பைக் விற்பனையில் சீனாவை முந்தி உலகளவில் முதலிடத்தில் இந்தியா

Written By:

உலகளவில் இரு சக்கர விற்பனைக்கான பெரிய சந்தையை பெற்ற நாட்டிற்கான பட்டியலில், சீனாவை வீழ்த்தி முதலிடத்தை பெற்றுள்ளது இந்தியா.

இந்தியா முதலிடம்... சீனாவிற்கு பின்னிடைவு

இருசக்கர வாகனங்களை வாங்குவதில் இந்திய வாடிக்கையாளர்கள் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருவதால், பைக்குகளுக்குகான தேவை இந்தியாவில் இருந்து கொண்டே வருகிறது.

இந்தியா முதலிடம்... சீனாவிற்கு பின்னிடைவு

ஆனால் பைக்குகளை மலைபோல் வாங்கிகுவித்த சீனர்கள், தற்போது அவ்வளவாக பைக் மீது ஆர்வம் காட்டுவதில்லை.

காற்று மாசை தடுக்க சீன அரசு விதித்து வரும் கடுமையான கட்டுபாடுகளால் பைக் விற்பனை அங்கு பொலிவிழந்துள்ளது.

இந்தியா முதலிடம்... சீனாவிற்கு பின்னிடைவு

சீனாவின் இந்த செயல்பாடுகளால் 2016ம் ஆண்டில் உலகிலேயே இருசக்கர வாகனங்களை அதிக விற்பனை செய்த நாடாக முதலிடத்தில் இந்தியா உள்ளது.

இந்தியா முதலிடம்... சீனாவிற்கு பின்னிடைவு

2016ம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் ஒரு கோடியே 77 லட்சம் பைக்குகள் விற்பனை ஆகியுள்ளதாக இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் (SIAM) தெரிவித்துள்ளது.

இந்தியா முதலிடம்... சீனாவிற்கு பின்னிடைவு

கடுமையான கட்டுபாடுகளுக்கும் மத்தியில் சீனர்கள் ஒரு கோடியே 68 லட்சம் பைக்குகளை வாங்கியுள்ளனர். இந்தியாவை விட 9 லட்சம் குறைவாக பைக்குகளை விற்பனை செய்துள்ளதால் இந்த பட்டியலில் சீனா 2வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்தியா முதலிடம்... சீனாவிற்கு பின்னிடைவு

இந்தியாவில் 2016ம் ஆண்டில் 5 மில்லியன் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 100 முதல் 110சிசி வரையிலான பைக்குகளில் 6.5 மில்லியன் வாகனங்கள் விற்கப்பட்டுள்ளன.

இந்தியா முதலிடம்... சீனாவிற்கு பின்னிடைவு

இந்தியாவை விட இருசக்கர வாகனங்களுக்கான மார்கெட் என்பது சீனாவில் மிகவும் பெரியது. ஆனால் பல நகரப்பகுதிகளில் காற்று மாசு காரணமாக பைக் பயன்படுத்துவதற்கு தடை என்பதால், இந்த பட்டியலில் சீனா பின்னடைவை சந்திதுள்ளது.

இந்தியா முதலிடம்... சீனாவிற்கு பின்னிடைவு

2010ம் ஆண்டில் சீனாவில் பைக் விற்பனை 27 மில்லியன்களை கடந்தது. பிறகு அடுத்தடுத்த ஆண்டுகளில் மெதுவாக குறைந்தது.

இந்தியா முதலிடம்... சீனாவிற்கு பின்னிடைவு

ஆனால் இந்த கணக்கில் இந்தியா சீனாவிற்கு நேர்மாறாக உள்ளது. 2011ம் ஆண்டு தொடங்கி 2012வரை 13 மில்லியன் பைக்குகள் இந்தியாவில் விற்பனையாயின.

