பிஎஸ்-3 டூ வீலர் வாங்கினால் பதிவு செய்ய முடியுமா? - குழப்பத்திற்கான தீர்வு!

பிஎஸ்-3 இருசக்கர வாகனத்தை வாங்குவது குறித்த குழப்பங்களும், அதற்கான தீர்வுகளையும் இங்கே காணலாம்.

By Saravana Rajan

பிஎஸ்-3 எஞ்சின் பொருத்தப்பட்ட வாகனங்களை ஏப்ரல் 1 முதல் விற்பனை செய்யவோ, பதிவு செய்யவோக்கூடாது என்று உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

பிஎஸ்-3 டூ வீலர் வாங்கினால் பதிவு செய்ய முடியுமா? - குழப்பத்திற்கான தீர்வு!

இதையடுத்து, இருப்பில் உள்ள வாகனங்களை விற்று தீர்க்கும் விதமாக விலையில் நேரடியாக ரூ.25,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. பிரிமியம் பைக்குகளுக்கு ரூ.2 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

பிஎஸ்-3 டூ வீலர் வாங்கினால் பதிவு செய்ய முடியுமா? - குழப்பத்திற்கான தீர்வு!

தள்ளுபடியில் இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்படுவது குறித்த செய்தி தீயாக பரவியது. இதையடுத்து, நேற்று முதல் இருசக்கர வாகன விற்பனை மையங்களில் கூட்டம் அலை மோதுகிறது.

பிஎஸ்-3 டூ வீலர் வாங்கினால் பதிவு செய்ய முடியுமா? - குழப்பத்திற்கான தீர்வு!

இந்த நிலையில், பிஎஸ்3 வாகனங்களை வாங்குவது குறித்து பலருக்கும் குழப்பம் நிலவுகிறது. பிஎஸ்-3 வாகனங்களை வாங்கினால் பதிவு செய்ய முடியுமா என்ற சந்தேகமும் இருக்கிறது.இந்த குழப்பத்திற்கு விடையாக இந்த செய்தி அமைகிறது.

பிஎஸ்-3 டூ வீலர் வாங்கினால் பதிவு செய்ய முடியுமா? - குழப்பத்திற்கான தீர்வு!

பிஎஸ்-3 வாகனங்களை விற்பனை செய்யவும், பதிவு செய்யவும் தடை விதிக்கப்பட்டிருப்பது உண்மை. அதேநேரத்தில், இன்றுக்குள் பிஎஸ்-3 வாகனங்களை வாங்கியவர்கள், முன்பதிவு செய்து வாகனத்தை டெலிவிரி பெறாதவர்களுக்கு இந்த விதிமுறை பொருந்தாது.

பிஎஸ்-3 டூ வீலர் வாங்கினால் பதிவு செய்ய முடியுமா? - குழப்பத்திற்கான தீர்வு!

அப்படியானால், இன்றுக்குள் உங்களது பெயரில் இன்வாய்ஸ் போடப்பட்டிருக்க வேண்டும். அப்படி இருந்தால், தற்காலிக பதிவு எண்ணுடன் உங்களுக்கு வாகனம் டெலிவிரி கொடுக்கப்படும். இல்லாதபட்சத்தில் முன்பதிவு செய்ததற்கான அத்தாட்சியுடன் பிஎஸ்-3 வாகனத்தை டெலிவிரி பெறவும் முடியும்.

பிஎஸ்-3 டூ வீலர் வாங்கினால் பதிவு செய்ய முடியுமா? - குழப்பத்திற்கான தீர்வு!

தற்காலிக பதிவு எண்ணில் வாங்கப்படும் வாகனங்களை 60 நாட்களுக்குள் நிரந்தர பதிவு செய்து கொள்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. எனவே, இன்று டெலிவிரி பெற்றவர்கள் இன்றே பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை. வேறு ஒரு நாளில் வாகனத்தை ஆர்டிஏ அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.

பிஎஸ்-3 டூ வீலர் வாங்கினால் பதிவு செய்ய முடியுமா? - குழப்பத்திற்கான தீர்வு!

அதேபோன்று, பழைய கார் மற்றும் பைக் மார்க்கெட்டில் பயன்படுத்தப்பட்ட பிஎஸ்-3 வாகனங்களை விற்பனை செய்வதற்கும், வாங்குவதற்கும் எந்த தடையும் இல்லை என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டிய விஷயம்.

பிஎஸ்-3 டூ வீலர் வாங்கினால் பதிவு செய்ய முடியுமா? - குழப்பத்திற்கான தீர்வு!

எனினும், அடுத்த சில ஆண்டுகள் கழித்து விற்பனை செய்யும்போது பிஎஸ்-3 வாகனங்களுக்கான மறுவிற்பனை மதிப்பு குறைவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்பதையும் மனதில் வைத்து முடிவு செய்யுங்கள்.

More from DriveSpark

Article Published On: Friday, March 31, 2017, 12:13 [IST]
English summary
Read in Tamil: Know About Supreme Court Ban Order On BS3 Vehicles.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+