புதுப்பொலிவுடன் ஹீரோ பேஷன் மற்றும் சூப்பர் ஸ்பிளென்டர் பைக்குகள் அறிமுகம்!

ஹீரோ பேஷன் புரோ மற்றும் ஹீரோ சூப்பர் ஸ்பிளென்டர் பைக்குகளின் மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் கொண்ட புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

புதுப்பொலிவுடன் ஹீரோ பேஷன் மற்றும் சூப்பர் ஸ்பிளென்டர் பைக் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதுப்பொலிவுடன் ஹீரோ பேஷன் மற்றும் சூப்பர் ஸ்பிளென்டர் பைக்குகள் அறிமுகம்!

ஹீரோ நிறுவனத்தின் பிரபலமான பைக் மாடல்கள் பேஷன் மற்றும் ஸ்பிளென்டர். வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்தில், பேஷன் மற்றும் ஸ்பிளென்டர் பிராண்டுகளில் விற்பனையாகும் பேஷன் ப்ரோ, பேஷன் எக்ஸ் ப்ரோ மற்றும் சூப்பர் ஸ்பிளென்டர் பைக்குகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

2018 மாடலாக அறிமுகம் செய்யப்பட்ட இந்த பைக்குகளில் இருக்கும் கூடுதல் சிறப்புகளை இந்த செய்தியில் தொடர்ந்து படிக்கலாம்.

புதிய பேஷன் ப்ரோ

புதிய பேஷன் ப்ரோ

புதிய பேஷன் ப்ரோ பைக்கில் 110சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கில் டார்க் ஆன் டிமான்ட் என்ற தொழில்நுட்ப அம்சத்தை பெற்றிருக்கிறது. இதன் எஞ்சின் அதிகபட்சமாக 9.27 பிஎச்பி பவரையும், 9 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

புதுப்பொலிவுடன் ஹீரோ பேஷன் மற்றும் சூப்பர் ஸ்பிளென்டர் பைக்குகள் அறிமுகம்!

புதிய பேஷன் ப்ரோ பைக்கில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஐ3எஸ் என்ற ஸ்டார்ட் - ஸ்டாப் சிஸ்டம் சேர்க்கப்பட்டு இருக்கிறது. இதன்மூலமாக, இந்த பைக்கின் எரிபொருள் சிக்கனம் 12 சதவீதம் கூடுதலாக இருக்கும் என்று ஹீரோ தெரிவிக்கிறது. இந்த பைக் 0 -60 கிமீ வேகத்தை 7.45 வினாடிகளில் எட்டிவிடும்.

புதுப்பொலிவுடன் ஹீரோ பேஷன் மற்றும் சூப்பர் ஸ்பிளென்டர் பைக்குகள் அறிமுகம்!

புதிய பேஷன் ப்ரோ பைக்கில் டிஜிட்டல் மற்றும் அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆல் டைம் ஹெட்லைட், சைடு ஸ்டான்டு இண்டிகேட்டர் ஆகியவை இதர முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

புதிய பேஷன் எக்ஸ்-ப்ரோ

புதிய பேஷன் எக்ஸ்-ப்ரோ

புதிய பேஷன் ப்ரோ மாடல் நடுத்தர வயதினரை கவரும் அம்சங்களை பெற்றிருக்கும் நிலையில், ஹீரோ எக்ஸ்ப்ரோ பைக் இளைஞர்களை கவரும் டிசைன் அம்சங்களை பெற்றிருக்கிறது. இந்த பைக்கில் கவர்ச்சிகரமான பெட்ரோல் டேங்க் மற்றும் விசேஷ கவுல் அமைப்பு, இரட்டை வண்ண ரியர் வியூ மிரர்கள், எல்இடி டெயில் லைட்டுகள் உள்ளன.

Recommended Video

The Emflux Motors Model 1 – India’s First Electric Motorcycle
புதுப்பொலிவுடன் ஹீரோ பேஷன் மற்றும் சூப்பர் ஸ்பிளென்டர் பைக்குகள் அறிமுகம்!

