சமூக நலனிற்காக விழிப்புணர்வு பயணங்கள் செய்த பிரபல பெண் பைக் ரைடர் சாலை விபத்தில் மரணம்..!!
இந்தியா முழுக்க ராயல் என்ஃபீல்டு பைக்கில் கம்பீரமாக வலம் வந்த பெண் பைக் ரைடர் மரணம்.
இந்தியா முழுக்க 38,000 கி.மீ பயணம் செய்த பிரபல பைக் ரைடரான சானா இக்பால் ஹைதராபாத்தில் நடைபெற்ற கார் விபத்தில் உயிரழந்தார்.

கடந்த செவ்வாய் அன்று அதிகாலையில் ஹைதராபாத்தின் கலி மந்திர் பகுதியில் தனது கணவருடன் சானா இக்பால் காரில் சென்றுகொண்டுயிருந்தார்.

ஃபியட் புன்ட்டோ காரை அவரது கணவர் நதீம் ஓட்ட, சானா இக்பால் உடன் பயணித்துக்கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கார் மின் கம்பம் ஒன்றின் மீது மோதியது.

இதில் சம்பவ இடத்திலேயே சானா இக்பால் உயிரழந்தார். அவரது கணவர் நதீமிற்கு பலத்த நெஞ்சு பகுதியில் பலத்த அடி ஏற்பட்டது.

சம்பவத்தை அறிந்து விரைந்த வந்த நஸ்ரிங்கீ பகுதி போலீசார் கார் அதிவேகத்தில் இயக்கப்பட்டதால் விபத்து நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

உடனே அவசர ஊர்தி வரவழைக்கப்பட்டு, பைக் ரைடர் சானா இக்பாலின் உடல் பிரதே பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. படுகாயமடைந்த அவரது கணவருக்கு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

30 வயதாகும் சானா இக்பால் சமூகத்தில் நிலவும் பல்வேறு பிரச்சனைகள் பற்றி தீர்வு காணவும், அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பல்வேறு பைக் பயணங்களை இந்தியா முழுக்க தனியாக மேற்கொண்ட சாதனை பெண் ஆவார்.

தனது ராயல் என்ஃபீல்டு புல்லட் எலெக்ட்ரா மாடல் மோட்டார் சைக்கிளில் இந்தியா முழுக்க 38,000 கி.மீ தூரம் பயணங்களை மேற்கொண்டு பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளார்.

முக்கியமாக தற்கொலைகளை தடுக்க இவர் எடுத்த செயல்பாடுகள் மற்றும் ஆற்றிய சொற்பொழிவுகள் இந்தியா முழுக்க சானா இக்பாலை அடையாளப்படுத்தியது.

தற்கொலை என்றும் தீர்வாகாது என இவர் கூறிய பொன்மொழிகளை பலரும் தங்களது வாகனங்களுக்கு பின்னர் எழுதி வைக்கும் அளவிற்கு சமூக நலனில் அக்கறை கொண்டு இருந்தார்.

விபத்தில் உயிரழப்பதற்கு முன்னர் சானா இக்பால் தனது ஃபேஸ்புக்கில் இவரது பதிவிட்டுயிருந்தார்,
"இந்தியாவில் பெண்களை விட ஆண்கள் தற்கொலை செய்துகொள்வது 3 மடங்கு அதிகமாக உள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. தற்கொலையில் பாலின சமத்துவத்தை தேடுவதை விட்டுவிட்டு அனைத்து தரப்பினரும் சமத்துவத்தை சமமாக அடைய செயல்படவேண்டும்”.


Click it and Unblock the Notifications








