இந்தியாவில் அடுத்தாண்டு வெளிவரும் அவென்ஜர் 220 பைக்... அடித்து கூறும் பஜாஜ்!
இந்தியாவில் அடுத்தாண்டு வெளிவரும் அவென்ஜர் 220 பைக்... அடித்து கூறும் பஜாஜ்!
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் விரைவில் புத்தம் புதிய அவென்ஜர் 220 மாடல் மோட்டார் சைக்கிளை வெளியிட உள்ளது.

2018ல் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படும் பஜாஜ் அவென்ஜர் பைக் ஸ்டிரீட் மற்றும் க்ரூஸ் என இரண்டு வேரியன்டுகளில் வெளியிடப்படுகிறது.

நமக்கு கிடைத்திருக்கும் தகவலின்படி, புதிய அவென்ஜர் பைக்கின் இரண்டு வேரியன்டுகளிலும் பல்வேறு காஸ்மெட்டிக் அப்கிரேடுகள் செய்யப்பட்டுள்ளன.

இருந்தாலும் பைக்குகளின் செயல்திறன் மற்றும் மெக்கானிக்கல் அம்சங்களிலும் எவ்வித மாற்றமும் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது விற்பனையில் இருக்கும் அவென்ஜர் பைக்குகளில் இடம்பெற்றிருக்கும் அதே எஞ்சின் அம்சங்கள் தான் புதிய மாடலுக்கும் வழங்கப்படவுள்ளன.
Recommended Video


சமீபத்தில் சுஸுகி நிறுவனம் புதிய இன்ட்ரூடர் 150 பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. அதற்கு போட்டியாகத்தான் தற்போது அவென்ஜர் 220 மாடல் களமிறங்குகிறது.

சந்தையில் உள்ள போட்டிகளை சமாளிக்க அவென்ஜர் 220 மாடல் இன்ட்ரூடருக்கு இணையாக திறன்பெற்ற அம்சங்களை கொண்டு இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

பஜாஜ் அவென்ஜர் 220 பைக் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், பெரிய விண்ட்ஸ்கிரீன், ஃபியூயல் டேன்க் டிஸ்ப்ளே, ஸ்ப்லிட் சீட் செட்டப் என அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களை கொண்டு இருக்கும்.

இதுதவிர சிங்கிள் சேனல் ஏபிஸ், இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் ஆகிய பாதுகாப்பு அம்சங்களும் பஜாஜ் அவென்ஜர் 220 பைக்கில் உள்ளது.


Click it and Unblock the Notifications