2018 ஆட்டொ எக்ஸ்போவில் ராயல் என்ஃபீல்டுக்கு போட்டியாக ஹோண்டா களமிறக்கும் பைக் இதுதான்..!!

2018 ஆட்டொ எக்ஸ்போவில் ராயல் என்ஃபீல்டுக்கு போட்டியாக ஹோண்டா களமிறக்கும் பைக் இதுதான்..!!

By Azhagar

2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் கிளாசிக் 350 மாடல் பைக்கிற்கு போட்டியாக ஹோண்டா புதிய ரக பைக் மாடலை வெளியிடுகிறது.

ராயல் என்ஃபீல்டுக்கு போட்டி ஹோண்டா தான்... விரைவில்..!!

இதற்கான அறிவிப்பு வெளியானது முதல் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் ஹோண்டாவின் புதிய பைக் மீது பெரிய ஆர்வம் தொற்றிக்கொண்டது.

ராயல் என்ஃபீல்டுக்கு போட்டி ஹோண்டா தான்... விரைவில்..!!

குறிப்பாக பல ஆட்டோ துறை வல்லுநர்கள் ஹோண்டாவின் இந்த அறிவிப்பிற்கு பல்வேறு ஆருடங்களை கூறிவந்தனர்.

ராயல் என்ஃபீல்டுக்கு போட்டி ஹோண்டா தான்... விரைவில்..!!

அதன்படி, ராயல் என்ஃபீல்டுக்கு போட்டியாக ஹோண்டா அறிமுகம் செய்யும் பைக் ரெபல் மாடலாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ராயல் என்ஃபீல்டுக்கு போட்டி ஹோண்டா தான்... விரைவில்..!!

ஹோண்டா மோட்டார் சைக்கிள் இந்தியா நிறுவனமும், இந்த எதிர்பார்ப்பை உறுதி செய்தது மட்டுமில்லாமல், அது 2018 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகும் என தெரிவித்திருந்தது.

ராயல் என்ஃபீல்டுக்கு போட்டி ஹோண்டா தான்... விரைவில்..!!

ரெபல் பைக்கை இந்தியாவில் விற்பனை செய்வதற்கான காப்புரிமை பெறும் செயல்பாட்டில் ஹோண்டா தற்போது மும்முரமாக உள்ளது.

Recommended Video

[Tamil] 2017 Maruti Suzuki Baleno Alpha Automatic Launched In India - DriveSpark
ராயல் என்ஃபீல்டுக்கு போட்டி ஹோண்டா தான்... விரைவில்..!!

ரெபல் 300சிசி திறன் கொண்ட மாடல் மட்டுமில்லாமல், 500 சிசி திறன் பெற்ற ரெபல் பைக்கின் மற்றொரு மாடலையும் ஹோண்டா மோட்டார் சைக்கிள் வெளியிடுகிறது.

ராயல் என்ஃபீல்டுக்கு போட்டி ஹோண்டா தான்... விரைவில்..!!

இந்திய சந்தையில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஹோண்டா ரெபல் 300சிசி மற்றும் 500சிசி பைக்குகள், 2018 ஆட்டோ எக்ஸ்போவில் கான்செப்ட் நிலை மாடலாக களமிறங்கலாம்.

ராயல் என்ஃபீல்டுக்கு போட்டி ஹோண்டா தான்... விரைவில்..!!

அறிமுகத்தை தொடர்ந்து 2019ம் ஆண்டில் ரெபல் 300சிசி பைக்கும், அதனை தொடர்ந்து ரெபல் 500சிசி பைக்கும் இந்தியாவில் விற்பனைக்கு வரும்.

ராயல் என்ஃபீல்டுக்கு போட்டி ஹோண்டா தான்... விரைவில்..!!

ஹோண்டா சிபிஆர் 300 பைக்கில் இடம்பெற்றுள்ள 286சிசி திறன் பெற்ற எஞ்சின் தான் ரெபல் 300 பைக் மாடலில் உள்ளது. இது அதிகப்பட்சமாக 27 பிஎச்பி பவர் மற்றும் 27 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

ராயல் என்ஃபீல்டுக்கு போட்டி ஹோண்டா தான்... விரைவில்..!!

ராயல் என்ஃபீல்டுக்கு போட்டியாக நடுத்தர பைக் விற்பனையில் இந்தியாவில் களமிறங்கும் ஹோண்டா ரெபல் பைக்கிற்கு ரூ.1.90 லட்சம் விலை நிர்ணயம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராயல் என்ஃபீல்டுக்கு போட்டி ஹோண்டா தான்... விரைவில்..!!

ப்ரீமியம் ரக பைக்குகளை தொடர்ந்து தயாரிக்க ஹோண்டா முடிவுசெய்துள்ளது. அதற்குரிய காப்புரிமையை இந்தியாவில் பெறுவதிலும் ஹோண்டா தீவிரம் காட்டி வருகிறது.

ராயல் என்ஃபீல்டுக்கு போட்டி ஹோண்டா தான்... விரைவில்..!!

இதன் காரணமாக எதிர்கால வாகன விற்பனையில் ஹோண்டாவின் பல ப்ரீமியம் ரக பைக்குகள் இந்திய சந்தையில் களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Read in Tamil: Honda Rebel 300 India Dbut at 2018 Delhi Auto Expo. Click for Details...
Story first published: Monday, December 11, 2017, 14:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X