இந்தியாவில் அறிமுகமாகியுள்ள புதிய கவாஸாகி நிஞ்சா650 பைக் பற்றிய முழு விவரம்!

Posted By: Staff

இந்திய வாகனச் சந்தையில் சூறாவளி போல ஒரே நாளில் 5 புதிய ஸ்போர்ட்ஸ் பைக்குகளை அறிமுகப்படுத்தி பைக் பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளது ஜப்பானைச் சேர்ந்த கவாஸாகி நிறுவனம். இதில் நிஞ்சா650 பைக் பற்றி விரிவாக காணலாம்.

புதிய கவாஸாகி நிஞ்சா650 பைக் விற்பனைக்கு அறிமுகம்

நிஞ்சா650 பைக் முதல் முறையாக கடந்த ஆண்டு ஜெர்மனியில் நடந்த இண்டெர்மோட் வாகன கண்காட்சியில் முதல் முறையாக பார்வைக்கு வைக்கப்பட்டது. கவாஸாகியின் ஈஆர்-6எஃப் என்ற மாடலுக்கு பதிலாக புதிய நிஞ்சா650 பைக் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஈஆர்-6எஃப் பைக்கின் வழித்தோன்றலாக இது உள்ளது.

புதிய கவாஸாகி நிஞ்சா650 பைக் விற்பனைக்கு அறிமுகம்

புதிய ட்ரெலிஸ் டைப் ஸ்டீல் சேஸிஸ் மற்றும் அலுமினியம் ஸ்விங்-ஆர்ம் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளதால் முந்தையை ஈஆர்-6எஃப் மாடலைக் காட்டிலும் 19 கிலோ எடை குறைவாக உள்ளது புதிய நிஞ்சா650 பைக்.

புதிய கவாஸாகி நிஞ்சா650 பைக் விற்பனைக்கு அறிமுகம்

நடுத்தர எடை கொண்ட பைக் செக்மெண்டில் நுழைந்துள்ள நிஞ்சா650, மற்ற நிறுவன பைக்குகளுக்கு கடுமையான போட்டியளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள அகலமான இரட்டை ஹெட்லைட்டுகள் மற்றும் கூர்மையான பின்புறம் இந்த பைக்குக்கு ட்ரெண்டி லுக்கை அளிக்கிறது.

புதிய கவாஸாகி நிஞ்சா650 பைக் விற்பனைக்கு அறிமுகம்

முந்தைய மாடலைக்காட்டிலும் இந்த பைக்கின் சீட் உயரம் 790 மிமீ ஆக குறைக்கப்பட்டுள்ளதால், ரைடர்களுக்கு சிறந்த கையாளும் வசதியை வழங்குகிறது. இதன் விண்ட் ஸ்கிரீனை தேவைக்கேற்ப அட்ஜஸ்ட் செய்துகொள்ளலாம்.

புதிய கவாஸாகி நிஞ்சா650 பைக் விற்பனைக்கு அறிமுகம்

கவாஸாகி நிஞ்சா650 பைக்கில் லிக்விட் கூல்டு 649சிசி இரட்டை இணை இஞ்சின் உள்ளது. இது அதிகபட்சமாக 67 பிஹச்பி ஆற்றலையும், 65.7 என்எம் டார்க்கையும் வழங்குகின்றது. இதில் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உள்ளது.

புதிய கவாஸாகி நிஞ்சா650 பைக் விற்பனைக்கு அறிமுகம்

ஏபிஎஸ் பிரேக்கிங் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் ஆகியவை இதில் ஸ்டேண்டர்ட் அம்சங்களாக கொடுக்கப்பட்டுள்ளன. டிஜிடல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், கியர் ஷிஃப்ட் இண்டிகேட்டர் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.

புதிய கவாஸாகி நிஞ்சா650 பைக் விற்பனைக்கு அறிமுகம்

17 இஞ்ச் அலாய் வீல்கள் கொண்ட நிஞ்சா650 பைக், 2,110 மிமீ நீளமும், 770 மிமீ அகலமும், 1,180 மிமீ உயரமும் கொண்டது. இதன் வீல் பேஸ் 1,410 மிமீ ஆகும். கிரவுண்ட் கிளியரன்ஸ் 130 கிமீ ஆக உள்ளது.

புதிய கவாஸாகி நிஞ்சா650 பைக் விற்பனைக்கு அறிமுகம்

16 லிட்டர் பெட்ரோல் டேங்க் கொள்ளளவு கொண்ட நிஞ்சா650 பைக், 211 கிலோ எடை கொண்டது. முன்புறம் 120 மிமீ டெலஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறம் 7 வகையில் மாற்றக்கூடிய 125 மிமீ ஷாக் அப்சார்பர் கொடுக்கப்பட்டுள்ளது.

English summary
Kawasaki launches new Ninja650 in India

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark