புதிய எம்வி அகுஸ்ட்டா புருட்டேல் 800 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்- விபரம்!

புதிய எம்வி அகுஸ்ட்டா புருட்டேல் 800 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. படங்கள், தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

By Saravana Rajan

புதிய எம்வி அகுஸ்ட்டா புருட்டேல் 800 சூப்பர் பைக் இந்தியாவில் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மும்பையில் நடந்த இதற்கான நிகழ்ச்சியில் இருந்து எமது செய்தியாளர் புரோமித் கோஷ் வழங்கிய தகவல்கள், படங்களை இந்த செய்தியில் காணலாம்.

 புதிய எம்வி அகுஸ்ட்டா புருட்டேல் 800 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்- விபரம்!

எம்வி அகுஸ்ட்டா புருட்டேல் 800 பைக் உதிரிபாகங்களாக தருவிக்கப்பட்டு, மஹாராஷ்டிர மாநிலம் அகமதுநகரில் உள்ள ஆலையில் அசெம்பிள் செய்து விற்பனை செய்யப்படும். அறிமுகம் செய்யப்பட்டு 15 ஆண்டுகளுக்கு பின்னர் வடிவமைப்பு மற்றும் எஞ்சினில் குறிப்பிடத்தக்க மாற்றங்களுடன் இந்த பைக் விற்பனைக்கு வந்துள்ளது.

 புதிய எம்வி அகுஸ்ட்டா புருட்டேல் 800 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்- விபரம்!

புதிய எம்வி அகுஸ்ட்டா புரூட்டேல் 800 பைக்கில் மூன்று சிலிண்டர்கள் கொண்ட 798சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 109 பிஎச்பி பவரையும், 83 என்எம் டார்க் திறனையும் வழங்கும். எம்வி அகுஸ்ட்டா புருட்டேல் 800 பைக் மணிக்கு 237 கிமீ வேகம் வரை தொடும் வல்லமை பொருந்தியது.

 புதிய எம்வி அகுஸ்ட்டா புருட்டேல் 800 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்- விபரம்!

இந்த புதிய பைக்கின் எஞ்சினுக்கு முன்று இன்ஜெக்டர்கள் மூலமாக எரிபொருள் செலுத்தப்படுகிறது. எனவே, இந்த பைக் செயல்திறனில் மிரட்டலாக இருக்கும் என்பது தெளிவாகிறது.

புதிய எம்வி அகுஸ்ட்டா புருட்டேல் 800 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்- விபரம்!

செயல்திறன் மிக்க இந்த பைக்கில் டார்க் கன்ட்ரோல் சிஸ்டம், டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் போன்றவையும் பைக்கை சறுக்குவதிலிருந்து தவிர்த்து பாதுகாப்பை உறுதி செய்யும்.

புதிய எம்வி அகுஸ்ட்டா புருட்டேல் 800 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்- விபரம்!

இந்த பைக்கில் ரைடு- பை- ஒயர் சிஸ்டம், மூன்று நிலைகளில் இயங்கும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஸ்லிப்பர் க்ளட்ச் உள்ளிட்ட வசதிகள் இருக்கின்றன.

புதிய எம்வி அகுஸ்ட்டா புருட்டேல் 800 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்- விபரம்!

புதிய எம்வி அகுஸ்ட்டா புருட்டேல் 800 பைக் நேக்கட் ஸ்டைலில் வடிவமைப்பை பெற்றிருக்கிறது. அலுமினியம் சப் ஃப்ரேம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. பின்புறத்தில் கால் வைப்பதற்கான ஃபுட் பெக்குகள் சற்றே மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய ஹெட்லைட் மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் இடம்பெற்றிருக்கிறது.

புதிய எம்வி அகுஸ்ட்டா புருட்டேல் 800 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்- விபரம்!

இந்த பைக்கின் முன்புறத்தில் மர்ஸோஸி 43மிமீ அப்சைடு டவுன் டெலிஸ்கோப்பிக் ஹைட்ராலிக் சஸ்பென்ஷன் அமைப்பும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

புதிய எம்வி அகுஸ்ட்டா புருட்டேல் 800 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்- விபரம்!

அதேபோன்று, முன்சக்கரத்தில் 4 பிஸ்டன் காலிபர்களுடன் இயங்கும் 320மிமீ விட்டமுடைய இரட்டை டிஸ்க் பிரேக் அமைப்பும், பின்புறத்தில் 2 பிஸ்டன் காலிபர்கள் கொண்ட 220மிமீ டிஸ்க் பிரேக் சிஸ்டமும் இருக்கிறது.

புதிய எம்வி அகுஸ்ட்டா புருட்டேல் 800 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்- விபரம்!

புதிய எம்வி அகுஸ்ட்டா புருட்டேல் 800 பைக் ரூ.15.59 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. டிரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்ரிப்பிள், கவாஸாகி இசட்900 உள்ளிட்ட மாடல்களுக்கு இந்தியாவில் போட்டியை கொடுக்கும். ஆனால், இந்த பைக்கின் விலை மேற்கண்ட போட்டியாளர்களைவிட ரூ.7 லட்சம் வரை அதிகம்.

புதிய எம்வி அகுஸ்ட்டா புருட்டேல் 800 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்- விபரம்!

800சிசி பைக் ரகத்தில் எம்வி அகுஸ்ட்டா புருட்டேல் பைக்கைவிட அதிக சக்திவாய்ந்த 111பிஎச்பி பவரை அளிக்க வல்ல டிரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் மற்றும் 123பிஎச்பி பவரை வழங்க வல்ல கவாஸாகி இசட்900 பைக் மாடல்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இந்த பைக்கிற்கு இதுவரை 9 பேர் இந்தியாவில் முன்பதிவு செய்துள்ளதாக எம்வி அகுஸ்ட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 19, 2017, 15:20 [IST]
English summary
MV Agusta Brutale 800 launched in India. The MV Agusta Brutale 800 is priced in India at Rs. 15.59 lakh. The Brutale 800 will be brought into India via the semi knocked down unit (SKD) route and assembled in Ahmednagar, Maharashtra.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+