பிஎஸ்-4 தரத்தில் மேம்படுத்தப்பட்ட புதிய ஹோண்டா சிபி ஹார்னெட் 160 ஆர் பைக் அறிமுகம்!

பிஎஸ்-4 தரத்தில் மேம்படுத்தப்பட்ட புதிய 2017 ஹார்னெட் 160ஆர் பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம். அது குறித்த தகவல்களை காணலாம்.

By Arun

ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம், பிஎஸ்-4 தரத்தில் மேம்படுத்தப்பட்ட புதிய 2017 ஹோண்டா சிபி ஹார்னெட் 160 ஆர் பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ஆட்டோமேடிக் ஹெட்லைட் மற்றும் பிஎஸ்-4 இஞ்சின் தரப்பட்டுள்ளது.

மேம்படுத்தப்பட்ட புதிய ஹோண்டா சிபி ஹார்னெட் 160 ஆர் பைக் அறிமுகம்

சிபி ஹார்னெட் 160ஆர் பைக் மிகவும் ஸ்டைலிஷாக, சிறப்பான ஸ்போர்ட்டி தோற்றத்துடன் மிகவும் நேர்த்தியான தோற்றத்தில் அமைந்துள்ள ஒரு பைக்காகும். இவை சிங்கில் மற்றும் இருபக்க டிஸ்க் பிரேக் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

மேம்படுத்தப்பட்ட புதிய ஹோண்டா சிபி ஹார்னெட் 160 ஆர் பைக் அறிமுகம்

குறிப்பிடத்தக்க அளவில் எந்த மாற்றங்களும் இல்லாமல் பிஎஸ்-4 இஞ்சின் மற்றும் ஆட்டோமேடிக் ஹெட்லைட் போன்ற மாற்றங்கள் மட்டுமே கொண்டு வெளிவந்துள்ளது மேம்படுத்தப்பட்ட ஹார்னெட் 160 ஆர் பைக். இருப்பினும் இதன் ஆற்றல் மற்றும் சிறிதளவு குறைக்கப்பட்டுள்ளது ஆச்சரியம் தருவதாக அமைந்துள்ளது.

மேம்படுத்தப்பட்ட புதிய ஹோண்டா சிபி ஹார்னெட் 160 ஆர் பைக் அறிமுகம்

மேம்படுத்தப்பட்ட புதிய 2017 ஹோண்டா ஹார்னெட் 160ஆர் பைக்கில் ஒற்றை சிலிண்டர் கொண்ட 162.71சிசி காற்றால் குளிர்விக்கப்படும் இஞ்சின் உள்ளது. இது அதிகபட்சமாக 15.04 பிஹச்பி ஆற்றலையும், 14.76 என்எம் டார்க்கையும் வழங்குகிறது. இதில் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உள்ளது.

மேம்படுத்தப்பட்ட புதிய ஹோண்டா சிபி ஹார்னெட் 160 ஆர் பைக் அறிமுகம்

புதிய 2017 ஹார்னெட் பைக் ஸ்டரைக்கிங் கிரீண், மார்ஸ் ஆரஞ்சு, அத்லெடிக் புளூ மெட்டாலிக் மற்றும் ஸ்போர்ட்ஸ் ரெட் என 4 வண்ணங்களில் கிடைக்கிறது.

மேம்படுத்தப்பட்ட புதிய ஹோண்டா சிபி ஹார்னெட் 160 ஆர் பைக் அறிமுகம்

டிஸ்க் பிரேக் அல்லாத வேரியண்டில் 276 மிமீ முன்புற பெட்டல் டிஸ்க் பிரேக் உள்ளது, பின்புறம் டிரம் பிரேக் தரப்பட்டுள்ளது. 220 மிமீ பின்பக்க டிஸ்க் பிரேக் ஆப்ஷனலாக கிடைக்கிறது. இந்த பைக்கில் ட்யூப்லஸ் டயர்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேம்படுத்தப்பட்ட புதிய ஹோண்டா சிபி ஹார்னெட் 160 ஆர் பைக் அறிமுகம்

ஸ்டேண்டர்ட் மற்றும் சிபிஎஸ் என இரண்டு வேரியண்டுகளில் இந்த பைக் கிடைக்கிறது. ஸ்டேண்டர்டு வேரியண்டின் எடை 138 கிலோவாகவும், சிபிஎஸ் வேரியண்ட் 140 கிலோ எடை கொண்டதாகவும் உள்ளது. இந்த மோட்டார்சைக்கிளில் 12 லிட்டர் அளவு கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது.

விலை விவரம்

விலை விவரம்

மேம்படுத்தப்பட்ட புதிய ஹோண்டா சிபி ஹார்னெட் 160 ஆர் பைக்கின் ஸ்டேண்டர்ட் வேரியண்ட் ரூ.81,113 என்ற விலையிலும், இருபக்க டிஸ்க் பிரேக் கொண்ட சிபிஎஸ் வேரியண்ட் ரூ.86,613 என்ற விலையிலும் கிடைக்கிறது.

ஸ்பெஷல் எடிசன் வேரியண்ட்கள் வண்ணத்தை பொருத்து ரூ.82,095 முதல் ரூ.86,595 என்ற விலையில் கிடைக்கிறது. (அனைத்து விலைகளும் டெல்லி எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் தரப்பட்டுள்ளது)

மேம்படுத்தப்பட்ட புதிய ஹோண்டா சிபி ஹார்னெட் 160 ஆர் பைக் அறிமுகம்

ஸ்டைல், மைலேஜ் மற்றும் பவர் என அனைத்தையும் ஒருங்கே பெற்ற ஹார்னெட் 160 ஆர் பைக் லிட்டருக்கு 60 கிமீ மைலேஜ் தருவதாக ஹோண்டா நிறுவனம் கூறுகிறது. அதிகபட்சமாக மணிக்கு 110 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது ஹார்னெட் 160 ஆர் பைக்.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 11, 2017, 8:45 [IST]
English summary
Read in Tamil about honda CB Hornet 160 R bike facelift launch in india. price, mileage, specs and more
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+