ரஜினி கிருஷ்ணன் ரேஸ் பைக் பெட்ரோல் டேங்கில்த நீர் ஊற்றி நாசப்படுத்திய மர்ம நபர்கள்!

தமிழகத்தை சேர்ந்த பிரபல பைக் பந்தய வீரர் ரஜினி கிருஷ்ணனின் ரேஸ் பைக்கை மர்ம நபர்கள் கடுமையாக சேதப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

By Saravana Rajan

தமிழகத்தை சேர்ந்த பிரபல பைக் ரேஸர் ரஜினி கிருஷ்ணன். கடந்த 16 ஆண்டுகளுக்கும் மேலாக தேசிய மற்றும் சர்வதேச அளவிலான பைக் பந்தயங்களில் இவர் கலந்து கொண்டு தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்து வருகிறார்.

ரஜினி கிருஷ்ணன் ரேஸ் பைக்கில் தண்ணீர் ஊற்றி நாசப்படுத்திய மர்ம நபர்கள்!

தேசிய அளவிலான பல சாம்பியன் பட்டங்களையும் வென்றிருக்கிறார். இந்த நிலையில், அவருக்கு எதிராக நடந்த சதி குறித்து அவர் கூறி இருக்கும் தகவல்கல் பேரதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

ரஜினி கிருஷ்ணன் ரேஸ் பைக்கில் தண்ணீர் ஊற்றி நாசப்படுத்திய மர்ம நபர்கள்!

கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில், ஜேகே டயர் எஃப்எம்எஸ்சிஐ தேசிய ரேஸிங் சாம்பியன்ஷிப் பைக் பந்தயம், டெல்லி புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் நேற்று முன்தினம் நடந்தது.

ரஜினி கிருஷ்ணன் ரேஸ் பைக்கில் தண்ணீர் ஊற்றி நாசப்படுத்திய மர்ம நபர்கள்!

தகுதிச் சுற்றில் ரஜினி கிருஷ்ணன் சிறப்பான புள்ளிகளை பெற்றிருந்ததால், நேற்று நடந்த போட்டியில் முதன்மை இடத்திலிருந்து போட்டியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பையும் பெற்றிருந்தார்.

ரஜினி கிருஷ்ணன் ரேஸ் பைக்கில் தண்ணீர் ஊற்றி நாசப்படுத்திய மர்ம நபர்கள்!

இந்த சூழலில், ரஜினி கிருஷ்ணன் போட்டியில் கலந்து கொள்வதை தடுக்கும் விதத்தில், அவர் பயன்படுத்த இருந்த 2014 கவாஸாகி இசட்10ஆர் ரேஸ் பைக்கின் பெட்ரோல் டேங்க்கில் தண்ணீரை ஊற்றிவிட்டனர் மர்ம நபர்கள்.

ரஜினி கிருஷ்ணன் ரேஸ் பைக்கில் தண்ணீர் ஊற்றி நாசப்படுத்திய மர்ம நபர்கள்!

மேலும், மிகவும் கடினப்பட்டு தயாரிக்கப்பட்ட சஸ்பென்ஷனையும் சேதப்படுத்தியிருக்கின்றனர். இதனால், ரஜினி கிருஷ்ணன் நேற்றைய போட்டியில் பங்கு கொள்ள இயலாத நிலை ஏற்பட்டது. இது ரஜினி கிருஷ்ணனுக்கு மட்டுமின்றி, அவரது ஆதரவாளர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ரஜினி கிருஷ்ணன் ரேஸ் பைக்கில் தண்ணீர் ஊற்றி நாசப்படுத்திய மர்ம நபர்கள்!

இதுகுறித்து தனது கருத்தை ரஜினி கிருஷ்ணன் சமூக வலைதளம் மூலமாக தெரியப்படுத்தி இருக்கிறார். இனி ரேஸில் பங்கு கொண்டுதான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் எனக்கில்லை. எனது டெல்லி ரசிகர்களுக்காகத்தான் போட்டியில் பங்கு பெற முடிவு செய்தேன்.

Recommended Video

[Tamil] Honda CBR 650F Launched In India - DriveSpark
ரஜினி கிருஷ்ணன் ரேஸ் பைக்கில் தண்ணீர் ஊற்றி நாசப்படுத்திய மர்ம நபர்கள்!

ஆனால், மிகவும் பாதுகாப்பான பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த பைக்கில் இவ்வாறு சேதப்படுத்தியிருப்பது அதிர்ச்சியை தருகிறது. இந்த நிகழ்வுகள் இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகின் வளர்ச்சிக்கு உகந்ததல்ல," என்று கூறி இருக்கிறார்.

ரஜினி கிருஷ்ணன் ரேஸ் பைக்கில் தண்ணீர் ஊற்றி நாசப்படுத்திய மர்ம நபர்கள்!

இதனிடையே, பைக்கை சேதப்படுத்தி ரேஸில் கலந்து கொள்ள விடாமல் செய்த, அந்த மர்ம நபரை கண்டுபிடித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரஜினி கிருஷ்ணன் ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள் மூலமாக வலியுறுத்தி வருகின்றனர்.

தனக்கு எதிராக டெல்லி புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் நடந்த சதி தொடர்பாக, ரஜினி கிருஷ்ணன் கூறுவதை வீடியோவில் காணலாம்.

More from DriveSpark

Article Published On: Monday, November 20, 2017, 11:09 [IST]
English summary
Someone Damaged Racer Rajini’s bike before final race at BIC.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+