இந்தியாவில் அறிமுகமாகியுள்ள புதிய கவாஸாகி நிஞ்சா300 பைக் பற்றிய முழு விவரம்!

Posted By: Staff

ஸ்போர்ட்ஸ் பைக்குகளுக்கான மார்க்கெட் இந்தியாவில் விரிவடைந்து வருகிறது என்பதை உணர்ந்துள்ள மோட்டார்சைக்கிள் நிறுவனங்கள், ஸ்போர்ட்ஸ் பைக்குகளை அறிமுகப்படுத்துவதில் முனைப்பு காட்டத்துவங்கியுள்ளன. இந்த வரிசையில் தற்போது ஜப்பானைச் சேர்ந்த கவாஸாகி நிறுவனம் 5 புதிய பைக்குகளை இன்று அதிரடியாக அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ஒன்றான மேம்படுத்தப்பட்ட நிஞ்சா300 பைக் பற்றி விரிவாக காணலாம்.

புதிய கவாஸாகி நிஞ்சா300 பைக் விற்பனைக்கு அறிமுகம்

ஸ்போர்ட்ஸ் பைக்குக்கான முதல் அம்சமே அதன் முகப்பில் இருந்துதான் துவங்குகிறது. அதனை கொண்டு புதிய நிஞ்சா300 பைக்கை கச்சிதமாக வடிவமைத்துள்ளனர். இதில் இரண்டு ஹெட்லைட்டுகள் கொண்ட கவர்ச்சிகரமான முகப்பு உள்ளது.

புதிய கவாஸாகி நிஞ்சா300 பைக் விற்பனைக்கு அறிமுகம்

புதிய பாடி கிராஃபிக்ஸ், புதிய கலர் தீம், வி வடிவ வைசர் அமைப்பு, கருப்பு வண்ண ரியர் வியூ மிர்ரர்கள் என கொள்ளை கொள்ளும் விதமாக இதன் டிசைன் உள்ளது.

புதிய கவாஸாகி நிஞ்சா300 பைக் விற்பனைக்கு அறிமுகம்

ஸ்போர்ட்டி அலாய் வீல்கள், இஞ்சின் கவர் அமைப்பு, சைடு ஃப்பேர்ரிங்ஸ் ஆகியவை பிரீமியம் பைக்குக்கான அம்சங்களாக உள்ளன. கருப்பு ஃபினிஷிங்கிலான எல்ஈடி பின்புற விளக்கு, சைடு இண்டிகேட்டர்கள் மற்றும் பெரிய அகலமான டயர்கள் ஆகியவை உள்ளன. கிரோம் ஃபினிஷிங்கிலான இதன் சைலன்சர் அழகை தூக்கலாக காட்டுகிறது.

புதிய கவாஸாகி நிஞ்சா300 பைக் விற்பனைக்கு அறிமுகம்

புதிய நிஞ்சா300 பைக்கில் அனலாக் டேகோமீட்டர், டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர், ட்ரிப் மீட்டர், ஓடோமீட்டர், மற்றும் இரவிலும் ஒளிரும் வகையிலான டிஜிட்டல் கடிகாரம் ஆகியவை உள்ளன.

புதிய கவாஸாகி நிஞ்சா300 பைக் விற்பனைக்கு அறிமுகம்

கவாஸாகியின் 2017 நிஞ்சா300 பைக்கில் நீரால் குளிர்விக்கப்படும், 8 வால்வுகள் கொண்ட பாரத் ஸ்டேஜ்-4 சான்று பெற்ற 296சிசி 4 ஸ்டிரோக் இஞ்சின் உள்ளது. இது அதிகபட்சமாக 39 பிஹச்பி ஆற்றலையும், 27 என்எம் டார்க்கையும் வழங்குகின்றது. இதில் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உள்ளது.

புதிய கவாஸாகி நிஞ்சா300 பைக் விற்பனைக்கு அறிமுகம்

அதிகபட்சமாக 182 கிமீ வேகத்தில் செல்லக்கூடிய நிஞ்சா300 பைக் 0-100 கிமீ வேகத்தை 6.73 நொடிகளில் எட்டிப்பிடித்துவிடும். டிஓஹச்சி இஞ்சின் என்பதால் சத்தம், அதிர்வுகள் மற்றும் கடினத்தன்மை ஆகியவை குறைவாக இருக்கும்.

புதிய கவாஸாகி நிஞ்சா300 பைக் விற்பனைக்கு அறிமுகம்

நிஞ்சா300 பைக்கின் சீட் மிக சொகுசாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்லிப்பர் கிளட்ச் உள்ளதால் கியர் மாற்றுவது எளிதாக உள்ளது. எனினும் ஏபிஎஸ் பிரேக்கிங் இல்லாமல் இருப்பது பெரும் குறையாக உள்ளது.

17 இஞ்ச் அலாய் வீல்கள் கொண்ட இது, 2,015 மிமீ நீளமும், 715 மிமீ அகலமும், 1,110 மிமீ உயரமும் கொண்டது. இதன் வீல் பேஸ் 1,405 மிமீ ஆகும்.

புதிய கவாஸாகி நிஞ்சா300 பைக் விற்பனைக்கு அறிமுகம்

நிஞ்சா 300 நகர சாலைகளில் 15-20 கிமீ மற்றும் ஹைவேக்களில் 20-25 கிமீ மைலேஜ் தருகிறது. வெள்ளை மற்றும் பச்சை வண்ணங்களில் நிஞ்சா300 பைக் கிடைக்கிறது.

புதிய கவாஸாகி நிஞ்சா300 பைக் விற்பனைக்கு அறிமுகம்

17 லிட்டர் பெட்ரோல் டேங்க் கொள்ளளவு கொண்ட நிஞ்சா300 பைக், 172 கிலோ எடை கொண்டது. முன்புறம் ஃபோர்க் மற்றும் பின்புறம் கேஸ் ஷாக் அப்சார்பர்கள் உள்ளன.

புதிய கவாஸாகி நிஞ்சா300 பைக் விற்பனைக்கு அறிமுகம்

புதிய நிஞ்சா300 பைக் ரூ.3.64 லட்சம் (எக்ஸ்ஷோரூம், டெல்லி) என்ற விலையில் கிடைக்கிறது. இது களத்தில் உள்ள கேடிஎம் ஆர்சி390, யமஹா ஒய்இசட்எஃப்-ஆர்3 மற்றும் ஹயோசங் ஜிடி250ஆர் பைக்குகளுக்கு போட்டியாக விளங்கும்.

English summary
2017 Kawasaki Ninja 300 launched in India

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark