ரூ.60 லட்சம் மதிப்புடைய சூப்பர் பைக் சென்னை வாடிக்கையாளருக்கு டெலிவிரி!

எம்வி அகுஸ்ட்டா நிறுவனத்தின் மிகவும் விசேஷமான சூப்பர் பைக் சென்னை வாடிக்கையாளருக்கு டெலிவிரி கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

ரூ.60 லட்சம் மதிப்புடைய எம்வி அகுஸ்ட்டா சூப்பர் பைக் சென்னையை சேர்ந்த வாடிக்கையாளருக்கு டெலிவிரி கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ரூ.60 லட்சம் மதிப்புடைய சூப்பர் பைக் சென்னை வாடிக்கையாளருக்கு டெலிவிரி!

இத்தாலியை சேர்ந்த எம்வி அகுஸ்ட்டா நிறுவனம் சூப்பர் பைக் தயாரிப்பில் உலக அளவில் பிரபலமானது. இந்த நிறுவனத்தின் ரேஸ் பிரிவான ரேபார்ட்டோ கார்ஸ் நிறுவனம் இந்த எஃப்-4 ஆர்சி பைக்கை மிக விசேஷ அம்சங்களுடன் வடிவமைத்துள்ளது.

ரூ.60 லட்சம் மதிப்புடைய சூப்பர் பைக் சென்னை வாடிக்கையாளருக்கு டெலிவிரி!

மொத்தமாகவே 250 பைக்குகள் மட்டுமே சர்வதேச அளவில் விற்பனைக்கு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. மிக அரிய சூப்பர் பைக் மாடல்களில் ஒன்றாக கருதப்படும், இந்த பைக்கை சென்னையை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் முன்பதிவு செய்தார்.

Recommended Video

[Tamil] Skoda kodiaq Launched In India - DriveSpark
ரூ.60 லட்சம் மதிப்புடைய சூப்பர் பைக் சென்னை வாடிக்கையாளருக்கு டெலிவிரி!

இந்த நிலையில், இந்த சூப்பர் பைக் முன்பதிவு செய்திருந்த வாடிக்கையாளருக்கு டெலிவிரி கொடுப்பதற்காக இறக்குமதி செய்யப்பட்டது. அதற்கு முன்னதாக, இந்த பைக் புனேயிலுள்ள அராய் மையத்திற்கு ஆய்வுகளுக்காக சென்றிருந்தது.

ரூ.60 லட்சம் மதிப்புடைய சூப்பர் பைக் சென்னை வாடிக்கையாளருக்கு டெலிவிரி!

ஆய்வுகள் முடிவடைந்து இந்த பைக் தற்போது சென்னை வாடிக்கையாளரிடம் டெலிவிரி கொடுக்கப்பட்டு இருக்கிறது. நம் நாட்டின் முதல் மற்றும் ஒரே எம்வி அகுஸ்ட்டா எஃப்-4 சூப்பர் பைக் மாடல் என்ற பெருமையை தற்போது பெற்றிருக்கிறது.

ரூ.60 லட்சம் மதிப்புடைய சூப்பர் பைக் சென்னை வாடிக்கையாளருக்கு டெலிவிரி!

இந்த பைக் ரூ.60 லட்சம் ஆன்ரோடு மதிப்பில் சென்னையிலுள்ள வாடிக்கையாளர் கைகளுக்கு வந்துள்ளது. மொத்தமாக தயாரிக்கப்பட உள்ள 250 பைக்குகளில் இது 91-வது வரிசை எண் கொண்ட பைக் மாடலாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Trending On DriveSpark Tamil:

ரூ.60 லட்சம் மதிப்புடைய சூப்பர் பைக் சென்னை வாடிக்கையாளருக்கு டெலிவிரி!

இந்த பைக்கின் மற்றொரு விஷேசமான அம்சம், இந்த பைக்குடன் சேர்த்து ரேஸ் டிராக்குகளில் பயன்படுத்தும்போது தேவைப்படும் விசேஷ ஆக்சஸெரீகள் கொண்ட பெட்டியையும் எம்வி அகுஸ்ட்டா நிறுவனம் வழங்குகிறது. பைக்கின் மறுபுறத்தில் அந்த பெட்டி இருப்பதை காணலாம்.

ரூ.60 லட்சம் மதிப்புடைய சூப்பர் பைக் சென்னை வாடிக்கையாளருக்கு டெலிவிரி!

இந்த பெட்டியில் டெர்மிக்னோனி புகைப்போக்கி, சிறப்பு கன்ட்ரோல் யூனிட், கார்பன் ஃபைபர் பின்புற சீட் கவுல், சிறப்பு ஸ்பார்க் பிளக்குகள், விரைவாக திறக்கும் பெட்ரோல் டேங்க் மூடி, விசேஷமான மோட்டார்சைக்கிள் கவர் ஆகியவைய அடங்கியிருக்கின்றன.

ரூ.60 லட்சம் மதிப்புடைய சூப்பர் பைக் சென்னை வாடிக்கையாளருக்கு டெலிவிரி!

இந்த பைக்கில் 998சிசி நான்கு சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 205 எச்பி பவரையும், 115 என்எம் டார்க் திறனையும் வழங்கும். அதுவே, டிராக்குகளில் பயன்படுத்துவதற்கான புகைப்போக்கி மற்றும் இசியூ கட்டுப்பாட்டு சாதனத்தை பொருத்தி பயன்படுத்தும்போது, இந்த எஞ்சின் அதிகபட்சமாக 212 எச்பி பவரை அளிக்கும்.

ரூ.60 லட்சம் மதிப்புடைய சூப்பர் பைக் சென்னை வாடிக்கையாளருக்கு டெலிவிரி!

எஃப்-4 பைக் குடும்பத்தில் அதிவேகமான, சிறந்த செயல்திறன் கொண்ட சூப்பர் பைக் இது என்று எம்வி அகுஸ்ட்டா புகழாராம் சூட்டி இருக்கிறது. மழை ஓய்ந்தவுடன் இந்த புதிய சூப்பர் பைக்கின் ரீங்காரத்தை சென்னை சாலைகளில் விரைவில் காணும் வாய்ப்பு கிடைக்கும்.

Via- Rushlane

Trending On DriveSpark Tamil:

More from DriveSpark

Article Published On: Friday, November 3, 2017, 14:33 [IST]
English summary
India’s First MV Agusta F4 RC Delivered In Chennai.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+