2018ல் ஹார்லி டேவிட்சன் பைக்குகளில் புதிய தொழில்நுட்பம் பெற்ற எஞ்சின் அறிமுகம்: முழுத் தகவல்கள்..!!

2018ல் ஹார்லி டேவிட்சன் பைக்குகளில் புதிய தொழில்நுட்பம் பெற்ற எஞ்சின் அறிமுகம்: முழுத் தகவல்கள்..!!

By Azhagar

அமெரிக்காவை சேர்ந்த ஹார்லி-டேவிட்சன் பைக் தயாரிப்பு நிறுவனம் அடுத்து வெளியிடும் பைக்குகளில் புதிய தொழில்நுட்பம் பெற்ற எஞ்சின்கள் இடம்பெற்றிருக்கும் என்று அறிவித்துள்ளது.

புதிய எஞ்சின் தொழில்நுட்பத்திற்கு தாவும் ஹார்லி டேவிட்சன்..!

அதன்படி, அந்நிறுவனம் மேம்படுத்தப்பட்ட 2018 டைனா மற்றும் சாஃப்டெயில் பைக் மாடல்களில் புதிய திறன் மற்றும் செயல்திறன் பெற்ற எஞ்சின் பொருத்தப்படவுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.

புதிய எஞ்சின் தொழில்நுட்பத்திற்கு தாவும் ஹார்லி டேவிட்சன்..!

இதுகுறித்து வெளியான சில தகவல்களில் டைனா மற்றும் சாஃப்டெயில் சீரிஸ் வாகனங்களில் மில்காவுக்கீ 8வி ட்வின் எஞ்சின்கள் இடம்பெறுவது நமக்கு தெரியவருகிறது.

புதிய எஞ்சின் தொழில்நுட்பத்திற்கு தாவும் ஹார்லி டேவிட்சன்..!

காலங்காலமாக பின்பற்றி வரும் 45 டிகிரி வி ஏங்கில் மற்றும் தற்போதைய காலக்கட்டத்திற்கு ஏற்றவாறான புஷ் ராஷ் வால்வ் ஆகியவற்றின் கட்டமைப்புகளை புதிய மில்காவுக்கீ 8வி ட்வின் எஞ்சின் பெற்றிருக்கும்.

Recommended Video

2017 DSK Benelli 302 R Launched In Inida | In Tamil - DriveSpark தமிழ்
புதிய எஞ்சின் தொழில்நுட்பத்திற்கு தாவும் ஹார்லி டேவிட்சன்..!

எஞ்சினில் உள்ள ஒவ்வொரு சிலிண்டரும் 4 வால்வுகள் மற்றும் ட்வின்-கூல்டு வெர்ஷனான காற்றை குளிர்விக்கும் சிலிண்டர் தலைப்பை பெற்றிருக்கும்.

2018ல் வெளியிடப்படவுள்ள இந்த பைக்குகளில் மில்காவுக்கீ 8வி ட்வின் எஞ்சின்கள் மூன்று வித அளவுகளில் இடம்பெற்றும் வகையில் ஹார்லி டேவிட்சன் அமைக்கிறது.

புதிய எஞ்சின் தொழில்நுட்பத்திற்கு தாவும் ஹார்லி டேவிட்சன்..!

அதில் '107' என்று ஹார்லி-டேவிட்சன் நிறுவனம் குறிப்பிடும் 1746சிசி திறன் பெற்ற ஒரு எஞ்சின் அதிகப்பட்சமாக 92 பிஎச்பி பவர் வழங்கும் ஆற்றல் கொண்டது.

புதிய எஞ்சின் தொழில்நுட்பத்திற்கு தாவும் ஹார்லி டேவிட்சன்..!

மேலும் '114' என்று பெயர்கொண்ட 1868சிசி திறன் கொண்ட எஞ்சின் 101 பிஎச்பி பவரையும், மூன்றாவதான 117 என்ற 1923சிசி திறன் கொண்ட எஞ்சின் 105 பிஎச்பி பவரை வழங்கும்.

புதிய எஞ்சின் தொழில்நுட்பத்திற்கு தாவும் ஹார்லி டேவிட்சன்..!

மில்காவுக்கீ 8வி ட்வின் எஞ்சின் பிரேக்அவுட், சாஃப்டெயில் டீலக்ஸ், பேட் பாய், ஹெரிடேஜ் சாஃப்டெயில் கிளாசிக், லோ ரைடர், சாஃப்டெயில் ஸ்லிம், ஸ்டீர்ட் பாப் மற்றும் ஃபேட் பாப் போன்ற ஹார்லி டேவிட்சனின் மற்ற மாடல் பைக்குகளிலும் இடம்பெறுகிறது.

புதிய எஞ்சின் தொழில்நுட்பத்திற்கு தாவும் ஹார்லி டேவிட்சன்..!

இந்த எஞ்சின் திறன் பொருத்தப்பட்ட பைக்குகள் 2018ம் ஆண்டில் அடுத்தடுத்து இந்தியா உடன் சேர்ந்து சர்வதேச சந்தைகளிலும் வெளிவரும் என்று தெரிகிறது.

புதிய எஞ்சின் தொழில்நுட்பத்திற்கு தாவும் ஹார்லி டேவிட்சன்..!

2018ம் ஆண்டை ஹார்லி டேவிட்சன் குறிவைத்து தனது புதிய தயாரிப்பு ரகங்களை இறக்க காரணம், அந்நிறுவனம் தனது 115வது ஆண்டு விழாவை அடுத்த ஆண்டில் கொண்டாடுகிறது.

புதிய எஞ்சின் தொழில்நுட்பத்திற்கு தாவும் ஹார்லி டேவிட்சன்..!

அதனால் தான் இவ்வாறான அடுத்தடுத்த தயாரிப்புகளை அந்நிறுவனம் அதிரடியாக அறிமுகப்படுத்துகிறது.

மேலும் 2018ல் ஹார்லி டேவிட்சனின் 115வது ஆண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு புதிய மாடல் பைக்குகளும் அறிமுகமாகலாம்.

புதிய எஞ்சின் தொழில்நுட்பத்திற்கு தாவும் ஹார்லி டேவிட்சன்..!

மில்காவுக்கீ 8வி ட்வின் எஞ்சினை ஆட்டோமொபைல் துறைக்கு அறிமுகப்படுத்தும் ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் முயற்சி பாராட்டத்தக்கது.

புதிய எஞ்சின் தொழில்நுட்பத்திற்கு தாவும் ஹார்லி டேவிட்சன்..!

மேம்படுத்தப்பட்ட செயல்திறனை வழங்கும் விதத்தில் மில்காவுக்கீ 8வி ட்வின் எஞ்சின் பராம்பரிய மற்றும் தற்போதைய தொழில்நுட்பத்தையும் ஒருசேர பெற்றிருக்கும்.

Most Read Articles
English summary
Read in Tamil: American motorcycle manufacturer Harley-Davidson is all set to update its product portfolio. Click for Details...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X