புதிய பிஎம்டபிள்யூ கே1600 பி மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம்!
புதிய பிஎம்டபிள்யூ கே1600பி மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
புதிய பிஎம்டபிள்யூ கே1600பி மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

கோவாவில் நடந்து வரும் இந்திய பைக் வீக் திருவிழாவில் இரண்டு புதிய பிஎம்டபிள்யூ மோட்டார்சைக்கிள்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன. அதில், முதலாவதாக புதிய பிஎம்டபிள்யூ கே1600 பி மோட்டார்சைக்கிள் பற்றிய விபரங்களை காணலாம்.

பிஎம்டபிள்யூ கே1600 ஜிடி மோட்டார்சைக்கிளின் பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டிருக்கும் மாடல்தான் புதிய பிஎம்டபிள்யூ கே1600 ஜிடி மோட்டார்சைக்கிள். கடந்த ஆண்டு பல வெளிநாடுகளில் இந்த மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு வந்துவிட்டது. மிக உயர்வான டூரிங் வகை மோட்டார்சைக்கிள் மாடலாக இது வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

பிரம்மாண்டமான தோற்றத்திலான இந்த புதிய மோட்டார்சைக்கிள் மாடலை உயரம் குறைவானவர்களும் எளிதாக கையாளும் விதத்தில், இருக்கை அமைப்பு தாழ்வாக குறைக்கப்பட்டு இருக்கிறது. பின்புற வால் பகுதியும் உயரம் குறைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த மோட்டார்சைக்கிளில் எலக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட் வசதியுடன் விண்ட் ஸ்கிரீன் அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. சிறப்பான ஏரோடைனமிக் தத்துவதத்தில், முகப்பும், பக்கவாட்டு அமைப்பும் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிளில் 37 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்டி கொடுக்கப்பட்டு இருக்கிறது.

புதிய பிஎம்டபிள்யூ கே1600 பி மோட்டார்சைக்கிளில் 1,649சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 160 பிஎச்பி பவரையும், 175 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. ரோடு மற்றும் க்ரூஸ் என்ற இரண்டு விதமான டிரைவிங்ம மோடுகளில் இயக்கலாம்.
Recommended Video


இந்த மோட்டார்சைக்கிளில் 5.7 அங்குல டிஎஃப்டி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது. சேட்டிலைட் ரேடியோ மற்றும் புளுடூத் தொடர்பு வசதி இருக்கிறது.

ஏபிஎஸ் புரோ பிரேக்கிங் சிஸ்டம், டைனமிக் பிரேக் லைட் சிஸ்டம், டைனமிக் ட்ரான்க்ஷன் கன்ட்ரோல், ரைடிங் மோடுகள், க்ரூஸ் கன்ட்ரோல், ஸினான் ஹெட்லைட், இருக்கை, கைப்பிடிகளை வெது வெதுப்பாக்கும் வசதிகளும் உள்ளன.

இந்த மோட்டார்சைக்கிளில் முன்சக்கரத்தில் நான்கு காலிபர்கள் கொண்ட 320மிமீ டியூவல் ஃப்ளோட்டிங் டிஸ்க் பிரேக்குகளும், பின்புறத்தில் 320மிமீ டிஸ்க் பிரேக் சிஸ்டமும் உள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்யப்பட உள்ளது.

ரூ.29 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையல் இந்த புதிய பிஎம்டபிள்யூ கே1600பி மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு வந்துள்ளது. ஒரு சில வாரங்களில் டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கப்பட்டு விடும்.


Click it and Unblock the Notifications








