இந்தியாவில் ரூ. 8.52 லட்சம் விலையில் டுகாட்டி ஸ்கிராம்பிளர் மேக் 2.0 விற்பனைக்கு அறிமுகம்..!!
இந்தியாவில் ரூ. 8.52 லட்சம் விலையில் டுகாட்டி ஸ்கிராம்பிளர் மேக் 2.0 விற்பனைக்கு அறிமுகம்..!!
டுகாட்டி நிறுவனத்தின் புதிய ஸ்கிராம்பிளர் மேக் 2.0 பைக் இந்தியாவில் ரூ. 8.52 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் இந்தியா) விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

இந்த பைக்கின் தோற்றம் மற்றும் நிறத்தேர்வுகளை கலிஃபோர்னியாவை சேர்ந்த மேக் ரோலன்ட் சான்ட்ஸ் என்பவர் வடிவமைத்துள்ளார்.
Recommended Video


டுகாட்டிக்கான அனைத்து இந்திய டீலர்களிடமும் கிடைக்கும் வகையில் இந்த பைக்கின் விற்பனை ஏற்பாடாகியுள்ளது.
மேலும் ஸ்கிராம்பிளர் மேக் 2.0 பைக்கின் நிறத்தேர்வுகள் 1970'ஸ் வெஸ்டு கோஸ்ட் ஸ்டலைல் வடிவமைக்கப்பட்டுள்ளன.

தற்போது ஸ்கிராம்பிளர் ரக பைக்குகளை டுகாட்டி நிறுவனம் இந்தியாவில் ஐக்கான், கிளாசிக், ஃபுல் திராட்டிள் போன்ற வெர்ஷன்களில் வெளியிட்டு வருகிறது.

இந்த வரிசையில் டுகாட்டி வெளியிட்டுள்ள புதிய மாடல் தான் ஸ்கிராம்பிளர் மேக் 2.0 பைக். கட்டமைப்பு மற்றும் வடிவமைப்பு தேவைகளில் இது தனித்துவம் பெற்ற மாடலாக உள்ளது.

டுகாட்டி ஸ்கிராம்பிளர் மேக் 2.0 பைக்கில் கீழறக்கப்பட்ட மெல்லிய அளவிலான ஹேண்டில்பார்கள், ஃபிளாட் டிராக் ப்ரோ சீட், கருப்பு நிறத்திலான எக்ஸாஸ்ட் பைக் மற்றும் சிலிண்டர் வடிவ ஹெட்கவர்கள், கஃபே ரேஸர் பாணியிலான கூலிங் ஃபின்ஸ் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

803சிசி வி-ட்வின் எஞ்சின் கொண்ட இந்த பைக் 72.4 பிஎச்பி பவர் மற்றும் 67 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

செயல்திறன் மற்றும் வடிவமைப்பு தேவைகளில் இந்த பைக் டிரையம்ப் ஸ்டீரிட் ஸ்கிராம்பிளர் மற்றும் யமஹா எஃப்.இசட்-07 ஆகிய பைக்குகளுக்கு போட்டியாக அமையும்.

டுகாட்டி இந்தியாவின் நிர்வாக இயக்குநர் செர்ஜி கனோவாஸ் கர்ரிகா பேசும்போது, ஸ்கிராம்பிளர் ரக மாடல் பைக்கில் மேக் 2.0 மாடல் பைக் ரைடர்களுக்கு சிறந்த தொடக்கமாக அமையும்.

சமகால கட்டத்திற்கு ஏற்றவாறு தயாரிக்கப்பட்டுள்ள இந்த பைக், சிறந்த ரைடிங் திறனை வழங்கும். தற்போது மார்டன் டிரென்டிற்கு ஏற்றவாறான கட்டமைப்பும் இதில் உள்ளது என்று அவர் கூறினார்.

பார்க்க 1960 மாடல்களில் வலம் வந்த பைக் தோற்றத்தை பெற்றுள்ள டுகாட்டி ஸ்கிராம்பிளர் மேக் 2.0 , வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தேர்வாக அமையும்.

மேலும் டுகாட்டியின் தயாரிப்பு என்பதாலேயே இதற்கான வாடிக்கையாளர்கள் வட்டம் தற்போதைய நிலையில் இருந்து மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