இந்தியா முதலிடம்... சீனாவிற்கு பின்னிடைவு

2014-15ம் ஆண்டுகளில் 16 மில்லியன் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டன. 2016-17 ஏப்ரல் வரை 17 மில்லியன் வாகனங்களை விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இந்தியா முதலிடம்... சீனாவிற்கு பின்னிடைவு

ஆண்டுதோறும் இந்தியர்கள் பைக்குகள் வாங்குவதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் தொடர்ந்து பைக் விற்பனை இந்தியாவில் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்தியா முதலிடம்... சீனாவிற்கு பின்னிடைவு

சீனாவில் இருசக்கர வாகன விற்பனை பின்னடைவை சந்தித்துள்ளதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. அதில் முக்கியமான ஒன்று இறக்குமதி வாகனங்களுக்கான தடை.

இந்தியா முதலிடம்... சீனாவிற்கு பின்னிடைவு

சீனா நாடு தனது உள்நாட்டு உற்பத்தி வாகனங்களை தான் அதிகம் நம்புகிறது. அதனால் இறக்குமதியாகும் மற்ற நாட்டு வாகனங்களுக்கு அதிக தடைகள் அங்கு உள்ளன.

இந்தியா முதலிடம்... சீனாவிற்கு பின்னிடைவு

மேலும் காற்று மாசு குறைபாட்டால் சீனாவில் 200 பெரிய நகரங்களில் பைக்குகளை மக்கள் பயன்படுத்துவதற்கு அதிக கட்டுபாடுகள் உள்ளன.

இந்தியா முதலிடம்... சீனாவிற்கு பின்னிடைவு

பெய்ஜிங் போன்று சில நகரங்களில் பைக்குகளை முற்றிலுமாக தடை செய்தும் உள்ளது சீனா. இதனாலேயே சீனர்கள் பைக் ஒட்டுவதில் அவ்வளவு ஆர்வம் காட்டுவதில்லை.

இந்தியா முதலிடம்... சீனாவிற்கு பின்னிடைவு

எல்லா ரக பைக்குகள் என்றில்லாமல், பெரிய எஞ்சின் மற்றும் அதிக எடைக்கொண்ட பைக் ஆகியவற்றிற்கே சீன அரசு தடை வித்துள்ளது.

இந்தியா முதலிடம்... சீனாவிற்கு பின்னிடைவு

பைக்குகள் பயன்படுத்துவதில் தொடர்ந்து கொண்டு வந்த கட்டுபாடுகளால் சீனர்கள் கார்களை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டினர்.

இந்தியா முதலிடம்... சீனாவிற்கு பின்னிடைவு

மக்களின் ஆர்வம் அதிகரிக்கவே, பல உள்நாட்டு முதலாளிகள், மக்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்றவாறான கார்களை தயாரிக்க தொடங்கினர்.

இந்தியா முதலிடம்... சீனாவிற்கு பின்னிடைவு

இதனால் கார் விற்பனை சீனாவில் அதிகரிக்க தொடங்கின. சீனர்கள் பைக்கை கைவிட இதுவும் ஒரு பெரிய காரணமாக அமைந்தது.

இந்தியா முதலிடம்... சீனாவிற்கு பின்னிடைவு

சீனாவை போன்று இந்தியாவில் வாகனங்களுக்கான கட்டுபாடுகளை உருவாக்க பெரிய அளவிலான சூழ்நிலை உருவாகவில்லை.

இந்தியா முதலிடம்... சீனாவிற்கு பின்னிடைவு

அதனால் இந்தியாவில் பைக் விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது. குறிப்பாக எந்த ரக வண்டியையும் நாம் இங்கு விற்கலாம். அதற்கேற்ற கட்டுபாடுகள் என்று ஒன்றும் கிடையாது.

இந்தியா முதலிடம்... சீனாவிற்கு பின்னிடைவு

இந்தியாவில் பைக் விற்பனை ஒரு படி மேலேயே சென்றுவிட்டது. சாதரண மோட்டார் சைக்கிள் விற்பனை என்பது இன்று தானாக இயங்கக்கூடிய வாகனங்களுக்கான சந்தையை அதிகப்படுத்தும் அளவிற்கு இந்திய சந்தையை மேம்பட்டுள்ளது.

English summary
India overtakes China becomes no 1 in two wheeler market worldwide. Check for the details...
Story first published: Saturday, May 6, 2017, 14:19 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark