இருசக்கர வாகனங்களில் அறிமுகமான ஆட்டோமேட்டிக் ஹெட்லைட் வசதி: சிறப்புத் தகவல்கள்!

இருசக்கர வாகனங்களில் கட்டாயமாக்கப்பட்டு இருக்கும் ஆட்டோமேட்டிக் ஹெட்லைட் குறித்த சிறப்புத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

பாரத் ஸ்டேஜ் 3 மாசு உமிழ்வு தர எஞ்சின் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு ஏப்ரல் 1 முதல் விதிக்கப்பட்ட தடை உத்தரவு பெரும் விவாதப் பொருளாக மாறி இருக்கும் இந்த வேளையில், மற்றொரு விஷயமாக இருசக்கர வாகனங்களில் நாளை முதல் ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்டும் கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. அதுகுறித்த சில முக்கியத் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இருசக்கர வாகனங்களில் கட்டாயமாக்கப்படும் ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்

இருசக்கர வாகனங்களால் ஏற்படும் விபத்துக்களை தவிர்ப்பதற்கு ஆட்டோமேட்டிக் ஹெட்லைட் ஒரு உபாயமாக பார்க்கப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்னரே ஐரோப்பிய நாடுகளில் Automatic Headlight On[AHO] என்ற பாதுகாப்பு அம்சம் அறிமுகம் செய்யப்பட்டு விட்டது.

இருசக்கர வாகனங்களில் கட்டாயமாக்கப்படும் ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்

சூரிய வெளிச்சம் குறைவான குளிர் பிரதேசங்கள் மற்றும் அதிக மழை பெய்யும் நாடுகளில் இருசக்கர வாகனங்கள் வருவது தெரியாமல் பல விபத்துக்கள் ஏற்பட்டன. இதன் காரணமாக, இருசக்கர வாகனங்கள் வருவதை பிற வாகன ஓட்டிகள் கண்டு கொள்வதில் சிரமம் ஏற்பட்டு வந்தது.

இருசக்கர வாகனங்களில் கட்டாயமாக்கப்படும் ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்

இதனை மனதில் கொண்டே ஆட்டோமேட்டிக் ஹெட்லைட் அங்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, கார் உள்ளிட்ட வாகனங்களில் பகல்நேர ரன்னிங் விளக்குகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் நாடுகளில் கட்டாயமாக்கப்பட்டது.

இருசக்கர வாகனங்களில் கட்டாயமாக்கப்படும் ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்

ஐரோப்பிய நாடுகள் மட்டுமின்றி, அமெரிக்கா, ரஷ்யா, கனடா உள்ளிட்ட பல நாடுகளில் பகல்நேர ரன்னிங் விளக்குகள் சேர்க்கப்பட்டன. ஆஸ்திரேலியாவில் பகல்நேர விளக்குகள் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவை கட்டாயமாக்கப்படவில்லை.

இருசக்கர வாகனங்களில் கட்டாயமாக்கப்படும் ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்

இந்தநிலையில், தற்போது இந்தியாவிலும் ஆட்டோமேட்டிக் ஹெட்லைட் என்பது இருசக்கர வாகனங்களில் கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. இருசக்கர வாகனங்களில் எஞ்சின் ஸ்டார்ட் செய்யும் போதிலிருந்து, எஞ்சினை அணைக்கும் வரை ஹெட்லைட் ஒளிர்ந்து கொண்டே இருக்கும்.

இருசக்கர வாகனங்களில் கட்டாயமாக்கப்படும் ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்

அதாவது, இருசக்கர வாகனத்தின் ஹெட்லைட்டில் இருக்கும் லோ பீம் மட்டும் பகல், இரவு என எந்த நேரத்திலும் எரிந்து கொண்டே இருக்கும். இதன்மூலமாக, சாலையில் செல்லும் இதர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளுக்கு இருசக்கர வாகனம் தெளிவாக புலனாகும் என்ற கருத்தின் அடிப்படையில் இந்த பாதுகாப்பு வசதி சேர்க்கப்பட்டுள்ளது.

இருசக்கர வாகனங்களில் கட்டாயமாக்கப்படும் ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்

ஆட்டோமேட்டிக் ஹெட்லைட் வசதி தேவையான வசதியாகவே ஆட்டோமொபைல் துறையினர் கருதுகின்றனர். மேலும், லோ பீம் விளக்கு மட்டுமே தானியங்கி முறையில் எரியும் நுட்பத்தில் கொடுக்கப்படுகிறது. லோ பீம் வசதிக்காக பொதுவாக ஹாலஜன் பல்பு பயன்படுத்தப்படுவதால் உற்பத்தி செலவு அதிகம் இருக்காது என்பது இதன் முக்கிய சிறப்பு.

இருசக்கர வாகனங்களில் கட்டாயமாக்கப்படும் ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்

அதேநேரத்தில், லோ பீம் விளக்கு தொடர்ந்து ஒளிர்வதற்கு கூடுதல் மின்சாரம் தேவைப்படும். ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்டிற்கு திறன் மிக்க ஆல்டர்நேட்டர் அல்லது மேக்னெட்டோ சாதனம் தேவைப்படும். மேலும், எஞ்சின் இயக்கத்திலிருந்து இந்த சாதனம் மின் ஆற்றலை உற்பத்தி செய்வதால், எஞ்சினுக்கு சற்றே கூடுதல் சுமை ஏற்படும். இதனால், லிட்டருக்கு ஒரு கிமீ மைலேஜ் குறைய வாய்ப்பு இருக்கிறது.

இருசக்கர வாகனங்களில் கட்டாயமாக்கப்படும் ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்

மற்றொரு விஷயம் தொடர்ந்து விளக்கு எரியும்போது உண்டாகும் வெப்பம், ஹெட்லைட்டில் உள்ள எதிரொலிப்பு தகடுகளை பாதித்துவிடும் அபாயம் உள்ளது. எனவே, அதற்கான மாற்றங்களுடன் தற்போது ஆட்டோமேட்டிக் ஹெட்லைட் வசதி இருசக்கர வாகனங்களில் சேர்க்கப்பட்டுள்ளது.

இருசக்கர வாகனங்களில் கட்டாயமாக்கப்படும் ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்

ஹீரோ, கேடிஎம் உள்ளிட்ட நிறுவனங்கள் ஏற்கனவே ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்டுடன் இருசக்கர வாகனங்களை அறிமுகம் செய்துவிட்டன. இது நிச்சயம் வரவேற்கப்பட வேண்டிய பாதுகாப்பு வசதியாகவே பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

More from DriveSpark

Article Published On: Friday, March 31, 2017, 15:33 [IST]
English summary
Important Details About Automatic Headlight In Two Wheelers. Read in Tamil.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+