கேஸ்ட்ரால் நிறுவனத்தின் புதிய பைக் இஞ்சின் ஆயில் அறிமுகம்

Written By:

பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனத்தின் ஒரு அங்கமான கேஸ்ட்ரால் இந்தியா நிறுவனம் ஆட்டோமொபைல்களுக்கான லூப்ரிகண்ட் மற்றும் ஆயில்களை உற்பத்தி செய்து வருகிறது. 118 ஆண்டு கால பாரம்பரியம் கொண்ட கேஸ்டால் இந்தியாவின் நம்பகரமான பிராண்டாக உள்ளது.

பைக்குகளுக்கான புதிய கேஸ்ட்ரால் இஞ்சின் ஆயில் அறிமுகம்

கேஸ்ட்ரால் நிறுவம் தற்போது புதிய இஞ்சின் ஆயில் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. ‘கேஸ்ட்ரால் பவர்1 க்ரூஸ்' என்ற பெயரிலான இந்த புதிய ஆயில் 4 ஸ்ட்ரோக் க்ரூசர் மற்றும் டூரர் பைக்குகளுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டதாகும்.

பைக்குகளுக்கான புதிய கேஸ்ட்ரால் இஞ்சின் ஆயில் அறிமுகம்

இது தொடர்பாக கேஸ்ட்ரால் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஆயில் ராயல் என்ஃபீல்டு, பஜாஜ் உள்ளிட்ட நிறுவனங்களின் க்ரூஸர் மற்றும் டூரர் பைக்குகளுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

பைக்குகளுக்கான புதிய கேஸ்ட்ரால் இஞ்சின் ஆயில் அறிமுகம்

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஆயில் பவர் சஸ்டெய்ன் தொழில்நுட்பம் கொண்டு தயாரிக்கப்பட்டதாகும். இது மோட்டார்சைக்கிளின் வெப்பம் மற்றும் உராய்வு ஆகியவற்றை உட்கொண்டு ஆற்றலை வெளிப்படுத்த உதவுகிறது.

பைக்குகளுக்கான புதிய கேஸ்ட்ரால் இஞ்சின் ஆயில் அறிமுகம்

மேலும், கேஸ்ட்ரால் பவர்1 க்ரூஸ் இஞ்சின் ஆயில் SAE 15W-50 4T பாகுத்தன்மை தேவைப்படும் அனைத்து 4 ஸ்ட்ரோக் கார்பரேட்டட் மற்றும் ஃபியூயல் இஞ்செக்டட் மோட்டார்சைக்கிள்களும் ஏற்றதாகும்.

பைக்குகளுக்கான புதிய கேஸ்ட்ரால் இஞ்சின் ஆயில் அறிமுகம்

மோட்டோ ஜிபி பந்தயங்கள் உள்ளிட்ட உலகளவில் நடக்கும் பந்தயங்கள் உட்பட பெரும்பாலான ரேஸ் பைக்குகளில் பயன்படுத்தப்படும் கேஸ்ட்ரால் பவர் 1 ஆயில் ரகத்தின் புதிய வரவாக இந்த கேஸ்ட்ரால் பவர்1 க்ரூஸ் இஞ்சின் ஆயில் இருக்கும்.

பைக்குகளுக்கான புதிய கேஸ்ட்ரால் இஞ்சின் ஆயில் அறிமுகம்

புதிய கேஸ்ட்ரால் பவர்1 க்ரூஸ் இஞ்சின் ஆயிலின் 2.5 லிட்டர் பேக் அறிமுக விசலுகையாக ரூ.999 என்ற விலையில் கிடைக்கும் என கேஸ்ட்ரால் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பைக்குகளுக்கான புதிய கேஸ்ட்ரால் இஞ்சின் ஆயில் அறிமுகம்

இந்தியாவைப் பொறுத்தமட்டில் பைக் இஞ்சின் ஆயில் சந்தையில் கேஸ்ட்ரால் நிறுவனத்தின் பங்கு 48 சதவீதமாக உள்ளது. கிட்டத்தட்ட இந்தியாவில் ஓடும் பாதி இருசக்கர வாகனங்களில் கேஸ்ட்ரால் ஆயிலே பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

வாசகர்கள் படித்துவரும் மேலும் சில சுவாரஸ்யமான செய்திகள்...

வாசகர்கள் படித்துவரும் மேலும் சில சுவாரஸ்யமான செய்திகள்...

அம்பாஸிடர் காரின் இடத்தை நிரப்புமா இந்த புதிய கார்?

வாசகர்கள் படித்துவரும் மேலும் சில சுவாரஸ்யமான செய்திகள்...

இந்தியாவில் ஹோண்டாவின் புதிய டபிள்யூவி ஆர்வி கார் விற்பனைக்கு அறிமுகம்

வாசகர்கள் படித்துவரும் மேலும் சில சுவாரஸ்யமான செய்திகள்...

டெஸ்ட் டிரைவ் செய்வது போல் நடித்து கார்களை திருடிய பலே கில்லாடிகள்!

வாசகர்கள் படித்துவரும் மேலும் சில சுவாரஸ்யமான செய்திகள்...

ஹார்லி டேவிட்சனின் புதிய ஸ்ட்ரீட் ராட்750 பைக் விற்பனைக்கு அறிமுகம்

வாசகர்கள் படித்துவரும் மேலும் சில சுவாரஸ்யமான செய்திகள்...

டோல்கேட் கட்டணம் ரூ. 4 லட்சம்: மருத்துவருக்கே அதிர்ச்சி வைத்தியம் அளித்த சுங்கச்சாவடி ஊழியர்!

புதிய பஜாஜ் டோமினார்400 பைக்கின் படங்கள்: 

English summary
Oil and Lubricant manufacturer Castrol has launched a new engine oil for cruiser motorcycle named as Castrol Power 1 Cruise. The engine oil is recommended for cruising and touring bikes.
Story first published: Friday, March 17, 2017, 17:21 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark