டபுள்ஸ் போக தடை செய்யப்பட்ட இருசக்கர வாகனங்களின் பட்டியல்... முழுத் தகவல்கள்..!!

பெங்களூருக்கு பைக்கிலேயே டபுள்ஸில் போகும் நபரா நீங்கள்..?? அப்ப இதப்படிங்க முதல்ல..!!

By Azhagar

இருசக்கர வாகனங்களுக்கு யாரும் எதிர்பார்த்திடாத புதிய கட்டுபாடுகளை விதித்து கர்நாடக அரசு இந்தியாவையே திரும்பி பார்க்கவைத்துள்ளது.

பைக்கில் டபுள்ஸ் இனி கிடையாது.... வந்தது புதிய சட்டம்..!!

குறிப்பிட்ட சிசி திறன் கொண்ட இருசக்கர வாகனங்களில் பில்லியன் ரைடிங், அதாவது பின் அமர்ந்து செல்லும் முறையை தடை செய்துள்ளது கர்நாடக அரசு.

பைக்கில் டபுள்ஸ் இனி கிடையாது.... வந்தது புதிய சட்டம்..!!

இந்த சட்டத்தை இயற்றி நடைமுறைப்படுத்தி விட்ட காரணத்தினால், பெங்களூரு வாகன ஓட்டிகள் பலர் அதிருப்தியில் உள்ளனர்.

பைக்கில் டபுள்ஸ் இனி கிடையாது.... வந்தது புதிய சட்டம்..!!

கர்நாடக தலைநகர் பெங்களூரில் இருசக்கர வாகனங்களால் ஏற்படும் விபத்துகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டு வருகிறது.

கடந்த 2016ல் நடைபெற்ற 16,217 பைக் விபத்துகளில் 4,119 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 8,429 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

பைக்கில் டபுள்ஸ் இனி கிடையாது.... வந்தது புதிய சட்டம்..!!

கர்நாடக மாநிலம் முழுவதும் எடுக்கப்பட்ட இந்த புள்ளிவிவரங்களில், தலைநகர் பெங்களூரு விபத்துகளுக்கான தலைநகராக உள்ளது.

பைக்கில் டபுள்ஸ் இனி கிடையாது.... வந்தது புதிய சட்டம்..!!

குறிப்பாக இந்த விபத்துகளில் மரணமடைந்த 4,119 பேரில் பாதி சதவீதத்திற்கு மேலானவர்கள் விபத்து நடந்த பைக்குகளில் பின்னால் அமர்ந்து வந்தவர்கள் தான்.

Trending On DriveSpark:

Recommended Video

[Tamil] Skoda kodiaq Launched In India - DriveSpark
பைக்கில் டபுள்ஸ் இனி கிடையாது.... வந்தது புதிய சட்டம்..!!

இதை மிகவும் தீவிரமாக ஆலோசித்த முதலமைச்சர் சித்தராமையா தலைமையிலான கர்நாடக அரசு, பின்னால் அமர்ந்து வரும் முறைக்கு தடை என்ற சட்டத்தை இயற்றியது.

பைக்கில் டபுள்ஸ் இனி கிடையாது.... வந்தது புதிய சட்டம்..!!

கடந்த 23ம் தேதி பயன்பாட்டிற்கு வந்த சட்டம் எந்தெந்த ரக வாகனங்களுக்கு பொருந்தும் என்பதற்கான அறிவிப்பையும் வெளியிடப்பட்டுள்ளது.

டிவிஎஸ் ஸ்கூட்டி பெப்

டிவிஎஸ் ஸ்கூட்டி பெப்

நடுத்தர குடும்ப பெண்கள் பயன்படுத்தும் முக்கிய மாடல் ஸ்கூட்டி பெப் 87.8சிசி திறன் கொண்ட இந்த ஸ்கூட்டர், 95 கிலோ எடைக்கொண்டது.

5 லிட்டர் பெட்ரோல் கொள்ளவு மற்றும் 65 கி.மீ மைலேஜ் என பல்வேறு சாதகங்கள் இருந்தாலும். பெங்களூரில் இனி ஸ்கூட்டி பெப்பில் டபுள்ஸ் போக முடியாது.

டிவிஎஸ் ஸ்டார் சிட்டி

டிவிஎஸ் ஸ்டார் சிட்டி

டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின் பிரபல பைக் மாடல் இது. மணிக்கு 95 கி.மீ வேகத்தில் செல்லும் இந்த பைக், உகந்த மைலேஜ் தருவதிலும் கில்லாடி.

பைக்கில் டபுள்ஸ் இனி கிடையாது.... வந்தது புதிய சட்டம்..!!

கர்நாடக எக்ஸ்-ஷோரூம் படி ரூ.38,676 விலையில் விற்பனையில் உள்ள டிவிஎஸ் ஸ்டார் சிட்டி, எலெக்ட்ரின் கியர் ஸ்டார்.

அலுமினியம் கிராப் ரெயில், ஸ்போர்ட்ஸ் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் போன்ற தேவைகளை பெற்றுள்ளது.

