorcycle from the stable of BMW Motorrad the G 310 R is being manufactured in India by TVS Motor Company.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+