யுஎம் மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் புதிய மேம்படுத்தப்பட்ட பைக் மாடல்கள் அறிமுகம்!

மேம்படுத்தப்பட்ட ரெனகேட் கமாண்டோ ஈஎஃப்ஐ , ரெனகேட் ஸ்போர்ட்ஸ் எஸ் ஈஎஃப்ஐ பைக்குகளை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது யும் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம். அது குறித்த தகவல்களை காணலாம்.

By Arun

அமெரிக்காவைச் சேர்ந்த 'யும் மோட்டார்சைக்கிள்ஸ்' நிறுவனம் இந்தியாவின் 'லோஹியா மோட்டார்ஸ்' நிறுவனத்துடன் கூட்டணி சேர்ந்து பைக்குகளை தயாரித்து வருகிறது. பிஎஸ்-4 தரத்தில் மேம்படுத்தப்பட்ட புதிய ரெனகேட் கமாண்டோ ஈஎஃப்ஐ , ரெனகேட் ஸ்போர்ட்ஸ் எஸ் ஈஎஃப்ஐ பைக்குகளை தற்போது இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது இந்நிறுவனம்.

மேம்படுத்தப்பட்ட புதிய யுஎம் ரெனகெட் பைக்குகள் அறிமுகம்!

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களுக்கு போட்டியாக களத்தில் இருக்கும் யுஎம் மோட்டார்சைக்கிள்ஸ் பைக்குகள், ஸ்டைலிலும், விலையுடன் அந்நிறுவனத்துடன் போட்டி போட்டு வருகிறது. க்ரூசர், டூயல் பர்பஸ், ஸ்போர்ட்ஸ்பைக்குகள் போன்ற செக்மெண்டுகளில் இந்நிறுவனம் தனது பைக்குகளை விற்பனை செய்துவருகிறது.

மேம்படுத்தப்பட்ட புதிய யுஎம் ரெனகெட் பைக்குகள் அறிமுகம்!

யும் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் வெற்றிகரமான மாடல்களான ரெனகேட் கமாண்டோ ஈஎஃப்ஐ , ரெனகேட் ஸ்போர்ட்ஸ் எஸ் ஈஎஃப்ஐ பைக்குகளை பாரத் ஸ்டேஜ்-4 மாசு உமிழ்வு தரத்திலான இஞ்சின்களுடன் மேம்படுத்தி விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

மேம்படுத்தப்பட்ட புதிய யுஎம் ரெனகெட் பைக்குகள் அறிமுகம்!

பிஎஸ்-4 மட்டுமல்லாமல் இரண்டு பைக்குகளும் சீரான ஆற்றலை வெளிப்படுத்தும் ஃபியூயல் இஞ்செக்‌ஷன் சிஸ்டம் கொண்ட இஞ்சின் கொண்டுள்ளது.

மேம்படுத்தப்பட்ட புதிய யுஎம் ரெனகெட் பைக்குகள் அறிமுகம்!

புதிய இஞ்சின் குளிர்ச்சியான காலநிலையிலும் எளிதாக ஸ்டார்ட் செய்ய உதவுகிறது. மேலும் இதில் மாசு உமிழ்வு தரம் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, இஞ்சினின் திராட்டில் ரெஸ்பான்ஸ்சும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேம்படுத்தப்பட்ட புதிய யுஎம் ரெனகெட் பைக்குகள் அறிமுகம்!

அறிமுக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட யும் லோஹியா நிறுவனத்தின் தலைமை செயல்அதிகாரி ராஜீவ் மிஸ்ரா பேசுகையில், அதிகரிக்கப்பட்ட பவர் மற்றும் அதிக மாசு உமிழ்வு தரம் கொண்ட இஞ்சினுடன் ரெனகேட் கமாண்டோ ஈஎஃப்ஐ , ரெனகேட் ஸ்போர்ட்ஸ் எஸ் ஈஎஃப்ஐ பைக்குகளை அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்வதாக கூறினார்.

மேம்படுத்தப்பட்ட புதிய யுஎம் ரெனகெட் பைக்குகள் அறிமுகம்!

ரெனகேட் கமாண்டோ ஈஎஃப்ஐ , ரெனகேட் ஸ்போர்ட்ஸ் எஸ் ஈஎஃப்ஐ பைக்குகள் இரண்டிலும் ஒற்றை சிலிண்டர் கொண்ட 279.5சிசி லிக்விட் கூல்டு இஞ்சின் உள்ளது. இது அதிகபட்சமாக 24.6 பிஹச்பி ஆற்றலையும், 21.8 என்எம் டார்க்கையும் வழங்குகிறது. 6 கியர்கள் கொண்ட மேனுவல் கியர் பாக்ஸ் உள்ளது.

விலைவிவரம்

விலைவிவரம்

மேம்படுத்தப்பட்ட புதிய ரெனகேட் கமாண்டோ ஈஎஃப்ஐ பைக் ரூ. 1.84 லட்சத்திற்கும், ரெனகேட் ஸ்போர்ட்ஸ் எஸ் ஈஎஃப்ஐ பைக் ரூ. 1.78 லட்சத்திற்கும் கிடைக்கிறது. ( டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை).

மேம்படுத்தப்பட்ட புதிய யுஎம் ரெனகெட் பைக்குகள் அறிமுகம்!

இவை நாட்டில் உள்ள 45 யும் மோட்டார்சைக்கிள் டீலர்ஷிப்கள் மூலமாக விற்பனைக்கு கிடைக்கின்றன. மேலும் டீலர்ஷிப்புகளின் எண்ணிக்கையை இந்த ஆண்டில் அதிகரிக்க திட்டம் தீட்டியுள்ளது யும் மோட்டார்சைக்கிள் நிறுவனம்.

More from DriveSpark

Article Published On: Saturday, April 8, 2017, 11:03 [IST]
English summary
Read in Tamil about UM motorcycles launch facelifted UM Renegade Commando FI, Sport FI with BS4 engine. know about price, mileage, specs and more
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+