ஜிஎஸ்டி-க்கு அப்பால் விலை குறைந்த ஹோண்டா ஆக்டிவா..!!
ஜிஎஸ்டி-க்கு அப்பால் விலை குறைந்த ஹோண்டா ஆக்டிவா
இந்தியாவில் அதிக விற்பனை திறனை பெற்ற வாகன மாடல்கள் பல ஜி.எஸ்.டி நடைமுறைப்படுத்தப்பட்ட பின், விலை குறைந்துள்ளன. இதில் ஹோண்டாவின் ஹிட் மாடலான ஆக்டிவா ஸ்கூட்டரின் விலையும் குறைந்துள்ளது.

350சிசி திறன் பெற்ற இருசக்கர வாகனங்கள் இதுவரையில் 30 சதவீத வரி மதிப்பில் இருந்து வந்தது. தற்போது இவை ஜிஎஸ்டி-க்கு கீழ் 28 சதவீத அளவில் வரியை பெறுகின்றன.

இதன் காரணமாக இந்தியாவின் அதிக விற்பனை திறன் பெற்ற ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரின் விலை கனிசமாக குறைந்துள்ளது.

பெரியளவில் முந்தையை விலையில் இருந்து குறையவில்லை என்றாலும், ஆக்டிவா ஸ்கூட்டர் விலை குறைந்திருப்பது பலரது கவனத்தை பெற்றுள்ளது.

ஜிஎஸ்டி-க்கு பிறகு ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரின் விலை (எக்ஸ்ஷோரூம் டெல்லி)
| மாடல் | ஜிஎஸ்டி-க்கு முன் இருந்த விலை | ஜிஎஸ்டி-க்கு பிறகான விலை | விலையில் உள்ள வேறுபாடு |
| ஹோண்டா ஆக்டிவா 4G | ரூ. 51,172 | ரூ. 50,730 | ரூ. 442 |
| ஹோண்டா ஆக்டிவா 125 | ரூ. 61804 | ரூ. 61361 | ரூ. 443 |

ஜிஎஸ்டி-யால் ஆக்டிவா 4ஜி ஸ்கூட்டரின் விலை ரூ.442 வரை குறைந்துள்ளது. இதன்மூலம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் இதனுடைய விலை ரூ.50,730 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல ஆக்டிவா 125 ஸ்கூட்டர் விலையில் ரூ.443 வரை குறைந்துள்ளது. டெல்லி எக்ஸ் ஷோரூம் படி இதனுடைய விலை இது ரூ.61,361ஆக உள்ளது.

இந்தியாவில் ஆக்டிவா ஸ்கூட்டர் விற்பனை அதிகளவில் உள்ளதற்கு காரணம் அதனுடைய திறன் தான். 109.199சிசி திறன் பெற்ற ஆக்டிவா ஸ்கூட்டரின் எஞ்சின் 8 பிஎச்பி பவரை வழங்கும்.
ஆக்டிவா 125 ஸ்கூட்டர் 124.9சிசி திறன் பெற்ற எஞ்சின் கொண்டது. இது 8.52 பிஎச்பி பவரை தர வல்லது.

ஹோண்டா ஆக்டிவா சிரீஸ் ஸ்கூட்டர்களை தொடர்ந்து அந்நிறுவனத்தின் மற்றோரு அதிக விற்பனை திறனை பெற்ற டியோ ஸ்கூட்டரும் ஜிஎஸ்டி அமலாக்கத்தால் விலை குறைந்துள்ளது.

ஹோண்டா டியோவின் விலையில் ரூ. 328 குறைந்து தற்போது டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலையில் ரூ.49,239-க்கு விற்பனை ஆகிறது.

ஜிஎஸ்டியால் ஆக்டிவா மற்றும் டியோ ஸ்கூட்டர்களின் விலையில் பெரியளவில் மாற்றம் இல்லை என்றாலும், இந்த மாடல்களின் விற்பனை திறன் மேலும் அதிகரிக்க இது ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications








