இந்தியாவின் சிறந்த பைக் விருதை வென்றது புதிய கேடிஎம் 390 ட்யூக் பைக்!
2018ம் ஆண்டிற்கான இந்தியாவின் சிறந்த பைக் விருதை புதிய கேடிஎம் 390 பைக் வென்றிருக்கிறது. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் அறிமுகமாகும் புதிய பைக் மாடல்களில் சிறந்த மாடலை தேர்வு செய்து விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில், 2018ம் ஆண்டிற்கான இந்தியாவின் சிறந்த பைக் மாடலுக்கான விருதை, புதிய கேடிஎம் 390 ட்யூக் பைக் பெற்றிருக்கிறது. விரிவானத் தகவல்களை தொடர்ந்து காணலாம்.

இந்த ஆண்டு அறிமுகமான 20 புதிய மோட்டார்சைக்கிள்கள் இந்த விருது பட்டியலில் இடம்பெற்றன. அதில், முதல் கட்ட மதிப்பீடுகளின் அடிப்படையில் ஹீரோ க்ளாமர் 125, சுஸுகி இன்ட்ரூடர் 150, பஜாஜ் பல்சர் என்எஸ் 160, யமஹா எஃப்இசட்25, பெனெல்லி 302ஆர், கேடிஎம் 390 ட்யூக், பஜாஜ் டோமினார் 400, ட்ரையம்ஃப் போனிவில் பாபர், ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் ராட், ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் ஆர்எஸ், ஹோண்டா சிஆர்எஃப்1000எல் ஆப்ரிக்கா ட்வின் மற்றும் எம்வி அகுஸ்ட்டா புரூட்டாலே 800 ஆகிய 12 பைக் மாடல்கள் தேர்வு பெற்றன.
Recommended Video


இதில், இறுதி கட்டத்துக்கு கேடிஎம் 390 ட்யூக், யமஹா எஃப்இசட்25 மற்றும் ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் ஆர்எஸ் ஆகிய மாடல்கள் தேர்வாகின. கடும் போட்டிக்கு மத்தியில் நடுவர்கள் அளித்த மதிப்பீடுகளில் கேடிஎம் 390 ட்யூக் பைக் அதிக புள்ளிகளை பெற்று 2018ம் ஆண்டிற்கான சிறந்த மோட்டார்சைக்கிள் விருதை பெற்றது.

புதிய கேடிஎம் 390 ட்யூக் பைக் 107 புள்ளிகளையும், யமஹா எஃப்இசட்25 பைக் 77 புள்ளிகளையும், ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் ஆர்எஸ் 68 புள்ளிகளையும் பெற்றன. விலை, எரிபொருள் சிக்கனம், டிசைன், சொகுசு, பாதுகாப்பு, செயல்திறன், நடைமுறை பயன்பாடு, தொழில்நுட்பம் மற்றும் விலைக்கு ஏற்ற மதிப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் இந்த தேர்வு நடந்தது.

2018ம் ஆண்டிற்கான சிறந்த மோட்டார்சைக்கிள் விருதை பெற்றிருக்கும் புதிய கேடிஎம் 390 ட்யூக் பைக் அனைத்து விதத்திலும் சிறப்பான தேர்வாக இருப்பதுடன், தன்னிகரில்லா அம்சங்களுடன் வாடிக்கையாளர்களின் தேர்வில் முதலிடம் வகிக்கிறது.

அட்டகாசமான ஸ்டைல், அதி செயல்திறன் மிக்க எஞ்சின், இணையற்ற பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் ஆகியவை இந்த பைக்கிற்கான மதிப்பை வெகுவாக உயர்த்துகின்றன.

இந்த பைக்கில் இருக்கும் 373.2சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் அதிகபட்சமாக 44 பிஎச்பி பவரை அளிக்கும் வல்லமையை பெற்றிருக்கிறது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இதுதவிர, சென்சார் மூலமாக எஞ்சினுக்கு எரிபொருள் செலுத்தும் ரைடு பை வயர் நுட்பம், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டிஎஃப்டி திரையுடன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை இதற்கு சிறப்பு சேர்க்கின்றன.

இந்த புதிய கேடிஎம் 390 ட்யூக் பைக் ரூ.2.35 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது. ஆன்ரோடு விலை ரூ.2.50 லட்சத்தில் கிடைக்கும் இந்த பைக் கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த மாடலாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications








