புதிய கேடிஎம் ட்யூக் 250 பைக் விற்பனைக்கு அறிமுகம்- முழு விபரம்!

கேடிஎம் ட்யூக் 250 பைக் இந்தியாவில் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

கடந்த சில நாட்களுக்கு முன் இந்த பைக்கின் ஸ்பை படங்கள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில், யாரும் எதிர்பாராத வகையில், ட்யூக் வரிசையில் புத்தம் புதிய கேடிஎம் ட்யூக் 250 பைக் இந்தியாவில் இன்று அதிரடியாக களமிறக்கப்பட்டு இருக்கிறது.

ட்யூக் 200 மற்றும் ட்யூக் 390 பைக் மாடல்களுக்கு இடையிலான விலையிலும், சிறப்பம்சங்களையும் கொண்டுள்ளது புதிய கேடிஎம் ட்யூக் 250 பைக். இந்த பைக்கில் இடம்பெற்று இருக்கும் சிறப்பம்சங்களை தொடர்ந்து காணலாம்.

புதிய கேடிஎம் ட்யூக் 250 பைக் விற்பனைக்கு அறிமுகம்!

கேடிஎம் ட்யூக் 390 பைக்கின் டிசைன் தாத்பரியங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், சில வேறுபாடுகளை கொண்டுள்ளது. ட்யூக் 390 பைக்கில் இருக்கும் எல்இடி ஹெட்லைட்டுகள் இதில் இல்லை. ஆனால், பல டிசைன் அம்சங்கள் ஒத்துப் போகின்றன.

புதிய கேடிஎம் ட்யூக் 250 பைக் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய கேடிஎம் ட்யூக் 250 பைக்கில் 248சிசி சிங்கிள் சிலிண்டர் லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 30 பிஎஸ் பவரையும், 24 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய கேடிஎம் ட்யூக் 250 பைக் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய கேடிஎம் ட்யூக் 250 பைக்கில் ஸ்லிப்பர் க்ளட்ச் வசதியும் சேர்க்கப்பட்டிருக்கிறது. இது ட்யூக் 200 பைக்கைவிட இது சிறப்பான தேர்வாக அமையும். சக போட்டியாளர்களான யமஹா எஃப்இசட் 25 மற்றும் கவாஸாகி இசட்250 ஆகிய பைக்குகளைவிட கூடுதல் திறன் பெற்ற எஞ்சினாக இதனை கூறலாம்.

புதிய கேடிஎம் ட்யூக் 250 பைக் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய கேடிஎம் ட்யூக் 250 பைக்கில் இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் சிஸ்டசம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் இல்லை. இந்த பைக்கில் எம்ஆர்எஃப் ரெவ்ஸ் சி1 டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

புதிய கேடிஎம் ட்யூக் 250 பைக் விற்பனைக்கு அறிமுகம்!

முன்புறத்தில் அப்சைடு டவுன் ஃபோர்க்குகளுடன் கூடிய சஸ்பென்ஷனும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் உள்ளது. டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

புதிய கேடிஎம் ட்யூக் 250 பைக் விற்பனைக்கு அறிமுகம்!

ரூ.1.73 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் புதிய கேடிஎம் ட்யூக் 250 பைக் விற்பனைக்கு வந்துள்ளது. இது நிச்சயம் கேடிஎம் பிரியர்களை வெகுவாக ஈர்க்கும்.

புதிய ஹூண்டாய் வெர்னா காரின் படங்கள்!

புதிய ஹூண்டாய் வெர்னா காரின் உயர்தர படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

Most Read Articles
English summary
2017 KTM Duke 250 model launched in India. The much-awaited all new KTM 250 Duke is a new model. Read on to know more about the KTM Duke 250's design, specifications, and more.
Story first published: Thursday, February 23, 2017, 13:50 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X