பி.எஸ்.3 எஞ்சின் தடை எதிரொலி: பஜாஜ் நிறுவனம் மீது பஞ்சாப் டீலர்கள் குற்றச்சாட்டு

Written By:

சுற்றுச்சூழலை பாதுகாக்க உச்சநீதி மன்றம் பி.எஸ்.3 எஞ்சின்களுக்கு தடை விதத்தது. நாட்டில் இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று எண்ணியிருந்த நிலையில், தள்ளுபடி விற்பனை, சதவீத அடிப்படையிலான விற்பனை என ஒருவிதமாக இந்த தீர்ப்பை இந்திய ஆட்டோமொபைல் கடந்து வந்துவிட்டது. 

பஜாஜ் பைக்குகளை விற்க மறுக்கும் பஞ்சாப் டீலர்கள்

பி.எஸ்.3 எஞ்சினுக்கான தடை உத்தரவின் வீரியம் குறைந்து வந்த நிலையில், பஞ்சாப்பில் உள்ள பஜாஜ் வாகனங்களுக்கான டீலர்கள் மத்தியில் புதிய பிரச்சனை ஒன்று உருவாக்கியுள்ளது.

பஜாஜ் பைக்குகளை விற்க மறுக்கும் பஞ்சாப் டீலர்கள்

அங்கு மட்டும் பஜாஜ் நிறுவனத்தின் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைக்குகள் விற்பனை ஆகாமல் உள்ளதாக பஞ்சாப் மாநிலத்தில் டீலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

பஜாஜ் பைக்குகளை விற்க மறுக்கும் பஞ்சாப் டீலர்கள்

பஞ்சாப் மாநிலத்தில் பஜாஜ் நிறுவனத்திற்கு 40 மெயின் டீலர்களும் மற்றும் 200 சப்-டீலர்களும் இருக்கின்றனர். மொத்தமாக இவர்களிடம் பி.எஸ். 3 எஞ்சின் பொருத்தப்பட்ட 1000 பைக்குகள் விற்பனை ஆகாமல் இருப்பதாக, அங்குள்ள வட்டாரங்களிலிருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.

பஜாஜ் பைக்குகளை விற்க மறுக்கும் பஞ்சாப் டீலர்கள்

இதனால் தற்போது, தேக்க நிலையில் இருக்கும் பி.எஸ்.3 எஞ்சின் கொண்ட 1000 பைக்குகளின் விற்பனை விலையை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தங்களுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என பஞ்சாபின் அனைத்து டீலர்களும் ஒட்டுமொத்தமாக கோரிக்கை வைத்துள்ளதாக தெரிகிறது.

பஜாஜ் பைக்குகளை விற்க மறுக்கும் பஞ்சாப் டீலர்கள்

மேலும் ஏப்ரல் 1 முதல் பி.எஸ்.3 எஞ்சினுக்காக தடை அமலாக்கப்பட்டதை தொடர்ந்து பஞ்சாபில் பஜாஜ் நிறுவனத்தின் எந்த பைக்குகளையும் டீலர்கள் விற்கவில்லை.

பஜாஜ் பைக்குகளை விற்க மறுக்கும் பஞ்சாப் டீலர்கள்

தற்போது பி.எஸ்.4 எஞ்சின் பொருத்தப்பட்ட பஜாஜ் நிறுவன பைக்குகள் விற்பனைக்கு வந்திருந்தாலும், இழப்பீடு வழங்கும்வரை அந்நிறுவனத்தின் வாகனங்களை விற்கமாட்டோம் என பஞ்சாப் டீலர்கள் ஒட்டுமொத்தமாக கூறிவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பஜாஜ் பைக்குகளை விற்க மறுக்கும் பஞ்சாப் டீலர்கள்

பஜாஜ் தயாரிப்புகளின் விற்பனையை பஞ்சாபில்

நிறுத்தப்பட்டுள்ள தகவலை பஜாஜ் நிறுவனம் முற்றிலுமாக மறுப்பு தெரிவிக்கிறது. மேலும் ஒரு சில டீலர்கள் உச்சநீதி மன்றத்தின் உத்தரவால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்றும் இருந்தாலும் பஞ்சாபில் பஜாஜ் பைக்குகள் வழக்கம்போல விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

பஜாஜ் பைக்குகளை விற்க மறுக்கும் பஞ்சாப் டீலர்கள்

பஜாஜ் நிறுவனம் பி.எஸ்.4 எஞ்சின் கொண்ட பைக்கிற்கான தயாரிப்பு பணிகளை ஜனவரியில் தான் தொடங்கின. மேலும் கடந்த பிப்ரவரி மாதத்தின் போது, பிஸ்.3 எஞ்சினுக்கான தடை உத்தரவை கொஞ்சம் தள்ளிப்போடவேண்டு என நிர்வாக இயக்குநர் ராஜீவ் பஜாஜ் முதலில் மத்தியரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

பஜாஜ் பைக்குகளை விற்க மறுக்கும் பஞ்சாப் டீலர்கள்

இருந்தாலும், ஏப்ரல் 1முதல் பி.எஸ்.3 எஞ்சினுக்கு தடை விதிப்பதில் உறுதியாக இருந்த உச்சநீதி மன்றம், பஜாஜ் கோரிக்கைக்கு செவி சாய்க்காமல் உத்தரவை அமல்படுத்தியது. இதனால் நாட்டில் விற்பனையாகாத பைக்குகளை ஏப்ரல் 5 முதல் திரும்ப பெற்றுக்கொள்ளப்படும் என பஜாஜ் நிறுவனம் அறிவித்தது.

பஜாஜ் பைக்குகளை விற்க மறுக்கும் பஞ்சாப் டீலர்கள்

தற்போது பஞ்சாப் மாநிலத்தில் விற்பனையாகாத நிலையில் உள்ள 1000 இருச்சக்கர வாகனங்களின் நிலை என்ன என்பதை பஜாஜ் நிறுவனம் கண்டுகொள்ளவில்லை என டீலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். மேலும் இதற்காக அந்நிறுவனத்திடம் முறையிட்டும் பலனில்லை என தெரிவிக்கின்றனர்.

பஜாஜ் நிறுவனத்தின் அலட்சியப்போக்கை கண்டித்து, பஞ்சாபில் கடந்த மூன்று நாட்களாக அனைத்து டீலர்களும் தங்களது விற்பனையகத்தை மூடி வைத்துள்ளனர்.

பஜாஜ் பைக்குகளை விற்க மறுக்கும் பஞ்சாப் டீலர்கள்

பி.எஸ்.3 எஞ்சினுக்காக தடை உத்தரவை அமல்படுத்தக்கூடிய சமயத்தில் உச்சநீதி மன்றத்தை அனுகிய பஜாஜ் பல்சர் 150சிசி மாடலில் 5100 பைக்குகள் பி.எஸ்.3 எஞ்சின் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் தடை உத்தரவை தள்ளிப்போட பரிசீலிக்க வேண்டும் என மனுவுல் கோரியிருந்தது.

பஜாஜ் பைக்குகளை விற்க மறுக்கும் பஞ்சாப் டீலர்கள்

மேலும் அதே மனுவில் பி.எஸ்.3 எஞ்சினுக்கான தடை உறுதிசெய்யப்படும் பட்சத்தில், பி.எஸ்.3 எஞ்சின் கொண்ட பஜாஜ் நிறுவனத்தின் 79,200 வாகனங்கள் விற்பனை செய்யப்படாமல் இருக்கும் என கூறியது. ஆனால் இவை எதையும் கேட்காமல் உச்சநீதி மன்றம் பி.எஸ்.3 எஞ்சினுக்கான தடையை உறுதி செய்தது.

பஜாஜ் பைக்குகளை விற்க மறுக்கும் பஞ்சாப் டீலர்கள்

மார்ச் 29க்கு பிறகு இந்தியாவின் அனைத்து வாகன உற்பத்தியாளர்களும், பி.எஸ்.3 எஞ்சின் கொண்ட வாகனங்களை அதிக தள்ளுபடியில் விற்றனர். இதில் பஜாஜ் நிறுவன்மும் இணைந்து வாகனங்களை ரூ. 3,500 முதல் ரூ.13,000 வரை விலை குறைத்து விற்றது.

பஜாஜ் பைக்குகளை விற்க மறுக்கும் பஞ்சாப் டீலர்கள்

பிறகு ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகு நாட்டில் அனைத்து பி.எஸ்.3 எஞ்சின் கொண்ட வாகனங்கள் விற்கப்பட்டு விட்டதாக அனைத்து வாகன தயாரிப்பு நிறுவனங்களும் தெரிவித்தன. இதில் பஜாஜ் நிறுவனமும் இணைந்து கொண்டது. ஆனால் தற்போது பஞ்சாப் பஜாஜ் டீலர்களிடம் எழுந்துள்ள கோரிக்கை இதற்கு நேர்மாறாக உள்ளது.

பஜாஜ் பைக்குகளை விற்க மறுக்கும் பஞ்சாப் டீலர்கள்

தற்போது பஜாஜ் நிறுவனத்தின் பஞ்சாப் மாநில டீலர்கள் ஒட்டு மொத்தமாக குரலெழுப்பியுள்ள நிலையில், இன்னும் பல்வேறு மாநிலங்களில் இதுபோன்ற கோரிக்கைகளும் புகார்களும் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் மீது வைக்கப்படலாம் என்பது ஆட்டோமொபைல் வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.

English summary
Punjab sub-dealers of Bajaj Auto seeking compensation for the unsold BS III stock after the Supreme Court banned their sales and registration in India from 1 April, 2017
Story first published: Monday, April 24, 2017, 13:32 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark