டூ-வீலர் விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டிய ஹோண்டா ஆக்டிவா... முழுத் தகவல்கள்..!!

டூ-வீலர் விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டிய ஹோண்டா ஆக்டிவா... முழுத் தகவல்கள்..!!

By Azhagar

இந்தியாவில் வரவேற்பு பெற்ற ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் கடந்த நவராத்திரி பண்டிகையின் போது 50,000 என்ற எண்ணிக்கையில் விற்று தீர்ந்தது.

விற்பனையில் புதிய சாதனை படைத்த ஹோண்டா ஆக்டிவா..!!

தற்போது இந்த பிரபலமான ஸ்கூட்டர், இந்திய சந்தையில் மேலும் ஒரு மைல்கல்லை எட்டியிருப்பதாக ஹோண்டா நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

விற்பனையில் புதிய சாதனை படைத்த ஹோண்டா ஆக்டிவா..!!

இந்தியாவில் கடந்த ஏழு வருடங்களாக நடைபெற்ற இருசக்கர வாகன விற்பனையில் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் மட்டும் சுமார் 20 லட்சம் என்ற எண்ணிக்கையில் விற்பனை ஆகியுள்ளது.

விற்பனையில் புதிய சாதனை படைத்த ஹோண்டா ஆக்டிவா..!!

இதுபோன்ற ஒரு மைல்கல் சாதனை வேறு எந்த நிறுவனத்திற்கும் நடந்தது கிடையாது. ஹோண்டா ஆக்டிவாவிற்கான விற்பனை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே தான் உள்ளது.

விற்பனையில் புதிய சாதனை படைத்த ஹோண்டா ஆக்டிவா..!!

புள்ளிவிவரங்கள் அடிப்படையில், ஒவ்வொரு 9 நொடிக்கும் புதிய ஆக்டிவா ஸ்கூட்டர் இந்தியாவில் விற்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து இந்தியக் குடும்பங்களில் ஹோண்டா ஆக்டிவாவிற்கான தேவை இருந்துக்கொண்டே தான் உள்ளது.

விற்பனையில் புதிய சாதனை படைத்த ஹோண்டா ஆக்டிவா..!!

ஹோண்டா போன்ற நிறுவனத்தின் தயாரிப்பாக இருந்தாலும் கூட, செயல்பாடுகள் மற்றும் கட்டுபடியான விலை என்பதால் மட்டுமே ஆக்டிவா இத்தகைய நிலையை அடைந்துள்ளது.

விற்பனையில் புதிய சாதனை படைத்த ஹோண்டா ஆக்டிவா..!!

2012-13ம் நிதியாண்டில் 7.3 லட்சம் ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்பனை ஆகியுள்ளன. ஆனால் அதுவே 2017-18ம் ஆண்டில் சுமார் 20 லட்சம் விற்பனையை அடைந்துள்ள. 180 சதவீத அபார வளர்ச்சி.

விற்பனையில் புதிய சாதனை படைத்த ஹோண்டா ஆக்டிவா..!!

முதன்முதலாக 2001ம் ஆண்டில் 102சிசி எஞ்சினுடன் இந்தியாவில் அறிமுகமானது ஆக்டிவா ஸ்கூட்டர். அப்போதே இது 50,000 என்ற எண்ணிக்கையில் விற்பனை திறனை அடைந்தது.

விற்பனையில் புதிய சாதனை படைத்த ஹோண்டா ஆக்டிவா..!!

பிறகு 2004-05 வரையிலான ஆண்டில் 5,00,000 மற்றும் அடுத்தாண்டில் 10,00,000 என்ற எண்ணிக்கைகளில் ஆக்டிவாவின் விற்பனை உயர்ந்தது.

விற்பனையில் புதிய சாதனை படைத்த ஹோண்டா ஆக்டிவா..!!

2009ம் ஆண்டில் ஆக்டிவா புதுமையான அம்சங்கள் கொண்டு தயாரிக்கப்பட்டும் 102.9சிசி எஞ்சினுடன் விற்பனைக்கு வந்தது. அதிலிருந்த சிபிஎஸ் மற்றும் டூப்லெஸ் டயர் தேவைகள் வாடிக்கையாளர்களிடம் வரவேற்பை பெற்றன.

விற்பனையில் புதிய சாதனை படைத்த ஹோண்டா ஆக்டிவா..!!

2012-13ம் ஆண்டில் ஆக்டிவா 50,00,000 எண்ணிக்கையில் விற்பனை ஆனது. 2004ல் இந்த ஸ்கூட்டரில் உருவாக்கப்பட்ட எரிவாயு சிக்கனத்திற்கான ஹோண்டா ஈகோ தொழில்நுட்பம் பெரிய பாராட்டுக்களை வாடிக்கையாளர்கள் மத்தியில் வாங்கி குவித்தது.

விற்பனையில் புதிய சாதனை படைத்த ஹோண்டா ஆக்டிவா..!!

சமீபத்தில் வெளியிடப்பட்ட ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரின் மேம்படுத்த மாடல் பிஎஸ் 4 எஞ்சின், தானியங்கி முகப்பு விளக்குகள், புதிய சார்ஜிங் போர்டுகள் மற்றும் புதிய நிறங்கள் தேர்வுகள் என கவர்ந்திழுக்கும் அம்சங்களை பெற்றிருந்தன.

விற்பனையில் புதிய சாதனை படைத்த ஹோண்டா ஆக்டிவா..!!

இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு இந்திய குடும்பங்களும் கொண்டாடப்படும் ஸ்கூட்டராக மாறி வருகிறது ஹோண்டா ஆக்டிவா.

விற்பனையில் புதிய சாதனை படைத்த ஹோண்டா ஆக்டிவா..!!

பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள் என பல தரப்பு மக்கள் ஆக்டிவா ஸ்கூட்டரின் ரசிகர்களாக உள்ளனர். இதை நாம் நேரிலேயே பார்க்கிறோம்.

விற்பனையில் புதிய சாதனை படைத்த ஹோண்டா ஆக்டிவா..!!

ஆஃப்டர்-சேல்ஸ் விற்பனையில் கூட ஹோண்டா ஆக்டிவா பெரிய இடத்தை பெற்றுள்ளது. இதனால் இந்த வாகனத்திற்கான வளர்ச்சி என்பது பெரிய தொடர்ந்து முன்னேற்றம் காணும் வகையில் தான் உள்ளது.

Most Read Articles
English summary
Read in Tamil: Honda Activa the popular scooter has added another milestone to its name in the Indian market. Click for Details...
Story first published: Friday, November 24, 2017, 12:54 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X