இருசக்கர வாகனங்கள் விலையை அதிகரிப்பதாக ஹீரோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு... காரணம் இதுதான்..!!

இருசக்கர வாகனங்கள் விலையை அதிகரிப்பதாக ஹீரோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு... காரணம் இதுதான்..!!

By Azhagar

இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகார்ப் ஜனவரி 2018 முதல் தனது பைக்குகளின் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.

2018 முதல் புதிய விலையில் ஹீரோ மோட்டார் சைக்கிள்கள்..!!

வகானங்களுக்கான மூல பொருட்கள் உற்பத்தி விலை அதிகரித்திருப்பதன் காரணமாக ஹீரோ நிறுவனம் தனது தயாரிப்புகளின் விலையை உயர்த்துகிறது.

2018 முதல் புதிய விலையில் ஹீரோ மோட்டார் சைக்கிள்கள்..!!

இதன்காரணமாக வரும் புத்தாண்டு 2018 ஜனவரி முதல் ஹீரோவின் பைக்குகள் ரூ. 400 முதல் விலை அதிகமாக விற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018 முதல் புதிய விலையில் ஹீரோ மோட்டார் சைக்கிள்கள்..!!

நமது நாட்டில் ஹீரோவின் பைக் மாடல்கள் ஹெச்.எஃப் டீலர் பிளஷர் முதல் கரிஷ்மா இசட்.எம்.ஆர் வரை நீள்கின்றன. இதில் ஹீரோ ஹெச்.டீலக்ஸ் பைக் ரூ.43,316 விலை பெறுகிறது.

2018 முதல் புதிய விலையில் ஹீரோ மோட்டார் சைக்கிள்கள்..!!

அதேபோல கரிஷ்மா இசட்.எம்.ஆர் ரூ.1.07 லட்சம் மதிப்பில் விற்கப்படுகிறது. ஹீரோ பைக்குகளுக்கு குறிப்பிட்டுள்ள விலை அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் டெல்லி மதிப்பில் இடம்பெற்றுள்ளது.

2018 முதல் புதிய விலையில் ஹீரோ மோட்டார் சைக்கிள்கள்..!!

இதுதவிர ஹீரோ ஃபேஷன் ப்ரோ, ஃபேஷன் எக்ஸ்.ப்ரோ மற்றும் சூப்பர் ஸ்பிளெண்டர் என மூன்று புதிய வாகனங்களை வெளியிட்டுள்ளது.

உற்சாகம் அளிக்கக்கூடிய அம்சங்கள் மற்றும் கவர்ந்திழுக்கும் வடிவமைப்புகளுடன், ஹீரோவின் புதிய மாடல் பைக்குகள் காட்சியளிக்கின்றன.

Recommended Video

New 2018 Passion XPRO Unveiled - DriveSpark
2018 முதல் புதிய விலையில் ஹீரோ மோட்டார் சைக்கிள்கள்..!!

ஹீரோவின் புதிய பேஷன் ப்ரோ, பேஷன் எக்ஸ்.ப்ரோ மற்றும் சூப்பர் ஸ்பிளெண்டர் பைக்குகள் ஆகியவை இந்திய சந்தையில் ஜனவரி 2018 முதல் விற்பனைக்கு வருகின்றன.

2018 முதல் புதிய விலையில் ஹீரோ மோட்டார் சைக்கிள்கள்..!!

அதேபோல அதற்குரிய விலைப்பட்டியலும் அன்றே அறிவிக்கப்படவுள்ளன. இந்தியாவின் மோட்டார் சைக்கிள் சந்தையில் 2018ம் ஆண்டிற்கான விலை ஏற்றத்தை அறிவித்துள்ள முதல் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாக ஹீரோ உள்ளது.

2018 முதல் புதிய விலையில் ஹீரோ மோட்டார் சைக்கிள்கள்..!!

முன்னதாக இந்தியாவில் கார் விற்பனையில் முன்னிலை பெற்று வரும் மஹிந்திரா, ஸ்கோடா, ஃபோர்டு, ஜீப், ஃபோக்ஸ்வேகன், நிஸான், டாடா மோட்டார்ஸ், இசுஸு மற்றும் டொயோட்டா ஆகிய நிறுவனங்கள் ஏற்கனவே தங்களது தயாரிப்புகளுக்கான விலை ஏற்றத்தை அறிவித்துவிட்டன.

2018 முதல் புதிய விலையில் ஹீரோ மோட்டார் சைக்கிள்கள்..!!

விலையேற்றம் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ள ஹீரோ, அதில் ரூ. 400 வரை ஒவ்வொரு பைக் மாடலுக்கு விலை ஏற்றம் இருக்கும். இந்த விலை சந்தை நிலவரம் மற்றும் மாடல்களை பொறுத்து மாறலாம் என தெரிவித்துள்ளது.

2018 முதல் புதிய விலையில் ஹீரோ மோட்டார் சைக்கிள்கள்..!!

இந்தியாவில் இருசக்கர வாகன விற்பனையில் ஹீரோ முதன்மையான வரவேற்பை பெற்று வரும் நிறுவனம். 2018ம் ஆண்டிற்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்த விலை ஏற்றம் குறைந்த மதிப்பில் மட்டுமே உள்ளது.

2018 முதல் புதிய விலையில் ஹீரோ மோட்டார் சைக்கிள்கள்..!!

அதன் காரணமாக ஹீரோவின் விற்பனை திறனை அது பாதிக்காது என்று சொல்லப்பட்டுள்ளது. கம்யூட்டார் மோட்டார் சைக்கிள் செக்மென்டை தொடர்ந்து ஹீரோ விரைவில் ப்ராஃபர்மன்ஸ் மோட்டார் சைக்கிள் செக்மென்டில் கால்பதிக்கவுள்ளது.

2018 முதல் புதிய விலையில் ஹீரோ மோட்டார் சைக்கிள்கள்..!!

அதற்கு அச்சாரம் அமைக்கும் விதமாக ஹீரோவின் புதிய எக்ஸ்ட்ரீம் 200 எஸ் மோட்டார் சைக்கிள் 2018 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending DriveSpark YouTube Videos

Subscribe To DriveSpark Tamil YouTube Channel - Click Here

More from DriveSpark

Article Published On: Saturday, December 23, 2017, 8:30 [IST]
English summary
Read in Tamil: Hero MotoCorp To Increase Prices Across The Range From 2018. Click for Details...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+