அமெரிக்காவில் சக்கைப்போடு போடும் மின்சார ஸ்கூட்டரை இந்தியாவிற்கு கொண்டு வரும் மஹிந்திரா..!!
அமெரிக்காவில் சக்கைப்போடு போடும் மின்சார ஸ்கூட்டரை இந்தியாவிற்கு கொண்டு வரும் மஹிந்திரா..!!
மஹிந்திரா இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனம் இந்தியாவிற்கான மின்சார திறன் பெற்ற ஜென்ஸீ (GenZe) என்ற புதிய ஸ்கூட்டரை வெளியிட முடிவு செய்துள்ளது.

இந்தியாவிற்கு தான் இந்த ஸ்கூட்டர் புதியது. ஆனால் வட அமெரிக்க பகுதிகளில் ஜென்ஸீ ஸ்கூட்டர்கள் ஏற்கனவே விற்பனையில் உள்ளன.

அங்கு 1.6 கிலோ வாட் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் ஜென்ஸீ ஸ்கூட்டர்கள், 3.5 மணி நேரத்திலேயே முழுமையாக சார்ஜ் ஆகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

மணிக்கு 48 கி.மீ வேகத்தில் செல்லும் திறன் கொண்ட ஜென்ஸீ ஸ்கூட்டர்கள், 10 நொடிகளில் ஸ்கூட்டருக்கான முழு வேகத்தையும் எட்டும் ஆற்றல் கொண்டது.

மேலும் மஹிந்திராவின் ஜென்ஸீ ஸ்கூட்டர்கள் 105.5 கிலோ எடைக்கொண்டது. இதனால் 133 கிலோ எடை வரை சுமக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங், சக்கரங்களின் டிஸ்க் பிரேக் என ஸ்கூட்டருக்கான பிரேக்கிங் செயல்பாடுகளுடன், ஸ்போர்ட், எகனாமி, ஈசி, கஸ்டம் என நான்கு டிரைவிங் மோடுகளை இது பெற்றுள்ளது.

எல்.இ.டி முறையில் இயங்கும் விளக்குகள் மற்றும் எல்.இ.டி தொடுதிரை கொண்ட மானிட்டர் ஒன்றும் ஜென்ஸீ ஸ்கூட்டரில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த மானிட்டர் மூலம், வாகனம் பற்றிய தகவல்களை தெரிந்துக்கொள்வதோடு, அவற்றை கிளவுட் ஸ்டோரேஜில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளவும் முடியும்.

வட அமெரிக்காவின் பெரிய வியாபார வட்டத்தை பெற்றுள்ள இந்த ஸ்கூட்டர் அங்கு 3000 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் 2 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றன.

இந்தியாவில் இந்த விலையில் மின்சார திறன் கொண்டு இயங்கும் ஸ்கூட்டர்களுக்கு வியாபார வட்டத்தை உருவாக்க முடியாது.

அதனால் இந்தியாவில் ஜென்ஸீ ஸ்கூட்டரை மஹிந்திரா வெளியிடும்போது, பல மாற்றங்கள் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மஹிந்திரா ஜென்ஸீ ஸ்கூட்டர்களை இந்திய சூழல்களுக்கு ஏற்ப மாற்றியக்கப்படும் எனவும் கூடுதலாக வேகமும் அதிகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








