மோட்டார் சைக்கிள் விற்பனையில் சீனாவை சொல்லி வைத்து அடித்த இந்தியா..!!

Written By:

உலகளவில் மோட்டார் சைக்கிள் விற்பனையில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.

இதனால் இந்திய ஆட்டோமொபைல் துறையின் சந்தை மதிப்பு உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிள் விற்பனையில் இந்திய முதலிடம்..!!

2016 முதல் 2017 வரையிலான காலவரையில், உலகளவில் இருசக்கர வாகன விற்பனை செய்த நாடுகளுக்கான பட்டியல் வெளியிடப்பட்டது.

Recommended Video
2017 DSK Benelli 302 R Launched In Inida | In Tamil - DriveSpark தமிழ்
மோட்டார் சைக்கிள் விற்பனையில் இந்திய முதலிடம்..!!

இதில் சுமார் 1.75 கோடி மோட்டார் சைக்கிளை விற்பனை செய்துள்ளதாக கூறி இந்தியா அந்த பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிள் விற்பனையில் இந்திய முதலிடம்..!!

அதுவரை இந்த பட்டியலில் முதலிடம் வகித்து வந்த சீனா, கடந்தாண்டு மோட்டார் சைக்கிள் விற்பனையில் சொதப்பியதால் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிள் விற்பனையில் இந்திய முதலிடம்..!!

இந்தியாவில் மோட்டார் சைக்கிள்களுக்கான தேவை அதிகரித்ததோடு, உலகளவிலான பைக் தயாரிப்பு நிறுவனங்கள் பல,

இங்கு காலுன்றி, அவை நல்ல வளர்ச்சி பெற்றிருப்பதே இந்த விற்பனை திறனுக்கான காரணம் என கூறப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிள் விற்பனையில் இந்திய முதலிடம்..!!

1.75 கோடி பைக்குகளை 2016 முதல் 2017 வரை விற்றுள்ள இந்தியா, சீனாவை விட சுமார் 9 லட்சம் வாகனங்களை கூடுதலாக விற்பனை செய்துள்ளது.

மோட்டார் சைக்கிள் விற்பனையில் இந்திய முதலிடம்..!!

100சிசி முதல் 125சிசி திறன் வரை பெற்ற மோட்டார் சைக்கிள்களே இந்தியாவிற்கு அதிக விற்பனை அளவை பெற்றுதந்துள்ளன.

மேலும், கூடுதல் சிசி திறன் பெற்ற பைக்குகளுக்கான விற்பனையில் ராயல் என்ஃபீல்டின் தயாரிப்புகளே ஆதிக்கம் செலுத்துகின்றன.

மோட்டார் சைக்கிள் விற்பனையில் இந்திய முதலிடம்..!!

பெருகி வரும் வாகன நெரிசல் காரணமாக இந்தியாவில் கார் ரகங்களை விட, இருசக்கர வாகனங்களே பெரிய பங்களிப்பை வாகன ஓட்டிகளுக்கு தருகின்றன.

மோட்டார் சைக்கிள் விற்பனையில் இந்திய முதலிடம்..!!

தற்போது அனைத்து பயனாளிகளுக்கும் ஏற்ற வகையில், 125சிசி திறன் பெற்ற பைக் மற்றும் ஸ்கூட்டர்களும் இந்தியாவில் கிடைக்கின்றன.

மோட்டார் சைக்கிள் விற்பனையில் இந்திய முதலிடம்..!!

அரசும் வாகன பயன்பாட்டினை முறைப்படுத்த, பல்வேறு நடவடிக்கைகளை செய்கிறது. அதில் ஒன்று தான் சாலை விரிவாக்க பணிகள்.

மோட்டார் சைக்கிள் விற்பனையில் இந்திய முதலிடம்..!!

அதிகப்படியான தேசிய நெடுஞ்சாலைகள் கட்டமைக்கப்படுவதும் மோட்டார் சைக்கிள் விற்பனை இந்தியாவில் உயர காரணமாக உள்ளது.

மோட்டார் சைக்கிள் விற்பனையில் இந்திய முதலிடம்..!!

கூடவே அதற்கு ஏதுவாக இந்திய நிறுவனங்களோடு வெளிநாட்டு நிறுவங்கள் பங்குகொள்வதும் வாகன விற்பனைக்கு உயர்வை தந்துள்ளன.

மோட்டார் சைக்கிள் விற்பனையில் இந்திய முதலிடம்..!!

கடந்த நாட்கள் வரையில் டியூக், ராயல் என்ஃபீல்டு மற்றும் பஜாஜ் நிறுவனங்களின் கூட்டணி வெற்றிக்கரமாக அமைந்தன.

அவற்றை தொடர்ந்து தற்போது பஜாஜ், டிரையம்ப் நிறுவனத்தோடு கூட்டணி ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

மோட்டார் சைக்கிள் விற்பனையில் இந்திய முதலிடம்..!!

கூட்டணி ஏற்படுத்திக்கொண்டு தொடர்ந்து வெற்றிகளை படைத்து வரும் இந்தியாவை சேர்ந்த பஜாஜ் நிறுவனத்திற்கு, வரக்கூடிய நாட்களும் பொற்காலமாக அமையும் என எதிர்பார்க்கலாம்.

English summary
Read in Tamil: India Overtakes China in Largest Motorcycle Manufacturer. Click for Details...
Please Wait while comments are loading...

Latest Photos