இந்தியாவில் களமிறங்கும் புதிய அமெரிக்க மோட்டார்சைக்கிள் நிறுவனம்.. மாடல்கள் உள்ளிட்ட முழு தகவல்கள்.!

Written By:

கடந்த சில ஆண்டுகளில் பல சர்வதேச மோட்டார்சைக்கிள் நிறுவனங்கள், வேகமாக வளர்ச்சியடைந்து வரும் இந்திய சந்தையில் களமிறங்கியுள்ளன.

 இந்தியாவை குறிவைத்த அமெரிக்க மோட்டார்சைக்கிள் நிறுவனம்..!

ஹார்லி டேவிட்சன், டுகாடி, பிஎம்டபிள்யூ மோட்டோரேட் மற்றும் டிரையம்ஃப் போன்ற உலகின் பிரபல மோட்டார்சைக்கிள் நிறுவனங்கள் இந்தியாவில் ஏற்கெனவே செயல்பட்டு வருகிறது.

 இந்தியாவை குறிவைத்த அமெரிக்க மோட்டார்சைக்கிள் நிறுவனம்..!

இந்த வரிசையில் தற்போது அமெரிக்காவைச் சேர்ந்த மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான ‘க்ளீவ்லேண்ட் சைக்கிள்வெர்க்ஸ்' (Cleveland CycleWerks) இந்தியாவில் வரும் ஜூலை மாதம் முதல் செயல்பட துவங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

 இந்தியாவை குறிவைத்த அமெரிக்க மோட்டார்சைக்கிள் நிறுவனம்..!

மோட்டார்சைக்கிள் தயாரிப்பில் நீண்ட பாரம்பரியம் கொண்ட நிறுவனங்களான ‘ஹார்லி டேவிட்சன்', ‘இந்தியன்' பிராண்டுகள் போன்று இல்லாமல் ‘க்ளீவ்லேண்ட் சைக்கிள்வெர்க்ஸ்' இத்துறையில் புதிதாக களமிறங்கியுள்ள ஒரு நிறுவனம் ஆகும்.

 இந்தியாவை குறிவைத்த அமெரிக்க மோட்டார்சைக்கிள் நிறுவனம்..!

2009ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்நிறுவனம் 2010ல் தனது முதல் மோட்டார்சைக்கிளை விற்பனைக்குஅறிமுகப்படுத்தியது.

 இந்தியாவை குறிவைத்த அமெரிக்க மோட்டார்சைக்கிள் நிறுவனம்..!

உலகில் 25 நாடுகளில் செயல்பட்டு வரும் இந்நிறுவனம் பெரும்பாலான உதிரிபாகங்களை சீனாவில் இருந்து இறக்குமதி செய்வது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனம் 125சிசி முதல் 450சிசி வரையிலான திறன் கொண்ட மோட்டார்சைக்கிள்களை சந்தைப்படுத்தி வருகிறது.

 இந்தியாவை குறிவைத்த அமெரிக்க மோட்டார்சைக்கிள் நிறுவனம்..!

க்ளீவ்லேண்ட் சைக்கிள்வெர்க்ஸ் நிறுவனத்தின் அனைத்து மோட்டார்சைக்கிள் மாடல்களும், ஒற்றை சிலிண்டர் கொண்ட பழைய ஹோண்டா இஞ்சின்களை அடிப்படையாகக் கொண்டவையாக உள்ளது.

 இந்தியாவை குறிவைத்த அமெரிக்க மோட்டார்சைக்கிள் நிறுவனம்..!

இந்நிறுவனம் இந்தியாவில் ஹைதராபாத்தை சேர்ந்த லைஷ்-மேடிசன் மோட்டார்வெர்க்ஸ் (Laish-Madison MotorWerks) என்ற நிறுவனத்துடன் இணைந்து கூட்டணி வைத்து செயல்பட உள்ளது.

 இந்தியாவை குறிவைத்த அமெரிக்க மோட்டார்சைக்கிள் நிறுவனம்..!

இந்நிறுவனம் முதலில் 5 மாடல்களில் மோட்டார்சைக்கிள்களை இந்தியாவில் களமிறக்க உள்ளது. அவை

  • ஹீஸ்ட் (Heist)
  • ஏஸ் (Ace)
  • மிஸ்ஃபிட் (Misfit)
  • எஃப்எக்ஸ்ஆர் (FXr)
  • ஹூலிகன் (Hooligun)
 இந்தியாவை குறிவைத்த அமெரிக்க மோட்டார்சைக்கிள் நிறுவனம்..!

இந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ‘ஹீஸ்ட்'(Heist) மோட்டார்சைக்கிள் குறைந்த டிசைன் கொண்ட ஒரு நேக்கட் பைக் ஆகும்.

