பஜாஜ் பல்சர் என்எஸ்200 ஏபிஎஸ் மாடலுக்கு முன்பதிவு துவங்கியது!

ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்ட பஜாஜ் பல்சர் என்எஸ்200 பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

By Saravana Rajan

200சிசி ரக பைக் மாடல்களில் பஜாஜ் பல்சர் என்எஸ்200 பைக் வாடிக்கையாளர்களின் தேர்வில் முதன்மையான இடத்தில் வைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், இந்த பைக்கில் சில விஷயங்கள் குறைபாடு உள்ளதாக வாடிக்கையாளர்கள் ஏமாற்றம் தெரிவித்தனர்.

பஜாஜ் பல்சர் என்எஸ்200 ஏபிஎஸ் மாடலுக்கு முன்பதிவு துவங்கியது!

பல வெளிநாடுகளில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்துடன் விற்பனை செய்யப்படும் பஜாஜ் பல்சர் என்எஸ்200 பைக் இந்தியாவில் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் இல்லாமல் விற்பனையாவது குறித்து வாடிக்கையாளர்களும் ஏமாற்றம் தெரிவித்து வந்தனர்.

 பஜாஜ் பல்சர் என்எஸ்200 ஏபிஎஸ் மாடலுக்கு முன்பதிவு துவங்கியது!

இந்த குறையை போக்கும் விதத்தில், தற்போது ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்துடன் பஜாஜ் பல்சர்200 பைக் அறிமுகமாக இருக்கிறது. மேலும், இந்த பைக்கிற்கு முன்பதிவும் துவங்கப்பட்டு இருக்கிறது.

Recommended Video

Tata Nexon Review: Specs
 பஜாஜ் பல்சர் என்எஸ்200 ஏபிஎஸ் மாடலுக்கு முன்பதிவு துவங்கியது!

புதிய பஜாஜ் பல்சர் என்எஸ்200 பைக்கில் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் கொண்ட எஞ்சினுடன் வருவதாகவும் தகவல்கள் உலா வருகின்றன. FI என்ற குறிப்புடன் கூடிய ஸ்டிக்கருடன் பல்சர் என்எஸ்200 பைக்கின் படங்கள் இன்டர்நெட்டில் வெளியாகி இருக்கின்றன.

 பஜாஜ் பல்சர் என்எஸ்200 ஏபிஎஸ் மாடலுக்கு முன்பதிவு துவங்கியது!

எனினும், இந்த பைக் துருக்கியில் விற்பனைக்கு செல்லும் மாடலாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் கொண்ட பல்சர் என்எஸ்200 மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படாது என்று டீலர் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது பயன்படுத்தப்படும் கார்புரேட்டர் எஞ்சின்தான் தொடர்ந்து பயன்படுத்தப்படுமாம்.

 பஜாஜ் பல்சர் என்எஸ்200 ஏபிஎஸ் மாடலுக்கு முன்பதிவு துவங்கியது!

பல்சர் ஆர்எஸ்200 பைக்கில் கொடுக்கப்பட்டு இருக்கும், அதே சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம்தான் புதிய பல்சர் என்எஸ்200 பைக்கிலும் கொடுக்கப்பட உள்ளது. சிங்கிள் சேனல் ஏபிஎஸ் என்பது ஒரு சக்கரத்தில் மட்டும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கும். பல்சர் என்எஸ்200 பைக்கில் முன்சக்கரத்தில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டு வருகிறது.

 பஜாஜ் பல்சர் என்எஸ்200 ஏபிஎஸ் மாடலுக்கு முன்பதிவு துவங்கியது!

மும்பை டீலர்களில் இந்த பைக்கிற்கு முன்பதிவு துவங்கப்பட்டு விட்டது. படிப்படியாக நாட்டின் பிற பகுதிகளில் உள்ள டீலர்களிலும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்ட பல்சர் என்எஸ்200 மாடலுக்கு முன்பதிவு துவங்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

 பஜாஜ் பல்சர் என்எஸ்200 ஏபிஎஸ் மாடலுக்கு முன்பதிவு துவங்கியது!

ரூ.1.08 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த புதிய மாடல் வருகிறது. ஏபிஎஸ் மாடலுக்கு ரூ.12,000 கூடுதல் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. எனினும், சிறந்த பாதுகாப்பு அம்சத்துடன் வரும் இந்த மாடலுக்கு வாடிக்கையாளர் மத்தியில் அதிக வரவேற்பு இருக்கும் என்று நம்பப்படுகிறது.

English summary
The Pulsar NS200 in the Indian market wasn't equipped with ABS. The same motorcycle sold in various foreign markets feature ABS. Well, customers in the Indian market would not have to feel shortchanged anymore.
Story first published: Saturday, September 30, 2017, 17:52 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X