விபத்தில் சிக்கி துண்டு துண்டாகி போன கவாஸாகி சூப்பர் பைக்... பெங்களூரில் பயங்கரம்!

Written By:

சக்திவாய்ந்த சூப்பர் பைக்குகள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி விட்டன. இந்த பைக்குகளை வாங்கும் இளைஞர்கள் அதிவேகத்தில் ஓட்டுவதால் பல விபத்துக்கள் நடந்து வருகின்றன.

விபத்தில் துண்டு துண்டாகி போன கவாஸாகி சூப்பர் பைக்!

தற்போது பெங்களூரில் கவாஸாகி நின்ஜா இசட்எக்ஸ்10 ஆர் சூப்பர் பைக் ஒன்று பயங்கர விபத்தில் சிக்கி இருக்கிறது. விபத்தில் சிக்கிய இந்த சூப்பர் பைக் பல துண்டுகளாக உடைந்து போய்விட்டது.

விபத்தில் துண்டு துண்டாகி போன கவாஸாகி சூப்பர் பைக்!

இந்த பைக்கை ஓட்டி வந்த இளைஞர் படுகாயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

விபத்தில் துண்டு துண்டாகி போன கவாஸாகி சூப்பர் பைக்!

இதுபோன்ற சக்திவாய்ந்த மோட்டார்சைக்கிளை ஓட்டும்போது மிகுந்த மனக் கட்டுப்பாடு அவசியம். ஆனால், இளைஞர்கள் இதனை பொருட்படுத்துவதில்லை.

விபத்தில் துண்டு துண்டாகி போன கவாஸாகி சூப்பர் பைக்!

சாலை நிலைகளை அறிந்து கொள்ளாமல் அதிவேகத்தில் செலுத்தி இதுபோன்ற விபத்துக்களில் சிக்கிக் கொள்கின்றனர்.

விபத்தில் துண்டு துண்டாகி போன கவாஸாகி சூப்பர் பைக்!

குறிப்பாக, போக்குவரத்து நெரிசல் மற்றும் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் இதுபோன்ற சூப்பர் பைக்குகளை கண்மூடித்தனமாக செலுத்துவதால் இதுபோன்ற பயங்கர விபத்துக்கள் தொடர் கதையாகி உள்ளன.

விபத்தில் துண்டு துண்டாகி போன கவாஸாகி சூப்பர் பைக்!

மேலும், இந்த பைக்குகளை கட்டுப்படுத்துவதற்கான திறனை பெறுவதற்கு சில மாதங்கள் பிடிக்கும். அந்த ஓட்டுதல் பக்குவம் வரும் வரை இந்த பைக்குகளை அதிவேகத்தில் ஓட்டுவதை தவிர்க்கவும்.

விபத்தில் துண்டு துண்டாகி போன கவாஸாகி சூப்பர் பைக்!

மேலும், நண்பர்களிடம் இதுபோன்ற சூப்பர் பைக்குகளை ஜாலி ரைடு செல்வதற்கு கொடுப்பதை தவிர்ப்பதும் நல்லது. பல ஜாலி ரைடுகள் இவ்வாறு சோகத்தில் முடிந்துபோகின்றன என்பதை மனதில் வையுங்கள்.

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
The latest such incident is of a Kawasaki Ninja ZX-10R, that has met with a severe crash in Bangalore.
Story first published: Wednesday, June 7, 2017, 15:54 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark