எஸ்டபிள்யூஎம் மோட்டார்சைக்கிள்களை இந்தியாவில் களமிறக்கும் கைனெட்டிக்!!

இத்தாலியின் எஸ்டபிள்யூஎம் மோட்டார்சைக்கிள்களை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு கைனெட்டிக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

By Saravana Rajan

நம் நாட்டில் விலை உயர்ந்த மோட்டார்சைக்கிள்களுக்கான வரவேற்பு அதிகரித்து வருகிறது. இதனை மனதில் வைத்து பல வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் கால் பதிக்க தீவிரம் காட்டி வருகின்றன. அதேபோன்று, வாகன உற்பத்தி துறையில் அனுபவம் வாய்ந்த பல இந்திய நிறுவனங்களும் வெளிநாட்டு மோட்டார்சைக்கிள்களை தங்களது நெட்வொர்க் மூலமாக விற்பனை செய்ய ஆர்வம் காட்டி வருகின்றன.

இந்தியாவில் களமிறங்கும் மற்றுமொரு இத்தாலி மோட்டார்சைக்கிள் பிராண்டு!

அந்த வகையில், இருசக்கர வாகன உற்பத்தி துறையிலும், வாகன உதிரிபாக உற்பத்தியிலும் பிரபலமான கைனெட்டிக் நிறுவனம் இத்தாலியை சேர்ந்த எஸ்டபிள்யூஎம் நிறுவனத்தின் பிரிமியம் மோட்டார்சைக்கிள் மாடல்களை இந்தியாவில் விற்பனைக்கு களமிறக்க திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் களமிறங்கும் மற்றுமொரு இத்தாலி மோட்டார்சைக்கிள் பிராண்டு!

மோட்டோராயல் என்ற தனது ஷோரூம்கள் மூலமாக எம்வி அகஸ்ட்டா பிரிமியம் மோட்டார்சைக்கிள்களை கைனெட்டிக் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இப்போது அதே மோட்டோராயல் ஷோரூம்கள் வாயிலாக எஸ்டபிள்யூஎம் நிறுவனத்தின் பிரிமியம் பைக்குகளையும் விற்பனை செய்ய திட்டமிட்டு இருக்கிறது.

இந்தியாவில் களமிறங்கும் மற்றுமொரு இத்தாலி மோட்டார்சைக்கிள் பிராண்டு!

இத்தாலியை சேர்ந்த எஸ்டபிள்யூஎம் நிறுவனம் 1971ம் ஆண்டு ஸ்தாபிதம் செய்யப்பட்டு, 1980ம் ஆண்டு வரை மோட்டார்சைக்கிள்களை தயாரித்தது. அதன்பின்னர் இருசக்கர வாகன உற்பத்தியை கைவிட்ட அந்த நிறுவனம், கடந்த 2014ம் ஆண்டு பல புதிய மாடல்களுடன் 2104ம் ஆண்டு இத்தாலியின் மிலன் நகரில் நடந்த மோட்டார்சைக்கிள் கண்காட்சி மூலமாக மீண்டும் களமிறங்கியது.

இந்தியாவில் களமிறங்கும் மற்றுமொரு இத்தாலி மோட்டார்சைக்கிள் பிராண்டு!

300சிசி முதல் 650சிசி வரையிலான ரக எஞ்சின்கள் பொருத்தப்பட்ட 6 ஸ்ட்ரீட் மோட்டார்சைக்கிள்கள் மற்றும் ஆஃப்ரோடு மோட்டார்சைக்கிள்களை எஸ்டபிள்யூஎம் நிறுவனம் அறிமுகம் செய்தது. இந்த நிலையில், எஸ்டபிள்யூஎம் நிறுவனத்தின் கிரான் மிலானோ மற்றும் சில்வர் வாஸ் மோட்டார்சைக்கிள் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய கைனெட்டிக் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் களமிறங்கும் மற்றுமொரு இத்தாலி மோட்டார்சைக்கிள் பிராண்டு!

கிரான் மிலானோ மோட்டார்சைக்கிள் கஃபே ரேஸர் ரகத்தை சேர்ந்தது. இந்த மோட்டார்சைக்கிளில் 445.3சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 30 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும். இந்த மோட்டார்சைக்கிளுக்கான சில உதிரிபாகங்களை கைனெட்டிக் நிறுவனம்தான் சப்ளை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா வரும் ரெனோ கேப்டூர் எஸ்யூவியின் படங்கள்!

விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் புதிய ரெனோ கேப்டூர் எஸ்யூவியின் படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

More from DriveSpark

Article Published On: Monday, February 20, 2017, 12:36 [IST]
English summary
Kinetic Plans To Launch SWM Premium Bikes In India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+