மஹிந்திரா கஸ்ட்டோ ஆர்எஸ் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!
மஹிந்திரா கஸ்ட்டோ 110 ஸ்கூட்டரின் ஆர்எஸ் என்ற ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
மஹிந்திரா கஸ்ட்டோ ஆர்எஸ் 110 ஸ்கூட்டர் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

மாஸ் மார்க்கெட் எனப்படும் அதிகம் விற்பனையாகும் பட்ஜெட் பைக், ஸ்கூட்டர் மாடல்களின் தயாரிப்பை நிறுத்துவதற்கு மஹிந்திரா திட்டமிட்டுள்ளது. அத்துடன், பிரிமியம் ரக பைக் மார்க்கெட்டில் இனி கவனம் செலுத்த போவதாகவும் தெரிவித்தது.

இந்த நிலையில், கையில் இருப்பு இருக்கும் விலை குறைவான ரகத்திலான பைக், ஸ்கூட்டர்களின் விற்பனையை தீவிரப்படுத்தி இருக்கிறது மஹிந்திரா. அதன்படி, கஸ்ட்டோ ஸ்கூட்டரின் 110சிசி மாடலில் ஆர்எஸ் என்ற புதிய வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது.

புதிய ஸ்டிக்கர் அலங்காரத்துடன் இந்த புதிய கஸ்ட்டோ ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்துள்ளது. சிவப்பு - வெள்ளை மற்றும் நீலம்- வெள்ளை என இரண்டு இரட்டை வண்ணங்களில் கிராஃபிக்ஸ் டிசைனர் ஸ்டிக்கருடன் கிடைக்கும்.

மற்றபடி, வேறு எந்த மாற்றங்களும் இல்லை. மேலும், மிக குறைவான எண்ணிக்கையில் இந்த கஸ்ட்டோ ஆர்எஸ் ஸ்கூட்டர்கள் இருப்பில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த ஸ்கூட்டரில் இருக்கும் 109.6சிசி எஞ்சின் அதிகபட்சமாக 8 பிஎச்பி பவரையும், 9 என்எம் டார்க் திறனையும் வழங்கும். சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டரில் 12 அங்குல அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. 12 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது.
Trending On DriveSpark Tamil:

இந்த ஸ்கூட்டரை பேடிஎம் மால் இணைய தளம் மூலமாக முன்பதிவு செய்து வாங்குவோருக்கு ரூ.6,000 கேஷ்பேக் சலுகையும் வழங்கப்படுகிறது. வரும் 20ந் தேதிக்குள் இந்த ஸ்கூட்டரை முன்பதிவு செய்வோர் இந்த சலுகையை பெற முடியும்.

புதிய மஹிந்திரா கஸ்ட்டோ 110 ஆர்எஸ் ஸ்கூட்டர் ரூ.48,180 எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. பார்ப்பதற்கு கவர்ச்சிகரமாக இருந்தாலும், மாஸ் மார்க்கெட்டில் இருந்து மஹிந்திரா இருசக்கர வாகன நிறுவனம் விலக இருப்பதாக கூறி இருப்பது வாடிக்கையாளர்களுக்கு ஏமாற்றம் தரும் செய்தியாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications








