காஷ்மீர் டூ கன்னியாகுமரி.... சமூகநலன் வேண்டி கோவை இளைஞர்கள் செய்த விழிப்புணர்வு பயணம்..!!
காஷ்மீர் டூ கன்னியாகுமரி.... சமூகநலன் வேண்டி கோவை இளைஞர்கள் செய்த விழிப்புணர்வு பயணம்..!!
கோவையை சேர்ந்த மூன்று இளைஞர்கள் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து சிறார் வன்கொடுமைக்கு எதிரான பரப்புரையை செய்து முடித்துள்ளனர்.

பயணங்கள் எப்போதுமே சுவராஸ்யமானவை, ஆனால் அதுவே ஒரு சமூக நோக்கம் சார்ந்த சிந்தனையுடன் பயணமாக இருந்தால்?

இப்படிப்பட்ட ஒரு பயணத்தை தான் கோவையை சேர்ந்த தண்டபானி லோகநாதன், சதீஸ்குமார் மற்றும் மாதேஷ் என்ற மூன்று இளைஞர்கள் மேற்கொண்டுள்ளனர்.

குழந்தைகளுக்கு எதிராக நாடு முழுவதும் நடைபெறும் வன்கொடுமைகளுக்கு எதிரான ஒரு பரப்புரையை முன்வைத்து,
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பைக்கில் சென்று விழிப்புண்ர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளனர்.
Recommended Video


சமுதாயத்தில் பெரியளவில் இல்லை என்றாலும், சிறிதளவாவது ஒரு மாற்றம் ஏற்படுத்தும் வகையில்
மோட்டார் சைக்கிள் மூலமாக சுமார் 6000 கி.மீ பயணத்திருக்கிறார்கள் இந்த மூன்று இளைஞர்கள்.

குழந்தைகள் வன்கொடுமைக்கு எதிராகவும் தூய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தியும் கடந்த 15ம் தேதி காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் இந்த இளைஞர்கள் தங்ளது பயணத்தை தொடங்கினர்.

மூன்று மோட்டார் சைக்கிளின் மூலம் நாட்டில் பல்வேறு மாநிலங்களில் பயணித்து அங்கு உள்ள சில முக்கிய நகரங்களின் வழியாக சென்றனர்.

மக்கள் கூடும் அதிக இடங்களில் பைக்குகளை நிறுத்தி, தங்களது நோக்கதிற்கான துண்டு பிரசுரங்களை வழங்கி, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

காஷ்மீர் தொடங்கி பல்வேறு மாநிலங்களில் வழியாக தமிழகத்தின் கரூர் மாவட்டத்தை சமீபத்தில் அடைந்த இந்த இளைஞர்கள்,

அம்மாவட்டத்தின் ஆட்சியர் கோவிந்தராஜன் மற்றும் குழ்ந்தைகள் நல அலுவலர் கவிதா ஆகியோரை சந்தித்து அங்கேயும் துண்டு பிரசுரங்களை அழித்தனர்.

குழந்தைகளை தெய்வமாக பார்க்கும் இந்தியாவில் அவர்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் சோகமானவை. அதற்கு எதிராக பல்வேறு பிரச்சாரங்களை ஏற்கனவே மேற்கொண்டுள்ளார்
மூன்று இளைஞர்களில் ஒருவரான தண்டபானி லோகநாதன்.

இதை சற்று பெரிதாக மாற்ற நண்பர்கள் சதீஸ்குமார் மற்றும் மாதேஷ் உடன் இணைந்து அதை தேசியளவிலான விழிப்புணர்வு பயணம் செய்ய லோகநாதன் முடிவு செய்துள்ளார்.

மிஷன் கே டூ கே (காஷ்மீர் முதல் கன்னியாகுமர்) என்ற பெயரில் பயண தூரத்தை கருதி மூன்று பைக்குகளின் மூலம் இந்த விழிப்புணர்வு பயணத்தை தொடங்கியுள்ளனர்.

பார்சல் மூலமாக அனுப்பப்பட்ட பைக்குகள் இளைஞர்கள் தண்டபானி லோகநாதன், சதீஸ்குமார், மாதேஷ் ஆகியோரிடம் ஆகஸ்டு 14ம் தேதி கிடைத்துள்ளது.
ஆகஸ்டு 15 இந்தியாவின் சுதந்திர தினத்தன்று பல ராணுவ கட்டுபாடுகளுக்கு மத்தியில் பதற்றத்துடன் இவர்களது பயணம் தொடங்கியது.

இளைஞர்களின் நோக்கத்தை அறிந்த பல ராணுவ அதிகாரிகள், அந்த திக் திக் நிமிடங்களிலும் இவர்களுக்கு நல்ல உற்சாகத்தை வழங்கி வாழ்த்துகளை சொல்லி வழி அனுப்பி வைத்தனர்.

தென் மாநிலங்களை விட வட மாநில மக்களை அணுகுவது தான் இவர்களுக்கு சிரமாக இருந்துள்ளது. பிறகு அங்கு கிடைத்த சிலரது ன் உதவியுடன் விழிப்புணர்வை செய்துள்ளனர்.

நாளொன்றுக்கு சுமார் 700 கி.மீ பயணம் செய்து கனமழை, எஞ்சின் ஆயில் கசிவு, பைக்குகளில் தொழில்நுட்ப கோளாறு என பல பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளனர்.

அப்படிப்பட சூழ்நிலைகளில் இரண்டு நாட்கள் சாப்பிடாமல் கூட இருந்துள்ளனர். ஆனால் தொடர் உடற்பயிற்சியும், உணவுக்கட்டுபாடுகளும் தான் இளைஞர்களை உற்சாகமாக வைத்துள்ளது.

சமூக நலன் கருதி செய்த இந்த பயணம் நல்ல வெற்றி அடைந்ததாகவும். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல புதிய நண்பர்கள் கிடைத்தாகவும் இந்த இளைஞர்கள் தெரிவிக்கின்றனர்.

சிறார் வன்கொடுமைக்கும் எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம், கிடைத்திருக்கும் மேலும் புதிய நண்பர்களை கொண்டு புதிய வடிவங்களில் தொடரும் என்கிறார் தண்டபானி லோகநாதன்.


Click it and Unblock the Notifications








