விரைவில் அறிமுகமாகிறது மோஜோ அட்வென்ச்சர் பைக்: மஹிந்திரா உறுதி
இந்தியாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள, மஹிந்திராவின் மோஜோ அட்வென்ச்சர் பைக் விரைவில் விற்பனைக்கு வரும் என மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆஃப் ரோடு சாகச பயணங்களை மேற்கொள்ள மஹிந்திரா தயாரித்திருக்கும் மோஜோ மோட்டார் அட்வென்ச்சர் சைக்கிள் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. பல மாறுபாடுகளுடன் முற்றிலும் சாகச விரும்பிகளை குறிவைத்து தயாரிக்கப்பட்டுள்ள இந்த மாடல் இந்தியாவில் அதீத எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரில் இன்று நடந்த மஹிந்திரா மோஜோ பைக்கிற்கான பிரத்யேக ஷோரூம் திறப்பு விழாவில், புதிய மோஜோ அட்வென்ச்சர் பைக் மாடல் வெளிவருவதை மஹிந்திரா மார்கெட்டிங் பிரிவின் மேலாளர் நவின் மல்ஹோத்ரா டிரைவ்ஸ்பார்க் தளத்திடம் உறுதிசெய்தார்.

கடந்தாண்டில் நொய்டாவில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்ஃபோவில் மஹிந்திரா மோஜோ அட்வென்ச்சர் மாடல் முதன்முறையாக காட்சிப்படுத்தப்பட்டது. எந்தவிதமான பள்ளம், மேடுகளிலும் சரியாக ஏறி, இறங்குவதற்கு வசதியாக லாங் டிராவல் சஸ்பென்ஷன் அமைப்பு இருப்பது இதன் சிறப்பு.

கரடுமுரடான வழி மற்றும் சாதரண சாலைகளுக்கு ஏற்றவாறு இலகுவாக பயணிக்கும் சக்கரங்கள், பொருட்களுக்கு ஏற்றவாறு இருக்கையை கஸ்டமைஸ் செய்துகொள்ளும் வசதி என குறிப்பிடும்படியான அம்சங்களுடன் மஹிந்திரா மோஜோ அட்வென்ச்சர் பைக் தயாரிக்கப்படவுள்ளதாக கடந்த ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்ஃபோவில் கூறப்பட்டது.

அதற்கு ஏற்றவாறான தோற்றம், வடிவம் ஆகியவற்றில் முற்றிலும் ஈர்ப்பை பெற்றுள்ள மஹிந்திரா மோஜோ அட்வென்ச்சர் பைக் இந்திய சாலைகளில் பறந்து செல்வதை பார்க்க ஒரு பெருங்கூட்டமே உள்ளது. மஹிந்திரா அறிமுகப்படுத்தப்பட்டால், பல சமூக வலைதளங்களிலும் அன்றைய நாளில் மோஜோ டிரெண்டாகும் என்றும் தகவல்கள் உள்ளன.

மோட்டார் சைக்கிளின் சாகச விரும்பிகளை குறிவைத்து உருவாக்கப்பட்டுள்ள மஹிந்திரா மோஜோ அட்வென்ச்சர் பைக் எப்போது வெளிவரும் என்பதில் இன்னும் உறுதியான தகவல்களை மஹிந்திரா வெளியிடவில்லை. இருந்தாலும் இந்தியா எங்கும் மோஜோ அட்வென்ச்சர் பைக்கை விளம்பரப்படுத்தும் பணிகளுக்காக மஹிந்திரா பெரிய திட்டங்களை வைத்துள்ளது.

மஹிந்திராவின் மோஜோ பைக் வருகையால், மார்கெட்டில் சூடுபிடிக்கும் வரவேற்பில் உள்ள ராயல் என்ஃபீல்டின் ஹிமாலயன் மற்றும் கே.டி. எம் 390 அட்வென்ஞ்சர் ஆகிய மாடல்களுக்கு பலத்த போட்டியாக அமையும் என ஆட்டோமொபைல் வல்லுநர்கள் ஆருடம் கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications








