இந்தியாவில் பரபரப்பாக டெஸ்ட் டிரைவ் செய்யப்பட்டு வரும் கேடிஎம் ஆர்சி 250 பைக்..!!
இந்தியாவில் பரபரப்பாக டெஸ்ட் டிரைவ் செய்யப்பட்டு வரும் கேடிஎம் ஆர்சி 250 பைக்..!!
கேடிஎம் நிறுவனத்திலிருந்து பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஆர்.சி. 250 மோட்டார் சைக்கிள் இந்தியாவில் தீவிரமாக சோதனை செய்யப்பட்டு வருகிறது.

இதற்கான ஸ்பை படங்கள் இணையதளங்களில் வைரலாகி இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆர்சி 250 பைக் மீது பரபரப்பை கூட்டி இருக்கின்றன.

விரைவில் விற்பனைக்கு வரவிருக்கும் இந்த பைக் தோற்றத்தில் ஆர்சி 390 மோட்டார் சைக்கிளை போன்றவே காட்சி அளிக்கிறது.

ஃபுல்லி ஃபோர்டு மோட்டார் சைக்கிள் போல உள்ள இந்த பைக்கின் ஸ்டிக்கர்களில் ஆர்சி 250 என்ற பெயரில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்கிறது கவனமீர்க்கிறது.
Recommended Video


வெளியாகியுள்ள இந்த ஸ்பை படங்கள் மூலம், கேடிஎம் ஆர்சி 250 மாடல் முந்தைய மாடலை விட பல புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

248.8 சிசி சிங்கிள் சிலிண்டர் கொண்டுள்ள இந்த பைக்கின் எஞ்சின் லிக்விட் கூல்டு திறன் உள்ளது. இதன்மூலம் 30 பிஎச்பி பவர் மற்றும் 24என்.எம் டார்க் திறன் கிடைக்கும்.

6-ஸ்பீடு கியர்பாக்ஸ் தேவை பொருத்தப்பட்டுள்ள இந்த பைக்கில். ஏபிஎஸ் சிஸ்டம் இல்லை இருந்தாலும், ரைடு-பை-வையர் திராட்டிகள், ஸ்லிப்பர் கிளட்ச் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டன.

ஆனால் இந்திய அரசின் உத்தரவிற்கு ஏற்ப புதிய மோட்டார் சைக்கிள் விதிகளின்படி ஏபிஎஸ் உடன் தான் ஆர்சி 250 பைக் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் கேடிஎம் டியூக் 250 மாடலுக்கு ரூ.1.75 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதைவிட ஆர்சி 250 மாடலுக்கு கேடிஎம் நிறுவனம் சற்று விலை அதிகமாக நிர்ணயிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேடிஎம் தயாரிப்பில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் ஆர்சி 250 பைக், இந்தியாவில் கவாஸாகி நின்ஜா 300, பென்னலீ 302ஆர், யமஹா ஒய்.இசட்.எஃப்-ஆர்3 உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமையும்.


Click it and Unblock the Notifications








