ஸ்விப்ட் காருடன் பயங்கர விபத்து; முன்சக்கரத்தை பறிகொடுத்த டிரையம்ப புதிய மாடல் மோட்டர் சைக்கிள்

Written By:

விபத்துக்களுக்கான ஆண்டறிக்கையை நாம் எடுத்து பார்த்தால் மோட்டார் சைக்கிள் விபத்துகளில் உலகளவில் எப்போதும் இந்தியா தான் முதலிடத்தில் வரும்.

புதிய டிரையம்ப் புதிய மாடல் பைக் ஸ்விப்ட் காருடன் மோதல்..!!

மோட்டார் சைக்கிள்களில் அதிவேக பயணம் ஆபத்தானது என்பதை வலியுறுத்த கோடி கோடியாக கொட்டி பல்வேறு நிகழ்வுகளை நடத்தினாலும், நிலமை மாறியதாக தெரியவில்லை.

புதிய டிரையம்ப் புதிய மாடல் பைக் ஸ்விப்ட் காருடன் மோதல்..!!

சமீபத்தில் பலத்த எதிர்பார்பிற்கு மத்தியில் வெளியான டிரையம்ப் போனவில்லே பாபர் மோட்டார் சைக்கிள் இந்தியாவில் மோசமான ஒரு விபத்தை சந்தித்துள்ளது.

புதிய டிரையம்ப் புதிய மாடல் பைக் ஸ்விப்ட் காருடன் மோதல்..!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெயப்பூரில் நடைபெற்ற விபத்தில் போனவில்லா பாபர் பைக் எதிரே வந்த ஸ்விப்ட் காருடன் நேருக்கு நேர் மோதியதில் அதன் முகப்பு பகுதி முற்றிலும் சேதமடைந்துள்ளது.

புதிய டிரையம்ப் புதிய மாடல் பைக் ஸ்விப்ட் காருடன் மோதல்..!!

இந்த விபத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறியதாகவது, இரவு நேரம் டிராஃபிக் இல்லை என்பதால் பைக் ரைடர் அதிவேகத்தில் வந்ததாகவும், இறுதியில் ஸ்விப்ட் காருடன் பலத்த சத்தத்துடன் பைக் மோதியதாகவும் தெரிவித்திருக்கிறார்.

புதிய டிரையம்ப் புதிய மாடல் பைக் ஸ்விப்ட் காருடன் மோதல்..!!

இந்த விபத்து குறித்து மேலும் காவலர்கள் விசாரிக்கையில், ஸ்விப்ட் காரின் டிரைவரும் காரை வேகமாக அந்த சாலையில் ஒட்டி வந்தது தெரியவந்தது.

புதிய டிரையம்ப் புதிய மாடல் பைக் ஸ்விப்ட் காருடன் மோதல்..!!

இருவேறு சாலைகளில் வந்த இந்த இரு வாகன ஒட்டிகளும், சாலை சந்தித்துக்கொள்ளும் இடத்தை குறித்து கவலையே இல்லாமல் தங்களது வாகனங்களை செலுத்தி, இறுதியில் விபத்தில் முடித்துள்ளனர்.

புதிய டிரையம்ப் புதிய மாடல் பைக் ஸ்விப்ட் காருடன் மோதல்..!!

எதிரே ஸ்விஃப்ட் கார் வேகமாக வருவதை பார்த்த போனவில்லா பாபர் பைக் ரைடர் வண்டியை திரும்ப முயன்றுள்ளார்.

ஆனால் அதற்கு நேரமில்லாமல் போகவே காரின் முன் பகுதியின் இடதுபக்கத்தில் இடித்து விட்டார், ஆனால் சேதாரம் என்னவோ பைக் ரைடருக்கு தான்.

புதிய டிரையம்ப் புதிய மாடல் பைக் ஸ்விப்ட் காருடன் மோதல்..!!

இரண்டு வாகனங்களிலும் இருந்த அதிவேக பயணம் காரணமாக காருடன் மோதிய டிரையம்ப் பைக்கின் முன்பகுதி கழண்டு விட்டது. ஃபோர்க்ஸ் உடைந்துவிட்டது.

புதிய டிரையம்ப் புதிய மாடல் பைக் ஸ்விப்ட் காருடன் மோதல்..!!

போனவில்லா பாபர் பைக் மோதியும் ஸ்விப்ட் காரின் பம்பர் பகுதி மட்டும் கழண்டு கீழே விழுந்துவிட்டது. ஆனால் முகப்பின் மேல்பகுதியில் சில அடி மட்டுமே பட்டுள்ளது.

புதிய டிரையம்ப் புதிய மாடல் பைக் ஸ்விப்ட் காருடன் மோதல்..!!

அதிக திறன் கொண்ட டிரையம்ப் பைக்கில் அதிவேகத்துடன் வந்த பைக் ரைடர் ஹெல்மெட் உட்பட எந்தவிதமான பாதுகாப்பு அம்சங்களையும் அணிந்திருக்கவில்லை.

புதிய டிரையம்ப் புதிய மாடல் பைக் ஸ்விப்ட் காருடன் மோதல்..!!

இதனால், விபத்த நடந்த பிறகு பைக் ரைடருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஸிவிப்ட் காரை ஒட்டி வந்த டிரைவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால் காரின் முகப்பு தான் சிதைந்துவிட்டது.

புதிய டிரையம்ப் புதிய மாடல் பைக் ஸ்விப்ட் காருடன் மோதல்..!!

இரவு நேரத்தில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பற்ற இதுபோன்ற அதிவேக பயணங்கள் சிக்கலில் முடிவதை நாம் தற்போது அதிகமாக பார்த்து வருகிறோம்.

புதிய டிரையம்ப் புதிய மாடல் பைக் ஸ்விப்ட் காருடன் மோதல்..!!

இந்த சம்பவத்தை நினைவில் கொண்டு இனி அதிவேக வாகனங்களில் பயணிப்பவர்கள் கவனத்துடன் செயல்பட கேட்டுக்கொள்கிறோம்.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Brand New Triumph Bonneville Bobber Collides With Maruti Swift. Click for Details...
Story first published: Sunday, June 11, 2017, 8:30 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark