சென்னையில் இரண்டாவது பெனெல்லி சூப்பர் பைக் ஷோரூம் திறப்பு!

Written By:

பெனெல்லி சூப்பர் பைக் நிறுவனத்திற்கு இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து, இந்தியாவில் தனது விற்பனை மையங்கள் எண்ணிக்கையை பெனெல்லி நிறுவனம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சென்னையில் இரண்டாவது பெனெல்லி சூப்பர் பைக் ஷோரூம் திறப்பு!

சென்னையில் தற்போது இரண்டாவது சூப்பர் பைக் விற்பனை மையத்தை பெனெல்லி நிறுவனம் திறந்திருக்கிறது. ஏற்கனவே, தேனாம்பேட்டையில் பெனெல்லி ஷோரூம் செயல்பட்டு வரும் நிலையில், இந்த புதிய ஷோரூம் அண்ணா நகரில் திறக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இரண்டாவது பெனெல்லி சூப்பர் பைக் ஷோரூம் திறப்பு!

சென்னையின் அங்கீகரிக்கப்பட்ட பெனெல்லி பைக் டீலரான 'பவர் சூப்பர் பைக்ஸ்' நிறுவனம்தான் இந்த இரண்டாவது ஷோரூமையும் அமைத்துள்ளது. இந்த புதிய ஷோரூமில் பெனெல்லி நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்யும் அனைத்து பைக்குகளும் விற்பனைக்கு கிடைக்கும்.

சென்னையில் இரண்டாவது பெனெல்லி சூப்பர் பைக் ஷோரூம் திறப்பு!

மேலும், இந்த ஷோரூமில் சர்வீஸ் மையமும் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, பைக் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறப்பான விற்பனைக்கு பிந்தைய சேவையையும் இந்த ஷோரூம் மூலமாக பெற முடியும்.

சென்னையில் இரண்டாவது பெனெல்லி சூப்பர் பைக் ஷோரூம் திறப்பு!

இந்த ஷோரூம் திறப்பு விழாவில் பங்கேற்ற டிஎஸ்கே பெனெல்லி நிறுவனத்தின் தலைவர் சிரிஷ் குல்கர்னி," சென்னையில் பெனெல்லி பைக்குகளுக்கு பெரும் வரவேற்பு இருக்கிறது. தேவை அதிகம் இருப்பதை உணர்ந்து கொண்டு இப்போது இரண்டாவது ஷோரூமை திறந்துள்ளோம்.

சென்னையில் இரண்டாவது பெனெல்லி சூப்பர் பைக் ஷோரூம் திறப்பு!

இந்த ஷோரூம் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு மிக நெருக்கமான சேவையை வழங்க முடியும். இந்த ஷோரூம் பணியாளர்கள் அனைவரும் சிறப்பான பயிற்சி பெற்றவர்கள். இதன்மூலமாக, வாடிக்கையாளர்கள் உயர்தரமான சேவை அனுபவத்தை பெற முடியும்," என்று தெரிவித்தார்.

சென்னையில் இரண்டாவது பெனெல்லி சூப்பர் பைக் ஷோரூம் திறப்பு!

பெனெல்லி டிஎன்டி 25, டிஎன்டி300, டிஎன்டி 600ஐ, டிஎன்டி600 ஜிடி, டிஎன்டி 899 மற்றும் டிஎன்டி ஆர் உள்ளிட்ட பைக் மாடல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த பைக்குகளுக்கான முன்பதிவு மற்றும் டெலிவிரி பணிகளும் இந்த ஷோரூமில் துவங்கப்பட்டுவிட்டது.

English summary
DSK Motowheels has inaugurated its second showroom for the Italian superbike brand Benelli in Cyhennai. The new outlet will showcase the entire range of DSK Benelli superbikes.
Story first published: Thursday, January 19, 2017, 10:12 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark