இந்தியாவில் ஒரே நாளில் 1 லட்ச இருசக்கர வகானங்களை விற்று ஹோண்டா சாதனை..!!

Written By:

10 லட்சத்திற்கு அதிகமான (10.52 லட்சம்) இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து ஹோண்டா நிறுவனம் புதிய சாதனையை படைத்துள்ளது.

இருசக்கர வகான விற்பனையில் ஹோண்டா புதிய மைல்கல்..!!

குறிப்பாக தசரா பண்டிகையின் போது மட்டும் இந்தியளவில் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான ஹோண்டா இருசக்கர வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளன.

இருசக்கர வகான விற்பனையில் ஹோண்டா புதிய மைல்கல்..!!

செப்டம்பர் மாத கணக்கு முடிவில் ஹோண்டா இருசக்கர வாகன விற்பனையில் இந்த சாதனையை படைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இருசக்கர வகான விற்பனையில் ஹோண்டா புதிய மைல்கல்..!!

கடந்த ஆகஸ்டு மாதத்தின் போது 6 லட்சம் எண்ணிக்கையில் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்தது தான் ஹோண்டாவின் சாதனையாக இருந்து வந்தது.

இருசக்கர வகான விற்பனையில் ஹோண்டா புதிய மைல்கல்..!!

அந்த விற்பனை திறனை முறியடிக்கும் வகையில் ஹோண்டாவின் செப்டம்பர் மாத விற்பனை புதிய சாதனையை படைத்துள்ளது.

Recommended Video - Watch Now!
TVS Jupiter Classic Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
இருசக்கர வகான விற்பனையில் ஹோண்டா புதிய மைல்கல்..!!

நவராத்திரி தொடங்கிய முதன் நாளிலேயே இந்தியளவில், ஹோண்டாவின் 52,000 இருசக்கர வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளன.

இருசக்கர வகான விற்பனையில் ஹோண்டா புதிய மைல்கல்..!!

பண்டிகை காலத்தில் வாடிக்கையாளர்களின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஹோண்டாவின் இருசக்கர வாகன விற்பனை நவராத்திரி காலத்தில் மட்டும் 50 சதவீதம் கூடுதலாக அதிகரித்துள்ளது.

இருசக்கர வகான விற்பனையில் ஹோண்டா புதிய மைல்கல்..!!

ஹோண்டா 2017 செப்டம்பரில் விற்பனை செய்த இருசக்கர வாகனங்கள் மொத்தம் 601,998. இதை கடந்தாண்டோடு ஒப்பிட்டால் 2016 செப்டம்பரில் ஹோண்டா 5,68,753 இருசக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

இருசக்கர வகான விற்பனையில் ஹோண்டா புதிய மைல்கல்..!!

2016ல் இந்தியாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு ஹோண்டாவின் 30,000 இருசக்கர வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு அது 32,110-ஆக அதிகரித்துள்ளது.

இருசக்கர வகான விற்பனையில் ஹோண்டா புதிய மைல்கல்..!!

ஹோண்டாவின் கடந்த 6 மாத விற்பனையோடு இதை ஒப்பிட்டு பார்த்தால், 2017 இருசக்கர வாகன விற்பனையில் அந்நிறுவனம் புதிய சாதனையை படைத்திருப்பது தெரிய வருகிறது.

இருசக்கர வகான விற்பனையில் ஹோண்டா புதிய மைல்கல்..!!

அதாவது, கடந்த மாதங்களில் ஹோண்டா மொத்தம் 30 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை வரலாற்றிலேயே முதன்முறையாக விற்பனை செய்துள்ளது.

இருசக்கர வகான விற்பனையில் ஹோண்டா புதிய மைல்கல்..!!

இதன்மூலம் இந்தியாவின் ஆட்டோ சந்தையில் அதிகமான இருசக்கர வாகனங்களை விற்பனை செய்த நிறுவனம் மற்றும் இந்த பிரிவில் அதிக சந்தை மதிப்பை பெற்ற நிறுவனம் என்ற பெருமையை ஹோண்டா பெற்றுள்ளது.

இருசக்கர வகான விற்பனையில் ஹோண்டா புதிய மைல்கல்..!!

இதுகுறித்து பேசிய ஹோண்டாவின் மூத்த விற்பனை பிரிவு அதிகாரி யாத்விந்தர் சிங் "இந்தியாவில் நடைபெற்று வரும் பண்டிகை கால விற்பனை ஹோண்டாவிற்கு அதிக அனுகூலத்தை தந்து வருகிறது. இது தொடரும் என்று எதிர்பார்க்கிறோம்" என கூறினார்.

இருசக்கர வகான விற்பனையில் ஹோண்டா புதிய மைல்கல்..!!

சமீப காலமாக ஹோண்டாவின் இருசக்கர வகான விற்பனை மிகப்பெரிய உயர்நிலையை அடைந்து வருகிறது.

இதற்காக அந்நிறுவனத்தின் சரியான திட்டமிடல் மற்றும் தனித்துவமான தயாரிப்புகளே காரணம்.

இருசக்கர வகான விற்பனையில் ஹோண்டா புதிய மைல்கல்..!!

ஹோண்டாவின் இருசக்கர தயாரிப்புகளில் ஆக்டிவா சிரீஸ், டியோ, ஹார்னெட், யூனிகார்ன், ஷைன் போன்ற மோட்டார் சைக்கிள்கள் இந்திய வாடிக்கையாளர்களிடம் தொடர் வரவேற்பில் இருந்து வருகிறது.

English summary
Read in Tamil: Honda Two-Wheelers Records One Lakh Sales On A Single Day. Click for Details...
Story first published: Thursday, October 5, 2017, 10:59 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark