அக்டோபர் மாத விற்பனையில் சரிவை சந்தித்துள்ள ஹீரோ.... 4.8% விற்பனையை இழந்தது..!!
அக்டோபர் மாத விற்பனையில் சரிவை சந்தித்துள்ள ஹீரோ.... 4.8% விற்பனையை இழந்தது..!!
ஹீரோ நிறுவனத்தின் இருசக்கர வாகனங்கள் தயாரிப்பு பிரிவு, இந்தியாவின் முதன்மையாக ஆட்டோ தயாரிப்பு நிறுவனமாக இருந்து வருகிறது.

கடந்த மாத விற்பனையில் சுமார் 631,105 எண்ணிக்கையிலான டூ-வீலர்களை ஹீரோ இந்தியா முழுவதும் விற்றுள்ளது.

ஆனால் 2016 அக்டோபர் ஆண்டோடு ஒப்பிடும் போது, ஹீரோ சுமார் 663,153 டூ-வீலர்களை விற்பனை செய்திருந்தது.

இதன்மூலம் இந்தாண்டிற்கான அக்டோபர் மாத விற்பனையில் ஹீரோ சுமார் 6 சதவீத வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Recommended Video


ஆனால் நடந்து முடிந்த பண்டிகை கால விற்பனையில், ஹீரோ 20 லட்சம் வாகனங்களை விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையில் இந்தாண்டிற்கான கால் ஆண்டு விற்பனை கணக்கெடுப்பின்படி ஹீரோ நல்ல விற்பனை திறனையே பெற்றுள்ளது.
Trending On Drivespark

இதுகுறித்து ஹீரோவின் விற்பனை பிரிவு தலைவர் அசோக் பேசின் கூறும்போது, பண்டிகை கால விற்பனையில் 2 லட்ச வாகனங்களை விற்பனை செய்திருப்பது ஹீரோவிற்கு மிக மகிழ்ச்சி என்று தெரிவித்தார்.

சில்லரை வணிகத்தில் ஒரே நாளில் சுமார் 3 லட்சம் வாகனங்களை விற்றுள்ள நிறுவனம் என்ற பெயரையும் அக்டோபரில் ஹீரோ மோட்டார்கார்ப் அடைந்துள்ளது.

ஹீரோவின் ஸ்பெளண்டர், கிளாமர், பேஷன், ஹெச்.எஃப் டீலர்க்ஸ், டூயட், மேஸ்ட்ரோ எட்ஜ் மற்றும் பிளஷர் ஸ்கூட்டர்கள் ஹீரோவிற்கு இந்த மாதத்தில் நல்ல வருவாயை ஈட்டி தந்துள்ளன.


Click it and Unblock the Notifications