இந்த பைக்கிலும் டிஜிட்டல்- அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஆல் டைம் ஹெட்லைட் இதன் முக்கிய அம்சமாக இருக்கிறது. பேஷன் ப்ரோ பைக்கில் உள்ள அதே 110சிசி எஞ்சின்தான் இந்த பைக்கிலும் உள்ளது. இந்த எஞ்சினும் டார்க் ஆன் டிமான்ட் சிஸ்டத்தை பெற்றிருக்கிறது.

புதுப்பொலிவுடன் ஹீரோ பேஷன் மற்றும் சூப்பர் ஸ்பிளென்டர் பைக்குகள் அறிமுகம்!

இந்த பைக் சிவப்பு- கருப்பு, கருப்பு- நீலம், கருப்பு- சாம்பல், கருப்பு- சில்வர் ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது. டிரம் பிரேக் மற்றும் டிஸ்க் பிரேக் ஆப்ஷன்களில் இந்த பைக் விற்பனைக்கு கிடைப்பதும் குறிப்பிடத்தக்கது.

புதிய சூப்பர் ஸ்பிளென்டர்

புதிய சூப்பர் ஸ்பிளென்டர்

ஸ்பிளென்டர் பிராண்டில் சக்திவாய்ந்த மாடலாகவும், நீடித்த உழைப்பை வழங்கும் மாடலாகவும் பெயர் பெற்றிருக்கிறது. அதிக எரிபொருள் சிக்கனம், சிறப்பான வடிவமைப்புடன் பட்ஜெட் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. இந்த நிலையில், புதிய வண்ணக் கலவை, மேம்படுத்தப்பட்ட எஞ்சின் போன்றவற்றுடன் புதுப்பொலிவு பெற்றிருக்கிறது.

புதுப்பொலிவுடன் ஹீரோ பேஷன் மற்றும் சூப்பர் ஸ்பிளென்டர் பைக்குகள் அறிமுகம்!

இந்த பைக்கில் இருக்கும் 125சிசி எஞ்சின் அதிகபட்சமாக 11.2பிஎச்பி பவரையும், 11 என்எம் டார்க் திறனையும் வழங்கும். பழைய மாடலைவிட இந்த எஞ்சின் 27 சதவீதம் கூடுதல் சக்தியை வெளிப்படுத்தும் திறனையும், 6 சதவீதம் கூடுதல் டார்க் திறனையும் வழங்கும் விதத்தில் மாற்றங்களை கண்டிருக்கிறது. இந்த பைக் மணிக்கு 94 கிமீ வேகம் வரை செல்லும் திறன் வாய்ந்தது.

புதுப்பொலிவுடன் ஹீரோ பேஷன் மற்றும் சூப்பர் ஸ்பிளென்டர் பைக்குகள் அறிமுகம்!

புதிய ஹீரோ சூப்பர் ஸ்பிளென்டர் பைக்கில் ஆல் டைம் ஹெட்லைட், சைடு ஸ்டான்டு இண்டிகேட்டர், இருக்கைக்கு கீழே பொருட்கள் வைப்பதற்கான ஸ்டோரேஜ் வசதி, க்ரோம் பூச்சு கொண்ட மஃப்ளர் அமைப்பு, கவர்ச்சியான கிராஃபிக்ஸ் டிசைன் போன்றவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

புதுப்பொலிவுடன் ஹீரோ பேஷன் மற்றும் சூப்பர் ஸ்பிளென்டர் பைக்குகள் அறிமுகம்!

இந்த புதிய ஹீரோ பைக் மாடல்களும், வரும் பிப்ரவரி மாதம் கிரேட்டர் நொய்டாவில் நடைபெற இருக்கும் சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending DriveSpark YouTube Videos

Subscribe To DriveSpark Tamil YouTube Channel - Click Here

More from DriveSpark

Article Published On: Thursday, December 21, 2017, 14:06 [IST]
English summary
World's largest two-wheeler manufacturer Hero MotoCorp has unveiled its three new commuter motorcycles: the 125cc Super Splendor, the 110cc Passion PRO and the 110cc Passion XPro.
மேலும்... #ஹீரோ
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+