ஒரு கிமீ-க்கு 60 பைசா இயக்கச் செலவில் பெட்ரோலுக்கு மாற்றாக ஸ்கூட்டர்களுக்கான சிஎன்ஜி கிட் அறிமுகம்..

Written By:

ஸ்கூட்டர்களில் பொருத்தத்தக்க வகையிலான பிரத்யேக இயற்கை எரிவாயு கலன்கள் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இது பெட்ரோலுக்கு மாற்றாக பயன்படுத்தத்தக்கதாகும்.

ஸ்கூட்டர்களுக்கான சிஎன்ஜி கிட் அறிமுகம்..!

உலக நாடுகள் அனைத்தும் மெல்ல மெல்ல பெட்ரோல், டீசலுக்கு மாற்றான எரிபொருளை பயன்படுத்தத் தொடங்கி வருகின்றன.

ஸ்கூட்டர்களுக்கான சிஎன்ஜி கிட் அறிமுகம்..!

கார்களில் கூட எலக்ட்ரிக், இயற்கை எரிவாயு, ஹைபிரிட் என பலதரப்பட்ட மாற்று எரிபொருள் கிடைக்கின்றது. எனினும், உலகிலேயே அதிகம் பேரால் பயன்படுத்தப்படும் இருசக்கர வாகனங்களுக்கு மாற்று எரிபொருளான சிஎன்ஜி கிட் பொருத்துவது சற்று சிரமமான காரியமாகவே இருக்கிறது.

ஸ்கூட்டர்களுக்கான சிஎன்ஜி கிட் அறிமுகம்..!

தற்போது மகராஷ்டிர மாநில அரசின் பங்களிப்புடன் செயல்பட்டு வரும் மகாநகர் காஸ் லிமிடட் என்ற பொதுத்துறை நிறுவனம் ஸ்கூட்டர்களில் பொருத்தத்தக்க வகையிலான சிஎன்ஜி கிட்களை மும்பையில் அறிமுகம் செய்துள்ளது.

ஸ்கூட்டர்களுக்கான சிஎன்ஜி கிட் அறிமுகம்..!

மும்பையில் நடந்த விழாவில் பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஸ்கூட்டர்களுக்கான சிஎன்ஜி கிட்களை அறிமுகப்படுத்தி வைத்தார்.

ஸ்கூட்டர்களுக்கான சிஎன்ஜி கிட் அறிமுகம்..!

இதில் 1.2 கிலோ கொள்ளளவு கொண்ட இரண்டு சிலிண்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு கிலோ இயற்கை எரிவாயுவை பயன்படுத்தி 120 முதல் 130 கிலோமீட்டர்கள் பயணிக்க முடியும்.

ஸ்கூட்டர்களுக்கான சிஎன்ஜி கிட் அறிமுகம்..!

இந்த சிஎன்ஜிகிட் பொருத்தப்பட்ட வாகனத்தின் மூலம் பயணிக்கும் போது கிலோமீட்டருக்கு 60 பைசா மட்டுமே இயக்கச் செலவு ஏற்படுகிறது.

ஸ்கூட்டர்களுக்கான சிஎன்ஜி கிட் அறிமுகம்..!

மேலும் இயற்கை எரிவாயுவை பயன்படுத்துவதால் பயணச் செலவு பெருமளவு குறைவதோடு, பொருளாதார அடிப்படையில் நன்மையையும் தருகிறது.

ஸ்கூட்டர்களுக்கான சிஎன்ஜி கிட் அறிமுகம்..!

மகாநகர் காஸ் லிமிடட் நிறுவனம் ஸ்கூட்டர்களுக்கான சிஎன்ஜி கிட் தயாரித்து வழங்கும் பணிக்காக இத்தாலிய நிறுவனமான லோவாடாவுடன் கைகோர்த்துள்ளது.

ஸ்கூட்டர்களுக்கான சிஎன்ஜி கிட் அறிமுகம்..!

சிஎன்ஜி கிட் தயாரித்து வழங்கும் லோவாடா மற்றும் ITUK ஆகிய நிறுவனங்கள் மட்டுமே ARAI, ICAT போன்ற அமைப்புகளின் அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள் ஆகும்.

ஸ்கூட்டர்களுக்கான சிஎன்ஜி கிட் அறிமுகம்..!

இதில் லோவாடா நிறுவனம் பல்வேறு இருசக்கர வாகன நிறுவனங்களின் 18 ஸ்கூட்டர் மாடல்களில் சிஎன்ஜி கிட் தயாரித்து வழங்க ஒப்புதல் பெற்றுள்ளது.

ஸ்கூட்டர்களுக்கானசிஎன்ஜி கிட் அறிமுகம்..!

லோவாடா நிறுவனம் கீழ்கண்ட மாடல்களுக்கு சிஎன்ஜி கிட்களை தயாரித்து வழங்குகிறது.

 • ஹீரோ டூயட்
 • ஹீரோ மேஸ்ட்ரோ
 • ஹீரோ பிளெஷர்
 • ஹோண்டா ஆக்டிவா
 • ஹோண்டா டியோ
 • மஹிந்திரா டூரோ
 • மஹிந்திரா கஸ்டோ
 • மஹிந்திரா கஸ்டோ 125
 • சுசுகி ஆக்ஸஸ்
 • சுசுகி லெட்ஸ்
 • சுசுகி ஸ்விஷ்
 • டிவிஎஸ் ஜூபிடர்
 • டிவிஎஸ் ஸ்கூட்டி ஸெஸ்ட்
 • டிவிஎஸ் வீகோ
 • வெஸ்பா
 • யமஹா ஆல்ஃபா
 • யமஹா ஃபேஸினோ
 • யமஹா ரே
ஸ்கூட்டர்களுக்கான சிஎன்ஜி கிட் அறிமுகம்..!

மகாநகர் காஸ் லிமிடட் எம்ஜிஎல் கனெக்ட் என்ற மொபைல் ஆப் ஒன்றினையும் தயாரித்துள்ளது. இதனை கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்..

ஸ்கூட்டர்களுக்கான சிஎன்ஜி கிட் அறிமுகம்..!

இதனை பயன்படுத்தி அருகில் உள்ள எல்பிஜி நிலையங்களை வாடிக்கையாளர்கள் கண்டறியலாம்.

English summary
Read in Tamil about LPG kits for scooters introduced in mumbai.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark