கவாஸாகி நிஞ்சா ஹச்2 கார்பன் பைக்கை வாங்கிய முதல் இந்தியர்
இந்தியாவில் முதல் நிஞ்சா ஹச்2 கார்பன் பைக் டெலிவரி செய்யப்பட்டுள்ளது.அது குறித்த தகவல்களை காணலாம்.
இந்திய சாலைகளில் தொடர்ந்து சூப்பர் பைக்குகளின் வரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. மிகவும் தனித்துவமான சூப்பர் பைக்குகளை வாங்குவதில் இந்தியர்கள் திவிரம் காட்டத் துவங்கியுள்ளனர். அந்த வரிசையில் தற்போது இந்தியாவிலேயே முதல் முறையாக 'கவாஸாகி நிஞ்சா எஃப்2 கார்பன்' சூப்பர் பைக்கை ஒருவர் வாங்கியுள்ளார்.

கடந்த 2016ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் ‘டுகாடி 1299 பனிகல் எஸ் அனிவர்சாரியோ' என்ற லிமிடெட் எடிஷன் பைக், இந்த ஆண்டின் தொடக்கத்தில் ‘எம் வி அகஸ்டா எஃப்4 ஆர்சி' ஆகிய இத்தாலிய சூப்பர் பைக்குகள் முதல் முதலாக இந்தியாவிற்கு வருகை புரிந்தது.

தற்போது இந்த வரிசையில், ஜப்பானின் பிரபல நிறுவனமான கவாஸாகியின் லிமிடெட் எடிசன் ‘நிஞ்சா ஹச்2 கார்பன்'பைக் ஒன்றை குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத்தைச் சேர்ந்த ஒருவர் வாங்கியுள்ளார்.

‘கவாஸாகி எஃப்2 கார்பன்' ஒரு லிமிடட் எடிஷன் சூப்பர் பைக் ஆகும். உலகிலேயே மொத்தம் 120 பைக்குகள் தான் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று தான் தற்போது இந்தியரால் வாங்கப்பட்டுள்ளது.

‘கவாஸாகி எஃப்2 கார்பன்' ஒரு லிமிடட் எடிஷன் சூப்பர் பைக் ஆகும். உலகிலேயே மொத்தம் 120 பைக்குகள் தான் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று தான் தற்போது இந்தியரால் வாங்கப்பட்டுள்ளது.

தோற்றத்தில் மட்டும் மிரட்டலாக இல்லாமல், பல்வேறு சிறப்புகளும் இதில் உள்ளது. ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டிடிஎக்ஸ் ஷாக் அப்சார்பர்கள், பைக்கின் வேகத்தை உடனடியாக குறைக்க உதவும் டவுன் ஷிஃப்டர் வசதி போன்றவை உள்ளது.

ஹச்2 கார்பன் பைக்கில் 4 சிண்டர்கள் கொண்ட 998சிசி சூப்பர்சார்ஜுடு லிக்விட் கூல்டு எஞ்சின் உள்ளது. இது அதிகபட்சமாக 197.3 பிஹச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாகும். 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் இதில் உள்ளது.

மணிக்கு அதிகபட்சமாக 300 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்ட இந்த பைக்கின் விலை ரூ.39.80 லட்சம் (டெல்லி எக்ஸ் ஷோரூம்) ஆகும்.
கேடிஎம் நிறுவனத்தின் புதிய ட்யூக் 390 பைக்கின் படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்:


Click it and Unblock the Notifications