இதில் 14.8 பிஹச்பி ஆற்றலையும், 15.8 என்எம் டார்க்கையும் வழங்கவல்ல ஒற்றை சிலிண்டர் கொண்ட 230சிசி இஞ்சின் உள்ளது.

 இந்தியாவை குறிவைத்த அமெரிக்க மோட்டார்சைக்கிள் நிறுவனம்..!

ரெட்ரோ கிளாசிக் டிசைன் கொண்ட ஏஸ் (Ace) ஒரு கம்யூட்டர் வகை மோட்டார்சைக்கிள் ஆகும்.

ஹீஸ்ட் மாடலில் உள்ள அதே வகை இஞ்சின் இதில் உள்ளது. ஸ்ரேண்டர்ட் மற்றும் டீலக்ஸ் என இரண்டு வேரியண்ட்களில் இந்த பைக் கிடைக்கும். டீலக்ஸ் வேரியண்டில் பிரீமியம் வகை உதிரிபாகங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 இந்தியாவை குறிவைத்த அமெரிக்க மோட்டார்சைக்கிள் நிறுவனம்..!

மிஸ்ஃபிட் (Misfit) என்பது ஒரு கேஃபே ரேசர் வகை மோட்டார்சைக்கிள் ஆகும். இதில் 16.3 பிஹச்பி ஆற்றலையும், 18 என்எம் டார்க்கையும் வழங்கவல்ல ஒற்றை சிலிண்டர் கொண்ட 223சிசி இஞ்சின் உள்ளது.

 இந்தியாவை குறிவைத்த அமெரிக்க மோட்டார்சைக்கிள் நிறுவனம்..!

எஃப்எக்ஸ்ஆர் (FXr) மற்றும் ஹூலிகன் (FXr) ஆகிய இரண்டு மோட்டார்சைக்கிள்களுமே மவுண்டெய்ன் மற்றும் டர்ட் வகை மோட்டார்சைக்கிள் மாடல்களின் கலப்பாகும்.

இவை இரண்டிலுமே 8.3 பிஹச்பி ஆற்றலையும், 8.5 என்எம் டார்க்கையும் வழங்கவல்ல ஒற்றை சிலிண்டர் கொண்ட 124சிசி இஞ்சின் உள்ளது.

இதில் எஃப்எக்ஸ்எக்ஸ் (FXx) வேரியண்ட் ஹெட்லைட், டெயில் லைட், டர்ன் இண்டிகேட்டர்கள் கொண்ட எஃப்எக்ஸ்ஆர் (FXr) மாடலின் ரோட் லீகல் வெர்ஷன் என்பது குறிப்பிடத்தக்கது.

 இந்தியாவை குறிவைத்த அமெரிக்க மோட்டார்சைக்கிள் நிறுவனம்..!

இந்த வரிசையில் கடைசி மாடலான ஹூலிகன் (Hooligun) டூயல் ஸ்போர்ட் எண்டூரோ வகையிலான பெரிய அளவு இஞ்சின் கொண்ட மோட்டார்சைக்கிள் ஆகும். இதில் 43.5 பிஹச்பி ஆற்றலையும், 42.5 என்எம் டார்க்கையும் வழங்கவல்ல ஒற்றை சிலிண்டர் கொண்ட 449சிசி லிக்விட் கூல்டு இஞ்சின் உள்ளது.

ஹூலிகன் மோட்டார்சைக்கிள் ஆர் மற்றும் எக்ஸ் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும். இதில் ஆர் வேரியண்டில் டூயல் ஸ்போர்ட் டயர்களுடனும், எக்ஸ் வேரியண்ட் ஆஃப் ரோடிங் பைக்காகவும் இருக்கும்.

 இந்தியாவை குறிவைத்த அமெரிக்க மோட்டார்சைக்கிள் நிறுவனம்..!

க்ளீவ்லேண்ட் சைக்கிள்வெர்க்ஸ் நிறுவனம் அதன் மோட்டார்சைக்கிள்களை இந்தியாவில் அசெம்பிள் செய்ய திட்டமிட்டுள்ளது. தெலங்கானா மாநிலத்தில் இந்நிறுவனம் ஒரு தொழிற்சாலையையும் நிறுவ திட்டமிட்டுள்ளது தெரியவந்துள்ளது.

 இந்தியாவை குறிவைத்த அமெரிக்க மோட்டார்சைக்கிள் நிறுவனம்..!

க்ளீவ்லேண்ட் சைக்கிள்வெர்க்ஸ் நிறுவனத்தின் முதல் மோட்டார்சைக்கிள் வரும் ஜூலை 2017 மாதத்தில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Read in Tamil about a new American motorcycle company enters india.
Story first published: Wednesday, June 14, 2017, 7:19 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark