இந்தியன் ஸ்கவுன்ட் பாபர் மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம்!
இந்தியன் ஸ்கவுட் பாபர் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
கோவாவில் நடந்து வரும் இந்திய பைக் வீக் திருவிழாவில் புதிய இந்தியன் ஸ்கவுடன் பாபர் மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

கோவாவில் 5வது இந்திய பைக் வீக் திருவிழா நேற்று வழக்கமான உற்சாகத்துடன் துவங்கியது. இந்த நிலையில், இந்த திருவிழாவில் இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனம் தனது புதிய ஸ்கவுட் பாபர் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது.

இந்தியன் ஸ்கவுட் மோட்டார்சைக்கிளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த ஸ்கவுட் பாபர் மோட்டார்சைக்கிள் இந்திய பைக் வீக் திருவிழாவிற்கு வந்த மோட்டார்சைக்கிள் பிரியர்களையும், பார்வையாளர்களையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.

இந்த மோட்டார்சைக்கிளில் லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிளில் 1,133சிசி வி- ட்வின் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 100 பிஎச்பி பவரையும், 97.6 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது.

இந்த மோட்டார்சைக்கிள் 2,276மிமீ நீளமும், 926மிமீ அகலமும், 1,154மிமீ உயரமும் கொண்டது. இந்த மோட்டார்சைக்கிள் 1,562மிமீ வீல் பேஸ் கொண்டது. 123மிமீ க்ரவுண்ட் க்ளியரன்ஸ் கொண்டதாக இருக்கிறது.

இந்த மோட்டார்சைக்கிளில் ஒற்றை இருக்கை அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் 251 கிலோ எடை கொண்டது. இந்த மோட்டார்சைக்கிளின் முன்புறத்தில் 120மிமீ டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷனும், பின்புறத்தில் இரட்டை ஷாக் அப்சார்பர் அமைப்பும் உள்ளது.

அதேபோன்று, இரண்டு 16 அங்குல சக்கரங்களிலும் 298மிமீ டிஸ்க் பிரேக் சிஸ்டம் உள்ளது. முன்புறத்தில் கென்டா கே761 130/90-16 73எச் டயரும் பின்சக்கரத்தில் 150/80-16 71எச் டயரும் பொருத்தப்பட்டு இருக்கிறது.

இந்தியன் ஸ்கவுடன் மாடல் க்ரோம் அலங்காரத்தில் ஜொலிப்பது போல அல்லாமல், இந்த மோட்டார்சைக்கிளில் பல பாகங்கள் கருப்பு நிற அலங்காரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்த மோட்டார்சைக்கிள் சிவப்பு, தண்டர் பிளாக், தண்டர் பிளாக் ஸ்மோக், ஸ்டார் சில்வர் ஸ்மோக் மற்றும் பிரான்ஸ் ஸ்மோக் ஆகிய 5 வண்ணங்களில் கிடைக்கும். ஸ்கவுட் மோட்டார்சைக்கிளைவிட ஸ்கவுட் பாபர் மோட்டார்சைக்கிளின் இருக்கை அமைப்பு மிகச் சிறப்பானதாக குறிப்பிடப்படுகிறது.

ரூ.12.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் புதிய இந்தியன் ஸ்கவுட் பாபர் மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ரூ.50,000 முன்பணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








