ஹார்லி டேவிட்சன் ஃபேட்பாய் மற்றும் ஹெரிடேஜ் சாஃப்ட்டெயில் க்ளாசிக் விலை அதிரடி குறைப்பு!

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் இரண்டு மோட்டார்சைக்கிள்களின் விலையை அதிரடியாக குறைத்துள்ளது ஹார்லி டேவிட்சன் நிறுவனம். அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

ஹார்லி டேவிட்சன் ஃபேட்பாய் மற்றும் சாஃப்ட் டெயில் க்ளாசிக் மோட்டார்சைக்கிள்களின் விலை இந்தியாவில் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

 2 ஹார்லி மோட்டார்சைக்கிள்களின் விலை அதிரடி குறைப்பு!

ஹார்லி டேவிட்சன் ஃபேட்பாய் மோட்டார்சைக்கிள் ரூ.17.01 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், சாஃப்ட் டெயில் க்ளாசிக் மோட்டார்சைக்கிள் ரூ.18.50 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

 2 ஹார்லி மோட்டார்சைக்கிள்களின் விலை அதிரடி குறைப்பு!

இந்த நிலையில், ஹார்லி டேவிட்சன் ஃபேட்பாய் மோட்டார்சைக்கிள் விலை தற்போது ரூ.14.99 லட்சமாகவும், சாஃப்ட்டெயில் க்ளாசிக் மோட்டார்சைக்கிள் விலை ரூ.15.99 லட்சமாகவும் அதிரடியாக குறைக்கப்பட்டு இருக்கிறது.

 2 ஹார்லி மோட்டார்சைக்கிள்களின் விலை அதிரடி குறைப்பு!

இந்த விலை குறைப்பு செப்டம்பர் 1 முதலே அமலுக்கு வந்துவிட்டதாகவும் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Recommended Video

Triumph Street Scrambler Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
 2 ஹார்லி மோட்டார்சைக்கிள்களின் விலை அதிரடி குறைப்பு!

இந்த விலை குறைப்பு தவிர்த்து, வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் விதத்தில் புதிய கடன் வசதி திட்டத்தையும் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

 2 ஹார்லி மோட்டார்சைக்கிள்களின் விலை அதிரடி குறைப்பு!

புல்லட் இஎம்ஐ என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் இந்த புதிய கடன் திட்டம் மூலமாக மாதாந்திர தவணை தொகை வெகுவாக குறையும் என்று அந்நிறுவனம் கூறி இருக்கிறது.

 2 ஹார்லி மோட்டார்சைக்கிள்களின் விலை அதிரடி குறைப்பு!

புதிய கடன் திட்டத்தின்படி, ஹார்லி டேவிட்சன் ஃபேட்பாய் மோட்டார்சைக்கிள் ரூ.14,999 மாதாந்திர தவணைத் திட்டத்திலும், சாஃப்ட் டெயில் க்ளாசிக் மோட்டார்சைக்கிள் ரூ.15,999 மாதாந்திர தவணைத் திட்டத்திலும் கிடைக்கும்.

 2 ஹார்லி மோட்டார்சைக்கிள்களின் விலை அதிரடி குறைப்பு!

சமீப காலமாக ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் விற்பனை வெகுவாக குறைந்து வருகிறது. இதனால், அந்த நிறுவனம் மிகவும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. இந்த நெருக்கடியை போக்கி, விற்பனையை அதிகரிக்க இந்த சிறப்பு சேமிப்பு திட்டங்களை ஹார்லி டேவிட்சன் நிறுவனம் அறிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, September 9, 2017, 16:35 [IST]
English summary
Harley-Davidson India has slashed the prices of the Fat Boy and Heritage Softail Classic models in India. Post price reduction, the Harley-Davidson Fat Boy will now cost Rs 14,99,990 and the Heritage Softail Classic will cost Rs 15,99,990.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+