பிஎம்டபிள்யூவின் முதல் பைக் ஷோரூம் இந்தியாவில் விரைவில் திறப்பு... எங்கு தெரியுமா?

பிஎம்டபிள்யூ மோட்டோரேட் நிறுவனத்தின் முதல் ஷோரூம் இந்தியாவில் திறக்கப்பட உள்ளது. அது குறித்த தகவல்களை காணலாம்.

By Arun

சொகுசுக் கார் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஜெர்மனியைச் சேர்ந்த பிஎம்டபிள்யூ, நிறுவனம், 1923ஆம் ஆண்டு முதல் இருசக்கர வாகனங்கள் தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளது . பிஎம்டபிள்யூவின் கார்களை போலவே அதன் பைக்குகளும் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. பிஎம்டபிள்யூ மோட்டோரேட் என்ற பெயரில் இந்நிறுவனம் இயங்கி வருகிறது.

இந்தியாவின் முதல் பிஎம்டபிள்யூ பைக் ஷோரூம் விரைவில் திறப்பு!

இந்தியாவிலும் பிஎம்டபிள்யூ மோட்டார்சைக்கிள்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. எனினும் இதுவரையில் இந்நிறுவனத்திற்கு என பிரத்யேகமாக ஷோரூம் இல்லாமல் இருந்தது. தற்போது முதல்முறையாக இந்தியாவில் இதன் முதல் ஷோரூம் திறக்கப்பட உள்ளது.

இந்தியாவின் முதல் பிஎம்டபிள்யூ பைக் ஷோரூம் விரைவில் திறப்பு!

மும்பை, புனே மற்றும் பெங்களூரு நகரங்களில் 3 ஷோரூம்களை திறக்க உள்ளது பிஎம்டபிள்யூ மோட்டோரேட். இதில் நாட்டின் முதல் பிஎம்டபிள்யூ மோட்டோரேட் பைக் ஷோரூம் மும்பையில் வரும் ஏப்ரல் 12ல் திறக்கப்பட உள்ளது.

இந்தியாவின் முதல் பிஎம்டபிள்யூ பைக் ஷோரூம் விரைவில் திறப்பு!

மும்பையைச் சேர்ந்த நவ்னீத் மோட்டார்ஸ், பிஎம்டபிள்யூ மோட்டோரேட் ஷோரூமை ஏப்ரல் 12ல் அதிகாரப்பூர்வமாக திறக்க உள்ளது. புதிய ஷோரூம் வடக்கு அந்தேரி பகுதியில் இள்ள நியூ லிங் ரோட் பகுதியில் அமைந்துள்ளது. நவ்னீத் மோட்டார்ஸ் ஏற்கெனெவே சில இடங்களில் பிஎம்டபிள்யூ கார் ஷோரூம்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் முதல் பிஎம்டபிள்யூ பைக் ஷோரூம் விரைவில் திறப்பு!

பிஎம்டபிள்யூ எஸ் 1000 ஆர்ஆர், எஸ் 1000 ஆர், ஆர் நயன் டி, ஆர் நயன் டி ஸ்க்ரேம்ப்லர், கே 1600 ஜிடிஎல் மற்றும் 1200 ஜிஎஸ் மாடல்கள் விற்பனைக்கு கிடைக்கும் என நவ்னீத் மோட்டார்ஸ் நிறுவனத்தின் வெப்சைட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதல் பிஎம்டபிள்யூ பைக் ஷோரூம் விரைவில் திறப்பு!

பிஎம்டபிள்யூ மோட்டார்சைக்கிள்கள் வெளிநாடுகளில் முற்றிலும் அசெம்பிள் செய்யப்பட்டு [completely built units (CBU)] இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட உள்ளன.

இந்தியாவின் முதல் பிஎம்டபிள்யூ பைக் ஷோரூம் விரைவில் திறப்பு!

பிஎம்டபிள்யூ மோட்டார்சைக்கிள்களிலேயே விலை குறைவான ஜி 310 ஆர் மாடல் பைக் இந்த பட்டியலில் இடம்பெறவில்லை. ஜி 310 ஆர் பைக்கை இந்த ஆண்டில் இறுதியில் அல்லது 2018-ன் துவக்கத்தில் பிஎம்டபிள்யூ மோட்டோரேட் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் முதல் பிஎம்டபிள்யூ பைக் ஷோரூம் விரைவில் திறப்பு!

மும்பையை அடுத்து புனேவில் அடுத்த மோட்டோரேட் ஷோரூம் திறக்கப்பட உள்ளது. புனே மோட்டோரேட் ஷோரூம் ஏப்ரல் 14ஆம் தேதி திறக்கபப்ட இருக்கிறது. இது இந்நிறுவனத்தின் இரண்டாவது இந்திய ஷோரூமாக இருக்கும்.

இந்தியாவின் முதல் பிஎம்டபிள்யூ பைக் ஷோரூம் விரைவில் திறப்பு!

இதனைத் தொடர்ந்து ஹார்லி டேவிட்சன் பைக் ஷோரூம்களை நடத்தி வரும் டஸ்கர் மோட்டார்சைக்கிள்ஸ், பெங்களூருவில் 3வது பிஎம்டபிள்யூ மோட்டோரேட் ஷோரூமை திறக்க உள்ளது. இந்த ஷோரூம் திறப்பு தேதி இன்னும் உறுதிசெய்யப்படவில்லை.

இந்தியாவின் முதல் பிஎம்டபிள்யூ பைக் ஷோரூம் விரைவில் திறப்பு!

மேலே குறிப்பிட்ட நகரங்களை தவிர்த்து வெகு விரைவிலேயே சென்னை, டெல்லி மற்றும் ஹைதராபாத் நகரங்களிலும் பிஎம்டபிள்யூ மோட்டோரேட் அதன் டீலர்ஷிப்பை தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் முதல் பிஎம்டபிள்யூ பைக் ஷோரூம் விரைவில் திறப்பு!

தற்போது பிஎம்டபிள்யூ மோட்டார்சைக்கிள்களை தனிப்பட்ட முறையில் இறக்குமதி செய்தே வாங்கும் சூழ்நிலை நிலவி வருகிறது. தற்போது பிரத்யேகமாக ஷோரூம் திறக்கப்பட உள்ளதால் பிஎம்டபிள்யூ மோட்டார்சைக்கிள்களின் சேல்ஸ் மற்றும் சர்வீஸ் சாத்தியம் ஆகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, April 6, 2017, 13:01 [IST]
English summary
First Ever BMW Motorrad bike showroom In India
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+