ஹீரோ ஹெச்.எஃப் டீலக்ஸ் & ஹெச்.எஃப் டீலக்ஸ் ஈகோ

ஹீரோ ஹெச்.எஃப் டீலக்ஸ் & ஹெச்.எஃப் டீலக்ஸ் ஈகோ

இந்தியாவில் இருசக்கர வாகன விற்பனையின் மிகப்பெரிய சந்தையை பெற்றுள்ள நிறுவனம் ஹீரோ. அதன் சில மாடல்களும் பில்லியன் ரைடிங் தடைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன.

பைக்கில் டபுள்ஸ் இனி கிடையாது.... வந்தது புதிய சட்டம்..!!

அதன்படி 97.2 சிசி திறன் கொண்ட ஹீரோவின் பிரபலமான மாடல்களில் ஒன்று டீலக்ஸ் சிரீஸை வைத்திருப்பவர்கள், இனி அதில் டபுள்ஸ் போக முடியாது.

ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் & ப்ரோ

ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் & ப்ரோ

ஹீரோவிற்கு இந்தியளவில் விற்பனையை தொடர்ந்து பெற்று தந்துக்கொண்டு இருக்கும், ஸ்பிளெண்டர் பிளஸ் & ப்ரோ பைக்குகளை பெங்களூரில் நிறைய பேர் வைத்துள்ளனர்.

பைக்கில் டபுள்ஸ் இனி கிடையாது.... வந்தது புதிய சட்டம்..!!

அதனால் குறைந்தது அந்நகரத்தில் நடக்கும் விபத்துகளில் பெரும்பாலும் சிக்கும் பைக் இதுவாக்கத்தான் இருக்கும்.

பைக்கில் டபுள்ஸ் இனி கிடையாது.... வந்தது புதிய சட்டம்..!!

நண்பனின் வருகை, அவசர கதிக்கு உறவினர்களை மருத்துவமைக்கு அழைத்து செல்ல போன்ற பல தேவைகளுக்கு பயன்பட்ட இந்த பைக்கில் இனி பெங்களூர் வாசிகள் டபுள்ஸ் போக முடியாது என்பது கொஞ்சம் வருத்தமான ஒன்று தான்.

டிவிஎஸ் எக்ஸ்.எல் 100

டிவிஎஸ் எக்ஸ்.எல் 100

99.7சிசி டிவிஎஸ் எக்ஸ்.எல் மொப்படு ஸ்கூட்டர் சிறிய ரக தேவைகளுக்கு ஏற்ற வாகனம். குறிப்பாக ஊரக பகுதிகளில் இதனுடைய பங்கு என்பது முக்கியமானது.

தற்போது இதை நகர்புற சாலைகளில் பார்ப்பது அறிது தான் என்றாலும், தொடர்ந்து இந்தியாவில் பல்வேறு ஊரகப்பகுதிகளில் இதனுடைய விற்பனை இன்னும் தொடர்கிறது.

பஜாஜ் சிட்டி 100

பஜாஜ் சிட்டி 100

நகர்புறங்களுக்கு ஏற்ற சிறந்த ஒரு வாகனம் என்றால் அது சிட்டி 100 என்பது பலரது எண்ணம். மணிக்கு 89.5 கி.மீ வேகத்தில் செல்லும் இந்த பைக்கில் 97.2சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் உள்ளது.

ஏர்கூல்டு முறையில் இயங்கும் இந்த எஞ்சின் மூலம் 8.08 பிஎச்பி பவர் மற்றும் 8.04 என்.எம் டார்க் திறன் கிடைக்கும்.

ஹீரோ பேஷன் ப்ரோ ஐ3எஸ்

ஹீரோ பேஷன் ப்ரோ ஐ3எஸ்

கர்நாடக பில்லியன் ரைடிங் தடை செய்த மாடல்களில் பல இடங்களை பெற்றிருப்பது ஹீரோவின் தயாரிப்புகள் தான்.

மணிக்கு 84கி.மீ வேகத்தில் செல்லும் இந்த பைக் 97.2சிசி திறன் கொண்ட எஞ்சினையே பெற்றுள்ளது.

பைக்கில் டபுள்ஸ் இனி கிடையாது.... வந்தது புதிய சட்டம்..!!

பெங்களூரில் நகரத்திற்கு மட்டுமே பில்லியன் ரைடிங் தடையை கர்நாடக அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. இதில் பெங்களூரில் புறநகர் பகுதிகளும் அடங்கும்.

பைக்கில் டபுள்ஸ் இனி கிடையாது.... வந்தது புதிய சட்டம்..!!

தற்போது பயன்பாட்டில் இருக்கும் வாகனங்களுக்கு இந்த கட்டுபாடுகள் இல்லை. புதியதாக வாங்கி பதிவிடப்படும் வாகனங்களுக்கு மட்டுமே பில்லியன் ரைடிங் தடை பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Friday, October 27, 2017, 11:45 [IST]
English summary
Read in Tamil: List of Two Wheelers Banned in Karnataka Below 100 CC Capacity. Click for Details...
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+