மணிக்கு 400 கிமீ வேகம்... ஹெலிகாப்டர் எஞ்சின்... உலகின் அதிவேக பைக்கின் லிமிடேட் எடிசன் அறிமுகம்!

Written By:

மணிக்கு 400 கிமீ வேகத்தில் செல்லும் வல்லமை கொண்ட ஒய்2கே பைக்கின் லிமிடேட் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

மணிக்கு 400 கிமீ வேகம் வரை செல்லும் ஒய்2கே பைக்கின் லிமிடேட் எடிசன் அறிமுகம்!

அமெரிக்காவை சேர்ந்த எம்டிடி நிறுவனம் [Marine Turbine Technologies] ஒய்2கே என்ற உலகின் அதிவேக பைக் மாடலை அறிமுகம் விற்பனை செய்து வருகிறது. உலகின் அதிவேகத்தில் செல்லும் பைக் மற்றும் உலகின் விலை உயர்ந்த பைக் போன்ற கின்னஸ் சாதனைகளை படைத்துள்ளது.

மணிக்கு 400 கிமீ வேகம் வரை செல்லும் ஒய்2கே பைக்கின் லிமிடேட் எடிசன் அறிமுகம்!

இந்த நிலையில், கூடுதல் திறனை பெற்ற புதிய ஒய்2கே ஹைப்பர் பைக் தற்போது லிமிடேட் எடிசன் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. பழைய மாடல் 320எச்பி பவரை வழங்கும் ஹெலிகாப்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும் நிலையில், புதிய மாடல் கூடுதல் சக்திவாய்ந்த மாடலாக வெளிவந்துள்ளது.

Recommended Video - Watch Now!
2017 Mercedes-Benz GLC AMG 43 Coupe Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
மணிக்கு 400 கிமீ வேகம் வரை செல்லும் ஒய்2கே பைக்கின் லிமிடேட் எடிசன் அறிமுகம்!

ஒய்2கே 420ஆர்ஆர் என்ற பெயரில் வந்திருக்கும் இந்த புதிய மாடலில், ரோல்ஸ்ராய்ஸ் மற்றும் ஆலீசன் நிறுவனங்களின் கூட்டணியில் தயாரிக்கப்பட்ட கேஸ் டர்பைன் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த சக்திவாய்ந்த எஞ்சின் அதிகபட்சமாக 420 எச்பி பவரையும், 678 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 2 ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது.

மணிக்கு 400 கிமீ வேகம் வரை செல்லும் ஒய்2கே பைக்கின் லிமிடேட் எடிசன் அறிமுகம்!

இந்த பைக்கில் 34 லிட்டர் கொள்ளளவு திறன் கொண்ட எரிபொருள் கலன் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த பைக் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் கலப்பு வகை எரிபொருளில் இயங்குகிறது. இந்த ஹைப்பர் பைக்குகள் அனைத்தும் வாடிக்கையாளர்களின் விருப்பப்படி, 100 சதவீதம் கஸ்டமைஸ் செய்து தரப்படுகிறது.

மணிக்கு 400 கிமீ வேகம் வரை செல்லும் ஒய்2கே பைக்கின் லிமிடேட் எடிசன் அறிமுகம்!

இந்த பைக்கில் இருக்கும் 2 ஸ்பீடு கியர்பாக்ஸில் இரண்டு ஆப்ஷன்கள் இருக்கின்றன. இவற்றை ஒரு சுவிட்ச் மூலமாக மாற்ற முடியும். வேகம் மற்றும் அபாயகரமான வேகம் என்ற இருவிதமான நிலைகளில் இந்த பைக்கின் கியர்களை மாற்றும் வாய்ப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது.

மணிக்கு 400 கிமீ வேகம் வரை செல்லும் ஒய்2கே பைக்கின் லிமிடேட் எடிசன் அறிமுகம்!

இந்த பைக்கின் ஃபேரிங் பேனல்கள் கார்பன் ஃபைபரால் ஆனது. இந்த பைக்கில் எல்சிடி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் மற்றும் ரியர் வியூ கேமரா உள்ளிட்ட சிறப்பம்சங்கள் உள்ளன.

மணிக்கு 400 கிமீ வேகம் வரை செல்லும் ஒய்2கே பைக்கின் லிமிடேட் எடிசன் அறிமுகம்!

அலுமினியம் ஃப்ரேம் பொருத்தப்பட்டிருக்கும் இந்த பைக் 227 கிலோ எடை கொண்டது. இருசக்கரங்களிலும் 17 இன்ச் சக்கரங்களும், பைரெல்லி டயர்களும் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

மணிக்கு 400 கிமீ வேகம் வரை செல்லும் ஒய்2கே பைக்கின் லிமிடேட் எடிசன் அறிமுகம்!

உலகின் அதிவேக பைக் மாடலாக மட்டுமில்லாமல், உலகின் அதிக விலை கொண்ட பைக் மாடலாகவும் இருக்கிறது. இந்திய மதிப்பில் இந்த பைக் ரூ.12.58 கோடி விலை மதிப்பு கொண்டது.

English summary
MTT Introduces Y2K 420RR Limited Edition Model.
Story first published: Tuesday, July 25, 2017, 12:13 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark