கஃபே ரேஸர் போன்று மாற்றப்பட்ட ஹோண்டா யூனிகார்ன் 150 பைக்!!

கஃபே ரேஸர் ரக மோட்டார்சைக்கிள் போன்று மாற்றங்கள் செய்யப்பட்ட ஹோண்டா யூனிகார்ன் 150 பைக்கின் படங்கள், தகவல்களை இங்கே காணலாம்.

By Saravana Rajan

ஆந்திராவை சேர்ந்த கஸ்டமைஸ் நிறுவனம் ஒன்று ஹோண்டா யூனிகார்ன் 150 பைக்கை கஃபே ரேஸர் மாடல் போன்று மாற்றி உள்ளது. அதன் விபரங்கள் படங்களை இந்த செய்தியில் காணலாம்.

 கஃபே ரேஸர் போன்று மாற்றப்பட்ட ஹோண்டா யூனிகார்ன் 150 பைக்!!

ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டத்தின் அகிவிடு என்ற இடத்தை சேர்ந்த கோஸ்டா மோட்டார்சைக்கிள் கம்பெனி என்ற நிறுவனம்தான் ஹோண்டா யூனிகார்ன் 150 பைக்கை மாற்றங்களை செய்து புதிய தோற்றத்தை கொடுத்துள்ளது.

 கஃபே ரேஸர் போன்று மாற்றப்பட்ட ஹோண்டா யூனிகார்ன் 150 பைக்!!

பழமையான டிசைன் தாத்பரியங்களை கொண்ட கஃபே ரேஸர் போன்ற தோற்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. முன்புறத்தில் வட்ட வடிவ ஹெட்லைட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. கஃபே ரேஸர்களுக்கு உரித்தான க்ளப்மேன் ஹேண்டில் பாருடன், சிறிய சைடு மிரர்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

 கஃபே ரேஸர் போன்று மாற்றப்பட்ட ஹோண்டா யூனிகார்ன் 150 பைக்!!

பெட்ரோல் டேங்கிலும் மாறுதல் செய்யப்பட்டு ஹோண்டா சின்னத்தை தெரிவிக்கும் ஸ்டிக்கர் இருக்கிறது. கஃபே ரேஸர்களுக்கு உரிய சைலென்சர் அமைப்புடன் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதை காணலாம்.

 கஃபே ரேஸர் போன்று மாற்றப்பட்ட ஹோண்டா யூனிகார்ன் 150 பைக்!!

பின்புற ஃப்ரேம் நறுக்கப்பட்டுள்ளது. வழக்கமான இருக்கையை எடுத்துவிட்டு, சிறிய இருக்கையுடன் கஃபே ரேஸர் தோற்றத்திற்கு மாற்றம் செய்துள்ளனர் கோஸ்டா மோட்டார்சைக்கிள் நிறுவனத்தினர்.

 கஃபே ரேஸர் போன்று மாற்றப்பட்ட ஹோண்டா யூனிகார்ன் 150 பைக்!!

குட்டையான மட்கார்டுகளும், அகலமான பெரிய டயர்களும் பொருத்தப்பட்டு இருக்கின்றன. ஒயிட் ரெட் வண்ணத்தில் முற்றிலும் புதிய தோற்றத்திற்கு மாறி இருக்கிறது. இந்த மாற்றம் உங்களுக்கு பிடித்திருக்கிறதா? உங்களது எண்ணங்களையும் கருத்துப் பெட்டியில் தெரிவிக்கலாம்.

புதிய ஹோண்டா சிவிக் காரின் படங்கள்!

புதிய ஹோண்டா சிவிக் காரின் உயர்தர படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

More from DriveSpark

Article Published On: Monday, February 27, 2017, 16:48 [IST]
English summary
Here are the details and photos of Honda Unicorn 150 Cafe Racer model By Costa Motorcycels company from Andhra.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+