பிஎஸ்-3 இருசக்கர வாகனங்கள் விற்று தீர்ந்தன... வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்!

சென்னையில் உள்ள பெரும்பாலான டீலர்களில் பிஎஸ்-3 இருசக்கர வாகனங்கள் அனைத்தும் விற்று தீர்ந்துள்ளன.

By Saravana Rajan

பிஎஸ்-3 வாகனங்களுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி தடை அறிவிப்பை வெளியிட்டது. இதையடுத்து, இருப்பில் இருந்த பிஎஸ்-3 வாகனங்களுக்கு வரலாறு காணாத வகையில் தள்ளுபடி அறிவிக்கப்பட்டது.

பிஎஸ்-3 இருசக்கர வாகனங்கள் விற்று தீர்ந்தன... வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்!

ரூ.5,000 முதல் ரூ.25,000 வரை தள்ளுபடி பெறும் வாய்ப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, நேற்று மாலையில் இருந்து பிஎஸ்-3 எஞ்சின் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனங்களை வாங்குவதில் வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டினர்.

பிஎஸ்-3 இருசக்கர வாகனங்கள் விற்று தீர்ந்தன... வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்!

இருசக்கர வாகன ஷோரூம்களில் கூட்டம் அலை மோதியது. இதனால், சென்னையில் உள்ள பல இருசக்கர வாகன ஷோரூம்கள் இரவு வரை திறந்திருந்தது.

பிஎஸ்-3 இருசக்கர வாகனங்கள் விற்று தீர்ந்தன... வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்!

தள்ளுபடி செய்தி காட்டுத் தீயாக பரவியதால், இன்று காலையிலேயே ஷோரூம் திறப்பதற்கு முன்னரே, வாடிக்கையாளர்கள் குவியத் துவங்கினர். முன்பதிவு செய்வதிலும் போட்டா போட்டி நிலவியது.

பிஎஸ்-3 இருசக்கர வாகனங்கள் விற்று தீர்ந்தன... வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்!

இந்தநிலையில், இன்று மதிய நிலவரப்படி, சென்னையில் உள்ள பெரும்பாலான இருசக்கர வாகன டீலர்களில் பிஎஸ்-3 எஞ்சின் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனங்கள் அனைத்தும் விற்று தீர்ந்துவிட்டன.

பிஎஸ்-3 இருசக்கர வாகனங்கள் விற்று தீர்ந்தன... வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்!

இந்த தகவலை தாமதமாக கேள்விப்பட்டு, பல வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு டீலராக ஏறி இறங்கி வருகின்றனர். இருப்பினும், ஸ்டாக் இல்லை என்ற பதிலை கேட்டு அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

பிஎஸ்-3 இருசக்கர வாகனங்கள் விற்று தீர்ந்தன... வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்!

ஹீரோ, ஹோண்டா, பஜாஜ் போன்ற முன்னணி இருசக்கர வாகன ஷோரூம்களில் ஸ்டாக் இல்லை என்று தெரிவிக்கப்பட்டாலும், மஹிந்திரா நிறுவன உள்ளிட்ட நிறுவனங்கள் தொடர்ந்து இருப்பில் உள்ள பிஎஸ்-3 பைக்குகளுக்கு தள்ளுபடியை அதிகரித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளன.

பிஎஸ்-3 இருசக்கர வாகனங்கள் விற்று தீர்ந்தன... வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்!

டீலர்களில் மோஜோ பைக்குகள் தேங்கி இருப்பதாக தெரிகிறது. இதையடுத்து, ரூ.30,000 வரை தள்ளுபடி வழங்குவதாக இன்று பிற்பகலில் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. இதேபோன்று, சில இருசக்கர வாகன ஷோரூம்களில் இருப்பில் உள்ள பிஎஸ்-3 வாகனங்களுக்கு அதிகபட்ச சலுகைகள் பெறும் வாய்ப்பு இருந்து வருகிறது.

பிஎஸ்-3 இருசக்கர வாகனங்கள் விற்று தீர்ந்தன... வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்!

நாளை முதல் பிஎஸ்-4 எஞ்சின் பொருத்தப்பட்ட வாகனங்களை மட்டுமே விற்பனை செய்யவோ, பதிவு செய்யவோ இயலும். அதேநேரத்தில், இன்று வாங்கிய பிஎஸ்-3 வாகனத்தை அடுத்த 60 நாட்களுக்குள் பதிவு செய்து கொள்ளலாம்.

பிஎஸ்-3 இருசக்கர வாகனங்கள் விற்று தீர்ந்தன... வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்!

இதனிடையே, பிஎஸ்-3 வாகனங்களுக்கு உச்சநீதிமன்றம் விதித்த தடையானது, முறையானது அல்ல; துரதிருஷ்டவசமானது என்று வாகன உற்பத்தியாளர் கூட்டமைப்பு தெரிவித்தள்ளது.

Most Read Articles
English summary
BS-3 Two Wheelers Run Out Of Stock In Chennai Dealers. Read in Tamil.
Story first published: Friday, March 31, 2017, 16:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X