ஹார்லி டேவிட்சன் 50 புதிய மாடல்களை அறிமுகப்படுத்த திட்டம்!

Written By:

அமெரிக்காவைச் சேர்ந்த மோட்டார் சைக்கிள் தயாரிக்கும் நிறுவனமான ஹார்லி டேவிட்சனின் மோட்டார் சைக்கிள்கள் பைக் பிரியர்களின் கனவு வாகனமாக உள்ளது. நூற்றாண்டுக்கும் மேலாக சூப்பர் பைக்குகளை தயாரித்து வரும் ஹார்லி டேவிட்சன், அடுத்த 5 ஆண்டுகளில் 50 புதிய பைக் மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

ஹார்லி டேவிட்சன் 50 புதிய பைக் மாடல்கள் வெளியிட திட்டம்!

பெரும்பான்மையோருக்கு ஹார்லி டேவிட்சன் பைக்குகள் சென்றடையும் வகையில் அந்நிறுவனம் திட்டம் தீட்டியுள்ளது. இதில் புதிய டீலர்ஷிப் வழங்குவது, அடுத்த 5 ஆண்டுகளில் 50 புதிய மாடல்களை அறிமுகப்படுத்துவது உள்ளிட்ட திட்டங்கள் இடம்பெற்றுள்ளது.

ஹார்லி டேவிட்சன் 50 புதிய பைக் மாடல்கள் வெளியிட திட்டம்!

இது தொடர்பாக ஹாட்லி டேவிட்சன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மேட் லேவடிட்ச் கூறும்போது, " 8 சிலிண்டர்களுடன் அறிமுகப்படுத்திய ‘மில்வாகி' மாடலுக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்ததாகவும், வரும் ஆண்டுகளிலும் விற்பனையில் சாதிக்கும் வகையில் புதிய மாடல்கள் அறிமுகப்படுத்தப்படும்," என்றார்.

ஹார்லி டேவிட்சன் 50 புதிய பைக் மாடல்கள் வெளியிட திட்டம்!

உலகளவில் ஹார்லி டேவிட்சன் பைக்குகள் அந்தஸ்தின் அடையாளமாக விளங்கி வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும் 40 புதிய டீலர்களை நியமித்துள்ள ஹார்லியின் விற்பனை கடந்த ஆண்டில் 2.3% உயர்ந்துள்ளது.

ஹார்லி டேவிட்சன் 50 புதிய பைக் மாடல்கள் வெளியிட திட்டம்!

இந்தியாவில் தனது செயல்பாடுகளை ஹார்லி டேவிட்சன் 2009-ம் ஆண்டு ஆரம்பித்தது. ஹரியாணா மாநிலம் குர்கானை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் ஹார்லி டேவிட்சன் இந்தியா, புதுடெல்லி, கொல்கத்தா, சென்னை, கோவை, ஹைதராபாத், பெங்களூரு, கொச்சி என நாட்டின் முக்கிய நகரங்களில் டீலர்களை கொண்டுள்ளது.

ஹார்லி டேவிட்சன் 50 புதிய பைக் மாடல்கள் வெளியிட திட்டம்!

ஹார்லி டேவிட்சன் என்றாலே அதிக விலை கொடுக்க வேண்டும் என்று தயங்கிய பலர் 5 லட்சத்தில் 750 சிசி வண்டியை ஓட்ட முடியும் என்ற நிலை வந்ததால், இப்போது இதனை விரும்பி வாங்குகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

டிரையம்ப் பான்வில் பாபர் மோட்டார் சைக்கிளின் படங்கள்:

English summary
The success of the Milwaukee-Eight engine has paved the way to launch 50 new models from Harley-Davidson.
Story first published: Saturday, February 18, 2017, 15:21 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark