புதிய பிஎம்டபிள்யூ ஆர் நைன் டி ரேஸர் மோட்டார்சைக்கிள் அறிமுகம்!
பிஎம்டபிள்யூ ஆர் நைன் டி ரேஸர் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.
புதிய பிஎம்டபிள்யூ ஆர் நைன் டி ரேஸர் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

கோவாவில் நடந்து வரும் இந்திய பைக் வீக் திருவிழாவில், புதிய பிஎம்டபிள்யூ ஆர் நைன் டி ரேஸர் மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் ஆர் நைன் டி மோட்டார்சைக்கிள் இந்தியாவில் ஏற்கனவே ஸ்க்ராம்ப்ளர் உள்ளிட்ட இரண்டு டிசைன்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஆர் நைன் டி ரேஸர் மூன்றாவது மாடலாகும்.

ஹெட்லைட்டிலிருந்து பெட்ரோல் டேங்க்கை இணைக்கும் ஃபேரிங் பேனல்கள், பின்புறத்தில் சீட் ஹம்ப் உள்ளிட்டவை இதற்கு கஃபே ரேஸர் போன்ற தோற்றத்தை கொடுக்கிறது. நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் கூடிய பழமையான மோட்டார்சைக்கிள் போன்ற தோற்றத்தை பெற்றிருக்கிறது.

இந்த புதிய மோட்டார்சைக்கிளில் ஏற்கனவே விற்பனையில் உள்ள ஆர் நைன் டி மாடல்களில் பொருத்தப்பட்டிருக்கும் அதே 1,170சிசி பாக்ஸர் எஞ்சின்தான் இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 110 பிஎச்பி பவரையும், 116 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.
Recommended Video


இந்த புதிய மாடலில் ஸ்டீல் பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டு இருக்கிறது. அப்சைடு டவுன் ஃபோர்க்குகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. நான்கு காலிபர்கள் கொண்ட டியூவல் டிஸ்க் பிரேக்குகளும், பின்புறத்தில் சிங்கிள் டிஸ்க் பிரேக்கும் உள்ளது. ஆட்டோமேட்டிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் மற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவை முக்கிய அம்சங்கள்.

இந்த புதிய மோட்டார்சைக்கிள் மாடலும் பிற மோட்டார்சைக்கிள்களை போன்றே இறக்குமதி செய்தே விற்பனை செய்யப்பட உள்ளது. டிரையம்ஃப் த்ரக்ஷ்டன் ஆர் மோட்டார்சைக்கிளுடன் நேரடியாக போட்டியிடும்.

ட்ரையம்ஃப் தர்க்ஷடன் ஆர் ரூ.11.27 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படும் நிலையில், புதிய பிஎம்டபிள்யூ ஆர் நைன் டி ரூ.17.30 லட்சம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.


Click it and Unblock the Notifications








